கண் தானம் -நாட்டியகலாநிதி கார்த்திகா கணேசர்

 .

சில தினங்களுக்கு முன் நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன்.

மூட நம்பிகைகளை ஒழிக்க ஓயாது உழைத்த  ஏப்ரகாம் கோவூர் பற்றி பேச்சு

வந்தது. அப்பொளுது அவர் கூறினார் கோவூர் அவர்களின் மனைவி காலமானபோது, மரண செய்தியிலே அவரது உடல் இலங்கை வைத்திய நிலையத்திற்கு வழங்படும் என அறிவிப்பதற்கு

,இலங்கை வான்ஒலி,அவ்வாறு உடல் வைத்திய நிலையத்திற்கு வழங்கப்படும்என ஒலிபரப்ப மறுக்கப்பட்டதாம். காரணம் இலங்கை பவுத்த நாடு இங்கு அவ்வாறு ஒலிபரப்ப கூடாது, அடக்கம் பண்ணப்படும் அல்லது தகனம்

பண்ணப்படும் என மட்டுமே கூறலாம் என ஒலிபரப்புக்கு பொறுப்பான உயரிடம் மறுத்ததாம். ஆனால் பவுத்த மதபோதனையோ  இலங்கை பவு த்தர்களை இறந்த பின் அவர்கள் கண்களை தானமாக வளங்க ஊக்கம் அளிக்கிறது.

உலகிலே யே அதிகமான கண்களை தானமாக வளங்கும் நாடு இலங்கையே . நான் சென்னையில் எனது கணவரின்  கண்வைத்தியத்திற்காக,பிரபலமான கண் வைத்திய நிலையத்திய, “ நேத்திரலயா” போனபோது  வாசித்த“நே த்திராலயாவின் “ சஞ்சிகையில் தமக்கு வரும் கண்தானங்கள் அதிகப்படியினவை இலங்கையில் இருந்தே வருவதாக எழுதப்பட்டிருந்தது

எனக்கு  வியப்பாக இருந்தது, காரணம் இந்திய பெ ருங்கண்டத்தில் கிடை யாதஅளவிற்கு அதன் கீழே குண்டுமணி போலே  சிறிதாக இருக்கும் எம் நாடுவழங்கியதா? பெருமை ப்பட்டே ன்.


ஒஸ்ரேலியா வந்தபோது இங்கும் இலங்கையில் இருந்தே அதிக

கண்கள் தானமாக பெறப்படுவதாக மாற்று அறுவை சிகிச்சை வைத்தியர்

மூலம் அறிந்தபோது மேலும் வியப்பு ஏற்பட்டது. பின்தான் இலங்கையில்

இருந்து மட்டுமே அதிகப்படியான கண்கள் வருவதற்கான காரணம் அறிய

முடிந்தது.? இலங்கையில் கைக்கொள்ளப்படுவது “தேராவாத பவுத்தம் “

இவர்களுக்கு மறு பிறப்பு என்ற ஒன்று கிடையா, இவ்வுலகில் வாழ்வாங்கு

வாழ்ந்து மறைவதே வாழ்வு.

பெளத்த மதத்தை போதிக்கும் பிக்ஷூக்கள், இதையே கிராம மக்களிடம் போ திக்கிறார்கள். இத்தகைய சிந்தனையால், கண்களை இவர்கள் தானமாகவளங்கினால் இவர்கள் வாழும் காலத்தின் பின்னும்,இவர்கள் கண்கள் வாழ முடியும், என்ற கருத்தை மக்களிடம் பரப்பும் படி Dr ஹட்சன் டீ சில்வா பிக்ஷூகளிடம் வேண்டு கோள் விடுத்தார்.அதன் பலனே இன்றுவரை இலங்கையே உலகளாவிய ரீதியில் கண் தானத்தில் முன்னிக்கிறது.

இவ்வாறாக நாம் பேசிக் கொ\ண்டிருக்கும் போது எனது நண்பர் கூறினார் தனக்கு சர்கரை நோய் இருப்பதால் தான் உடலின் எந்த உறுப்பையுமே தானமாக வழங்க முடியதயாது  என. ஆனால் மேலும் ஆராய்ந்ததில் நான் அறிந்து கொண்டது எமது கண்ணின் மணி பாதிக்கப்பட்டால் தவிர எந்த நோ யாளர்களும் கண்களை தானமாக வளங்கலாம். இதற்கு உடலின் சர்கரை நோயோ , அல்லது இரத்த அழுத்தமோ ,விலக்கல்ல, இந்த நோயாளர் தாராளமாக கண்தானம் வழங்கலாம். மனிதன் இறந்து ஆறில் இருந்து ஏட்டு மணி நேரத்திற்குள் கண் மணி ஏடுக்கப்பட்டால் அந்த கண் பிறிதொரு மனிதர் பார்வவை யுடன் சிறபா்பான வாழ்வு வாள உதவும். இதற்கு மேலும் மனித வாழ்வில் நாம்செய்ய கூடிய உயர்ந்த தானம் ஊண்டா?

எனது மாணவியும் பிரபல நாடக கலைஞருமான் ஆனந்தராணிபாலேந்திரா, அண்மை யிலே எனது நூல்லான “இந்துமதத்தின் பரிணாம சிந்ததனை களை ” “நூலகம் ஓரக்” இற்காக ஒலி வடிவம் செய்தார், இதுதவிர பேராசிரியர்கள் கை லாசபதி, சிவத்தம்பி,வேலுப்பிள்ளை , போன்றோரின் நூல்களும் இவரால் ஒலி வடிவாக்கப்பட்டது. அவரிடம் நான் வினவிய போது அவர் கூறியது, தற்போது எமது தாயகத்திலே பல பார்வையற்ற மாணவராகள் பட்டப் படிப்பை மேற்கொள்கிறார்கள் அவர்களால் உசா துணை நூல்களை வாசிக்க முடியாது.அதற்காகவே , இந்த நூல்கள் ஒலி வடிவாக்கம் பெற தான் உதவுவதாக கூறினார். இவ்வாறாக எமது சொந்த பூமியிலேயே போரின் அனர்தங்களால் கண் பார்வை அற்ற இளவல்கள் வாழ்கிறார்கள். ஏம்மில் பலர் எம் வாழ்வின் பின் எமது பார்வை யை அவர்களுக்கு தானமாக வழங்கலாம்.

இக்கருத்தை கூறி நாமே கண்களை வழங்கத் தயார் என்றால், எமது தொண்டுநிறுவனங்கள் இதை அழகாக நடைமுறை படுத்துவார்கள்.எம் உறவுகளுக்கு பல்வே று வகை களிலும் உதவி அவர்கள் வாழ்வை உயர்த்த முயலும் நாம், எம் வாழ்வின் பின் கண்ணை தானனமாக வழங்க முன்வர மாட்டோமா?


No comments: