சுப்புவும் மதியும் சிறுவயதுமுதல் நல்ல நண்பர்கள். சுப்புவுக்குப் 19 வயதில் ஒரு மகளும் மதிக்குப் 10 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். இரு குடும்பங்களும் 2018ஆம் ஆண்டு தை மாதம் குடிபெயர்ந்து அவுஸ்திரேலியாவிலே தங்கள் தங்கள் குடும்பங்களுடன் வாழ்கிறார்கள். சுப்பு அவஸ்திரேலியா வந்த பின்பு அவருக்கு ஒரு மகள் பிறந்து வளர்ந்து கல்வி கற்று வருகிறாள். மதி தொழில் விடயமாக வெளிநாடு சென்று ஐந்து வருடங்களின் பின்பு 2024 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா திரும்பியிருந்தார். சுப்புவின் மூத்தமகள் ஒரு இளம் எழுத்தாளரைக் காதலிப்பதை அறிந்ததும் சுப்பு அவசரப்பட்டு மகளை அவனுக்கு நிச்சயார்த்தஞ் செய்துவைத்தார்.
சுப்புவின்ரை
நிச்சயார்த்தத்துக்குப் போக முடியவில்லை
என்ற கவலையுடன்
இருந்த மதிக்குச் சுப்புவின் தொலைபேசி அழைப்பு வந்தது
சல்லாபம்
தொடர்கிறது..
மதி :- நண்பனே
எனக்கு ஒரு கோபமும் இல்லை. உங்களின் அசிங்கமான கதையைக்; கேட்க இப்பதான் கோபம் வருகுது.
சுப்பு அண்ணா உங்களால்; நல்ல தமிழ் கதைக்க முடியாதா? நீங்கள் நல்ல தமிழ்தானே முன்பெல்லாம் கதைத்து வந்தீர்கள்?. நானே நீங்கள் கதைக்கும் தமிழைத் திருத்தி நல்ல தமிழ் கதைக்க வைப்பதற்கு
உங்களுடன் எவ்வளவு சிரமப்பட்டனான். மறந்துவிட்டீர்களா?. ஏன் இப்ப இப்படிக் கேவலமாகக் கதைக்கிறீர்கள்?.
சுப்பு :- என்ன நீ ------ ரோக்கிங் நொன்சென்ஸ்.-----என்ரை சின்னவள் டெய்யிலி ரோக் லைக் திஸ். என்னைப் போல ஸ்ரைலாய்க் கதைக்க யூ கான்ற். இப்பெல்லாம் இதுதான்டா பாஸன்.ஏன் மதி நீ இப்ப வாற ஸ்ரோறி புக்ஸ் றீட்பண்ண மாட்டாயா? வாசிக்க வாசிக்க எவ்வளவு திறிலிங்டா!
சுப்பு :- வாட் மதி! நீ ஓல்ட் பஞ்-----. என்ன என்னமோ சொலலிடு;வாங்க…
மதி :- பழைய
பஞ்சாங்கம் என்று சொல்லவா வந்தீர்?. என்ன சுப்பு அண்ணை. இப்படித் தமிழைக் கொலை பண்ணிக் கதைக்க எப்படி உங்களால்
முடியும்?
அது
கிடக்கட்டும்னை. இனியாச்சு நீ என்னைக் கண்டதும் “ஹாய்!சுப்ஸ்!” இப்படித்தான்
கூப்பிடு. எங்கடை சீனியர்ஸ்லை எனக்கு எவ்வளவு றெஸ்பெக்ற்! உனக்கு இதெல்லாம் புரியாது. நோ சான்ஸ்.
மதி :- அது சரி. மூத்த மகளின்ரை நிச்சயார்த்தம்; எப்படி நடந்தது?. யார் அந்த மாப்பிள்ளை?. நான் அறியலாமா?
மதி :- அவர் என்ன நாவல் ஆசிரியரா அல்லது சிறுகதை நவீன எழுத்தாளரா?.
சுப்பு :- அவர் சோட் ஸ்ரோறி றைற்ரர்.
இப்பவும் அவர்
பில்கிறிமேஜ் ஒவ் சுவீற்காட் ரு
கிறேவ்யாட் என்ற திறிலிங் ஸ்ரேறியை
எழுதிக் கலக்கிவிட்டார்.
சுப்பு :- என்னெண்டாப் பாரும்! அவரின்ரை முந்திய புனை பெயர் சதீஸ் என்று டோட்டர் சொன்னவள். அவனும் எங்கடை ஏரியாக்கிள்ளைதான் கிட்டடியிலை வந்தவன். இரண்டுபேரும் எங்கேயோ பார்ட்டியிலே சந்தித்தார்கள்.
