ஒன்றுபடுவதன் முக்கியத்துவம்

 June 28, 2024


இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சு. ஜெய்சங்கர் அண்மையில், தமிழ் கட்சிகளின் தலைவர்களை சந்தித்திருந்தார். இதன்போது, தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழ் கட்சி களின் தலைவர் ஒருவர் குறிப்பிட்டபோது, ஏனையவர்கள் அதற்கு தெளிவான பதிலை வழங்காதபோது ஜெய்சங்கர் ஒரு கேள்வியைக் கேட்டிருக்கின்றார் – அதாவது, ‘நீங்கள் அனை வரும் அந்த விடயத்தில் உண்மையான ஈடுபாட்டோடு இருக்கின்றீர்களா?’, ஒரு வெளிநாட்டு அமைச்சர் நமது கட்சிகளின் தலைவர்களைப் பார்த்து இவ்வாறு கேட்கின்றார் என்றால் – அதன் பொருள் என்ன? அந்தளவுக்குத்தான் நமது கட்சிகள் பற்றி இந்தியா புரிந்து வைத்திருக்கின்றது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தமிழ் பாராளு மன்ற உறுப்பினர்களை சந்தித்தபோது இவ்வாறான தொனியில்தான் பேசியிருந்தார். தமிழ் பொது வேட்பாளர் விவகாரம் பேசப்பட்ட காலத்திலிருந்து இது சாத்தியமா என்னும் கேள்வியும் கூடவே நடைபோடுகின்றது. கொழும்பிலுள்ள தூதரகங்கள் அனைத்திடமும் இவ்வாறான கேள்விதான் இருக்கின்றது, புருவங்களை உயர்த்தி – நீங்கள் தமிழ் பொது வேட்பாளரை போடப் போகின்றீர்களா என்றே கேட்கின்றனர். ஈழத்தமிழர்களால் ஒருபோதுமே ஒற்றுமைப்பட முடியாதென்று எண்ணுபவர்கள்தான் இந்தக் கேள்வியைக் கேட்கின்றனர்.

தமிழ் மக்களின் நலனை விடவும் தங்களின் சொந்தக் கதிரைகள்தான் முக்கியமென்று எண்ணுவதை அவர்கள் நன்கு புரிந்து வைத்திருப்பதுதான் – அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டுமென்னும் குரல்கள் நீண்டகாலமாக ஒலிக்கின்றன. ஆனால், நமது கட்சிகளால் ஒன்றுபட முடியவில்லை – ஒன்றுபட்டு ஒரு விடயத்தை முன்னெடுக்க முடியவில்லை. தமிழ் பொது வேட்பளார் விடயம் – அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றுபட்டு ஓரணியாக செயல்பட்டால் நிச்சயம் முடியும்.

ஆனாலும், முடியாது என்னும் பதில் அரசியல் கட்சிகளிடமிருந்து வருகின்றதென்றால் பிரச்னை வேறு. அதாவது, தமிழ் கட்சிகள் ஒற்றுமையுடன் ஒரு விடயத்தை முன்னெடுக்கும் வல்லமையுடன் இல்லை – அதனை தமிழ் கட்சிகளில் சிலர் விரும்பவில்லை. அவர்கள் தொடர்ந்தும் தமிழினம் சிதறுண்டு போக வேண்டுமென்றே எண்ணுகின்றனர். தமிழ் பொது வேட்பளார் என்பது தமிழ் கட்சிகளின் ஒற்று மைதான் – வேறு ஒன்றுமில்லை.

யுத்தத்துக்கு பின்னரான காலப்பகுதியில் தொடர்ந்தும் தமிழ் தலைமைகள் பவீனமடைந்து செல்கின்றன. தமிழ் மக்கள் சிதறுண்டு போகின்றனர். இவ் வாறானதொரு நிலையில், தமிழ்த் தேசிய அடிப்படையில் மக்களை ஓரிடத்துக்குக் கொண்டுவர வேண்டியிருக்கின்றது.

அதற்கு கட்சிகள் மத்தியில் தமிழ்த் தேசிய ஐக்கியம் ஏற்பட வேண்டும். ஏனெனில், கட்சிகளால்தான் தமிழ் மக்கள் சிதறியிருக் கின்றனர். 2010இல் அவர்கள் சிதறவில்லை – 2016இல் சிதறவில்லை. ஆனால், 2020இல் கூட்டமைப்பு பெரும் பின்ன டைவை சந்தித்தது. அதன்பொருள் மக்கள் கூட்டமைப்பிலிருந்து விலகிச் சென்றனர் – செல்லப் போகின்றனர். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு – என்பதுபோல் ஐக்கியபட்டால் அனைவரையும் தமிழர் பக்கம் திருப்பலாம்.   நன்றி ஈழநாடு 

No comments: