பிரிக்கப்படாத இலங்கைக்குள் தமிழருக்கு சம உரிமை கோரியவர்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் காலமானார்.
சிரேஷ்ட அரசியல்வாதியான இராஜவரோதயம் சம்பந்தன் (1933 பெப்ரவரி 05) தனது 91ஆவது வயதில் காலமானார்.
முதுமை காரணமாக நோயுற்றிருந்த அவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (30) பின்னிரவு வேளையில் காலமானார்.
சட்டத்தரணியான அவர், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராவார்.
இவர் 2015 முதல் 2018 வரை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்டிருந்தார்.
சுமார் அரை நூற்றாண்டு காலமாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஆர். சம்பந்தன் சபையில் துணிச்சலாகவும் தொடர்ச்சியாகவும் குரல் கொடுத்து வந்தார்.
2009 இல் உள்நாட்டுப் போர் முடிவடைந்ததில் இருந்து, ‘ஒன்றிணைந்த, பிரிக்கப்படாத, பிரிக்க முடியாத’ நாட்டிற்குள், தமிழர்களுக்கு சம உரிமைகளை அவர் அயராது கோரினார்.
இலங்கையின் அரசியலமைப்பு வரலாறு மற்றும் தென்னிலங்கை சிங்கள கட்சிகள், அமைப்புகள் கடந்த காலத்தில் வழங்கிய ஆனால் நிறைவேற்றத் தவறிய பல வாக்குறுதிகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்வை எட்டுவதற்கான வாதங்களை அவர் அடிப்படையாக முன்வைத்து வந்தார். நன்றி தினகரன்
No comments:
Post a Comment