அவளும் அவன்ரை
கதையில எடுபட்டுவிட்டாள். அவரும் அவளில வெறி மச் லைக் பண்ணினார். பிடிச்சுப்
போட்டுதுன்னு எத்தின தரம் முன்னும்
பின்னுமாகத் திரிந்தார். அவர் கல்யாணப் பேச்சை ஸ்ராட் பண்ணினார். நானும்
பாத்துவிட்டு அவரிட்டக் கதைச்சு நிச்சயம் பண்ணிட்டேனு. பிள்ளையை ஒருத்தன்ர கையில
புடிச்சுக் குடுத்திட்டன என்றதில என்ர மனசுக்கு நிம்மதியா ஈக்கு.
சுப்பு :- மதி மதி என்னடா அந்த ஆளுக்கு என்ன? சொல்லடா. அவன் ஒரு துரோகத்த செய்து போட்டுறவன்ண்… மாதிரித் தெரியலை. நீ என்னதை கண்டயளா அவனில . மகளொடை இதுவரை பிரச்சினகிரச்சினப்பட்டவங்களோ இல்லைடா
மதி :- சுப்பண்ணை ஏமாந்துவிட்டீர். நீர் எனது
இளமைக் கால நண்பர் என்ற முறையிலே அவனைப் பற்றிய பல உண்மைகளைச் சொல்லத்தான்வேண்டும்
.சொல்லுவேன் கேளும்.
ஆனால் உங்கள்
மகளின் வாழ்க்கையுடன் அல்லவா விளையாடிவிட்டீர்;. சீரழிய விடலாமா?. வெளிப் பகட்டிலே
மகளும் நீங்களும் மயங்கிவிட்டீர்கள். சதீஸ் என்றவனைப் பற்றி நல்லாய்க் கேள்விப்பட்டனான். உங்களை அவன் தனது
கதையால் ஏமாற்றிவிட்டான். மகளும் அவன்ரை இங்கிலஸ் கலந்த தமாஸ் கதையில்
மயங்கிவிட்டாள் எனத் தெரிகிறது. அவன் ஒரு பெரிய கேடி. உங்களுக்கு இப்படி ஒரு கேடு கெட்ட மாப்பிள்ளை தேவைதானா?. வேறு இடங்களிலும் அவன் பெரும் மோசடி செய்து ஏமாற்றி பணம் நகை என்று
கொள்ளையடித்தவன். தமிழ்ப் பிள்ளைகள் சிலரிடம் செருப்படியும் வாங்கினவன். ஏன் நீங்கள் அவனைப்பற்றி நன்றாக விசாரிக்கவில்;லையா?
அவன்ரை முன்னைய புனைப் பெயரைச் சொல்லிக் கேட்டாலே
எல்லாரும் சொல்வார்களே! என்ன ஐயா? இப்ப என்ன செய்ய உத்தேசம்?
அவன்
உங்களிடம் அவசர தேவை உடனடியாகக் காசு தேவை
என்று கேட்டிருப்பானே!
தலை தப்பியது
தம்பிரான் புண்ணியம். அடடா இன்றைக்கு அவன் என்ரை மகளைக் கூட்டிக்கொண்டு; படத்துக்குப்
பேவதாகச் சொன்னவன். இப்ப நான் உடனே அதை நிற்;பாட்ட வேணும். அவனையும் அடித்துத் துரத்தவேணும். எனக்கு நல்ல பாடம் தம்பி. எனது ஆங்கில மோகத்தை சாகடிச்சு விட்டாய்;. கோடி புண்ணியம் தம்பி! தாய் மொழித் தமிழை இனிமேல் மாசு படுத்திப் பேச மாட்டேன். சரி; தம்பி நான் உடனே போகவேண்டும். பிறகு சந்திக்கிறேன்.
மதி :- மின்னுவது எல்லாம் பொன்னல்ல. என்ன அண்ணை இதை மறக்கலாமா? இந்த நிமிடமே உங்கடை ஆங்கில மோகம் எங்கோ ஓடிப்போயிருக்குமே!. தமிழ் படித்த ஆசிரியர் ஒருவரை உங்களின் மகளுக்குத் திருமணம் செய்யக் கேட்டுவந்தவர்களை மதிக்காது நீங்கள் திருப்பி அனுப்னீர்களே! ஞாபகம் இருக்கிறதா?
அந்தத் தமிழ்
ஆசிரியர் இன்றைக்கு ஒரு உதாரண ஆசிரியராக எல்லோராலும் புகழ்ந்து பேசப் படுகிறார்
தெரியுமோ? அவருக்கு அருமையான குடும்பம் அமைந்து சிறப்பாக வாழ்கிறார். உங்களின் மகள்
கொடுத்துவைக்கவில்லை.
