-சங்கர சுப்பிரமணியன்.
கரு என்று ஒன்று கிடைத்தால் போதும்
அதனை வைத்து வகை வகையாகவே
பலவற்றை படைப்பவரே படைப்பாளி
பத்தே பத்து வரிகளில் சொல்வதை
சொல்லி முடிப்பவரும் கவிஞர்தான்
கவிஞரல்ல என்று சொல்லமுடியுமா?
பத்து வரிகளுக்கு மேல் பக்கம்பக்கமாய்
ஒருவர் எழுதினால் அதுவும் கவிதைதான்
அதை எழுதிய அவரும் கவிஞரல்லவா?
பத்து வரி கவிதையில் சொல்ல வருவதை
சில பக்கங்களில் கட்டுரையாய் எழுதலாம்
பல பக்கம் எழுதினால் கட்டுரையாகாதா?
பல பக்கங்களில் கட்டுரையாய் வருவதை
ஒருபக்க கதை சிறு கதையாய் எழுதலாம்
ஒன்பதுபக்க பெருங்கதையாக மாற்றலாம்
பெருங்கதையில் சில திருப்பங்கள் செய்து
அதை சிறந்த நூலாக மாற்றம் செய்யலாம்
பலபாத்திரங்கள் பலதிருப்பங்களை செய்து
இன்னும் பல பாகங்களையும் படைக்கலாம்
நான்கு வரியில் ராமனின் கதை சொல்லலாம்
ஒருமணிநேர வலையொளியாகவும் கூறலாம்
மூன்றுமணி நேர திரைப்படமாக எடுக்கலாம்
மூன்று நான்கு பாகங்களாக தயாரிக்கலாம்
வீரபாகு செயல்களையும் கவிதையாக்கலாம்
வீராச்சமி பிறந்தநாளை கட்டுரையாக்கலாம்
வீரமுத்து வாழ்க்கையையும் கதையாக்கலாம்
காசுக்கு ஏற்பவே பொருள் என்பது போலவே
படைப்பாளி கற்பனைக்கேற்ப படைப்பாகும்
நல்ல பொருளென்றால் சந்தையில் விற்கும்
எல்லாமே இங்கு பொருள் என்பது உண்மை
சுவையினால் பொருட்கள் விற்பதுமுண்டு
விளம்பரத்தாலும் சுவையற்றது விற்பதுண்டு
விளம்பரமின்றி பொருட்கள் விற்பதில்லை
விற்காதவை சுவையற்றவை என்றுமில்லை
No comments:
Post a Comment