‚மதி :- சரி அண்ணை. கேட்க நன்றாக இருக்கிறதே சுப்பு! சரி. இனிமேல் கேவலமாய் ஆங்கிலம் கலந்து பேசுவதை நிறுத்திவிடுங்கள். அத்துடன் நீங்கள் என்னுடன் ஆரம்ப காலத்திலே ஊரிலே பேசும் கொச்சைத் தமிழைக் கதைத்து வந்தீர்கள். நான் எத்தனை நாள்களாகத் திருத்தித் திருத்தி நல்ல தமிழ் கதைக்க வைத்தேன். போட்டிகளிலும் நன்றாயக்; கதைக்க வைத்தேன். மறந்துவிட்டீரா? ஊரிலேயும் இப்பொழுதெல்லாம் கொச்சைத் தமிழ் மறைந்து வருகிறது. நீங்கள் என்னவென்றால் அசிங்கமான கொச்சைத் தமிழை அதுவும் ஊர்ப்பாணியை மறக்காது மறுபடி பொது இடங்களிலும் கதைக்கத் தொடங்கிவிட்டீர்கள். பொது இடங்களிலே நல்ல தமிழ் மட்டுமே கதையுங்கள். உங்களாலே முடியும்….
---------------------------------------------------------------------------------------------------------------------------------
மதி கவலைமிக்க யோசனையுடன் வீட்டை நோக்கி நடக்கலானான்;. அவனிடம் நிம்மதி இல்லை. தான் வெளிநாடு சென்று 5 வருடங்களில் திரும்பி வருவதற்கிடையிலே எவ்வளவோ மாற்றங்கள்
நடந்திருக்கிறதே! நல்ல தமிழ் கதைத்துவந்த சுப்பு இப்பொழுது இங்கிலிஸ் கலந்த கொடுந்தமிழ்
கதைக்கத் தொடங்கிவிட்டாரே! அவர் தனது பிள்ளைகள் ஆங்கிலம் கலந்து சரளமாகக் கதைப்பதை நினைத்துப்
பெருமையும் கொள்கிறார். என்ன கொடுமை! செந்தமிழ் கதைத்துவந்த சுப்பு இன்று கையாளும் கொடுந்தமிழ்ப் ( ஊர்ப் பாணி
) பாணியை நினைக்க எவ்வளவு அருவருப்பாக இருக்கிறதே! புதிய இலக்கியப் படைப்பாளிகள்; என்று ஆங்கிலத்தைத் தமிழுடன் கலந்து எழுதிக் கொடுந்தமிழ் வளர்க்கிறார்களே! இவர்கள் தேனொடு சிறுநீரைக் கலந்து
அருந்துபவர்களா?
இனிமையும் இளமையும் கொண்டிலங்கும் திருநெறிய
தெய்வச் செந்தமிழுடன் வேற்று மொழியினைக் கலந்து கதைகளையும் கவிதைகளையும்
கட்டுரைகளையும் எழுதி தமிழை வித்துப் பிழைக்க இவர்களுக்கு எவ்வாறு மனம் வந்தது? தமிழ் உணர்வு சற்றும் இல்லாத இவர்கள் தமிழர் என்று தம்மைக் கூறலாமா? இப்படிக் கலப்புத் தமிழ் எழுதும் இவர்களின் கேவலமான படைப்புகளை அரங்கேற்றி
மகிழ ஒரு சில அடிவருடிகள் துணைபோகின்ற துர்ப்பாக்கிய நிலையை என்சொல்வது? இந்த நிலை என்றுதான் மாறும்? எப்படியும்
ஆங்கிலம் கலந்து கதைப்பது போலிக் கௌரவம் என்பதைச்; சுப்பு அண்ணைக்கு உணரவைக்க
முடிந்ததே என்ற மன நிம்மதி ஒரு புறம்! பிறமொழிக் கலப்புடன் எழுதுவோர் தொகை
அதிகரித்துக்கொண்டு போகுமானால் இவர்களின் பில்கிறிமேஜ் ஒவ்; டமில் ரு தி கிறேவ்யாட் சாத்தியமாகுமா? என்ற நினைப்பு மறுபுறம் ….. மதியைப் பெரிதும் கவலைக்குள்ளாக்கியது!
யாவும் கற்பனை
மேலே நேயர்கள் வாசித்த சல்லாபக் காட்சியை எழுதிய
நோக்கம் -- எனது கருத்து :-
நான்
தனித் தமிழை வளர்த்துவந்த புலவர்களின் வழித்தோன்றல். தமிழுடன் பிறமொழிக் கலப்பை
அறவே ஒழிக்கவேண்டுமென்ற நிலைப் பாட்டுடன்
(எனது தந்தையார் புலவர்மணி இளமுருகனாரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி) கொள்கை
மாறாது இருந்துவருகிறேன்.
“கனவிலும் பிறமொழிக் கலப்பை நினைக்காத பாரதி இப்படி ஏன் சல்லாபக் காட்சியை ஒன்றை எழுதினார் என்று குழம்பாதீர்கள்”. ஒருவர் நல்ல
சுத்தமான தமிழைப் பேசுபவராகவும் மற்றவர் கேவலமான ஆங்கிலக் கலப்புடன்
கொச்சைத் தமிழ் பேசுபவராகவும் உருவகப்படுத்தி மேலே தரப்பெற்ற
காட்சியை வேண்டுமென்றே எழுதினேன்.
இதனால் ஆங்கிலக் கலப்புடன் ஊர்க்கொச்சைப் பேச்சும் கலந்து எழுதப்படும் ஆங்கங்கள்
வாசிக்கும்பொழுது எவ்வளவு கேவலமாகவும் அருவருப்பாகவும் வாசிக்கக் கடினமாகவும் இருக்கும் என்பதைப்
புலப்படுத்தவே இப்படி எழுதவேண்டி வந்தது. இப்படி ஊர்க் கொச்சைப் பேச்சுகளைப் பிரபலப்படுத்தியும்
ஆங்கிலச் சொற்களைத் தமிழுடன் கலந்தும் எழுதுவால் ஒருவருக்கும் ஒருவித பயனும் இல்லை
அல்லவா?. வாசிப்பதற்கு எவ்வளவு சிரமம்.
இங்கு வளரும் தமிழ்க் குழந்தைகள்; இப்படிப்பட்ட ஆக்கங்களை வாசிப்பது தமிழைத் தவறாக
எழுதுவதற்கும் கதைப்பதற்கும் வழிவகுக்கும்
அல்லவா?.
அவுஸ்திரேலியாவிலுள்ள
தமிழ்ப் பள்ளிகளிலே
நல்ல
தமிழைக் கற்பித்துவரும் ஆசிரியர்களைப் போற்றவேண்டும். தமது பொன்னான நேரத்தைத்
தூயதமிழ் கற்பிக்கத் தியாகம் செய்யும் அவர்களை வாழ்த்துகிறேன். தமிழை வளர்ப்பதற்கு
மிகுந்த ஆவலுடன் சேவைசெய்யும் இவர்களே ஆங்கிலக் கலப்புடன் வெளிவரும் கீழ்த்தரமான
ஆக்கங்களைப் படிக்கக் கூடாது என்று பிள்ளைகளுக்கு அறிவுறுத்த முடியும். இது
இவர்களின் கடமையும் ஆகின்றது.
ஆசிரியர்களாலும்
அவர்களிடம் தூய தமிழைப் பயிலும் மாணவச் செல்வங்களாலுமேதான் தமிழை அடுத்த
சந்ததிக்கு எடுத்துச்செல்ல முடியும். இது மறுக்க முடியாத உண்மை. தாய்மொழியிலேயே
பிள்ளைகள் சிந்தித்துச் செயலாற்றுவதே
சிறந்த பெறுபேறுகளைத் தரும் என்ற விஞ்ஞான பூர்வமான உண்மையைத் பெற்றோர்; உள்வாங்குவதுடன் அதன் அவசியத்தைத் தம் பிள்ளைகளுக்கும்
அறிவுறுத்தி அவர்களைத் தாய் மொழியைப் படிக்கவைக்க முயலவேண்டும். இந்தக் சல்லாபக்
காட்சியிலே சுட்டிக் காட்டியதைப் போல ஆங்கிலமொழியுடன் கலந்து பேசுவதுதான் நாகரிகமானது எனச்
சிலர் பிழையான எண்ணத்தைக் கொண்டிருக்கின்றனர். இப்படிப் பேசுபவர்களைத் திருத்தப்
பெற்றோரும் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களும் முக்கிய பங்கெடுக்கவேண்டும்.
நவீன
படைப்பிலக்கியப் பிரமாக்களின் ஆங்கிலக் கலப்புடன் வெளிவரும் படைப்புகளெல்லாம்
மழைக்கு முளைக்கும் காளான்கள்போல விரைவிலே மறைந்துவிடும். அதனாலேதான் தமிழ்
உணர்வுமிக்க ஆர்வலர்களும் ஆங்கிலக் கலப்பைப்பற்றி ஒருவித எதிர்ப்பையும்
தெரிவிக்காது வாளாவிருக்கிறார்கள் என நினைக்கிறேன்.
கலாநிதி பாரதி இளமுருகனார்
( வாழ்நாள் சாதனையாளர்)
No comments:
Post a Comment