கனடா வென்மேரி அறக்கட்டளையின் மூன்றாவது சர்வதேச விருது வழங்கும் விழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி கனடாவில் நடைபெறவுள்ளது.
தமிழ் இனத்திற்கும் மொழிக்கும் அரும்பணி ஆற்றிய ஆளுமைகளை இனங்கண்டு அவர்களுக்கு மதிப்பளித்து, பாராட்டி, கெளரவித்து ஏனையோர்க்கு முன்மாதிரியாகத் திகழும் அவர்களை மண்ணின் மாமணிகளாக வரலாற்றில் பதிவு செய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதே வென்மேரி அறக்கட்டளை.
மேற்படி அறக்கட்டளையின் முதலாவது விருது வழங்கும் விழா கடந்த ஆண்டு யாழ் . நீராவியடியில் உள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் அறக்கட்டளையின் தலைவர் வென்சிலாஸ் அனுரா தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் ஆறாம் திகதி 2023ம் ஆண்டுக்கான இரண்டாவது சர்வதேச விருது வழங்கும் விழா பிரான்ஸில் நாட்டில் நடைபெற்றது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பதினொராம் திகதி 2024ம் ஆண்டுக்கான மூன்றாவது சர்வதேச விருது வழங்கும் விழா கனடாவில் பிற்பகல் 2.௦௦ மணிக்கு Audley Recreation center Ajax என்னும் இடத்தில் நடைபெற உள்ளது.
இவ் அறக்கட்டளையின் நிர்வாக குழுவினரால் தெரிவு செய்யப்பட்ட 19 விருது வழங்கி மாண்பேற்றம் செய்ய இருக்கின்றார்கள்.
பேராசிரியர் ஆ.சதாசிவம் ஞாபகார்த்த விருது பேராசிரியர் நாகராஜ ஐயர் சுப்பிரமணியன் (கனடா), கவிஞர் நீலாவணன் ஞாபகார்த்த விருது பண்டிதர் ச.வே பஞ்சாட்சரம் (கனடா), தமிழ் தென்றல் தனிநாயகம் அடிகளார் ஞாபகார்த்த விருது பேராசிரியர், வண.பிதா அமுது ஜோசப் சந்திரகாந்தன் (கனடா), கலாபவணம் ஏரம்பு சுப்பையா ஞாபகார்த்த விருது நாட்டிய ஆச்சாரிய மணி சாந்தா பொன்னுத்துரை (கனடா), இசைப்புலவர் தா.சண்முகரத்தினம் ஞாபகார்த்த விருது இசைக் கலைஞர் பொன் சுந்தரலிங்கம் (கனடா), மாமனிதர் பேராசிரியர் இயற்பியலாளர்; சி.ஜே எலியேசர் ஞாபகார்த்த விருது மூத்த மருத்துவ இயற்பியலாளர், மூத்த விஞ்ஞானி, கலாநிதி சரசாநந்தராஜா சிவானந்தன் (அவுஸ்திரேலியா)
பெண்ணோயியல் வைத்திய நிபுணர் சிவா சின்னத்தம்பி ஞாபகார்த்த விருது கதிரியக்கவியல் பேராசிரியர் மருத்துவர் குமரேசன் சந்திரசேகரன் (அமெரிக்கா), எழுத்தாளர் க. சி குலரெத்தினம் ஞாபகார்த்த விருது உரையாளர், எழுத்தாளர் சிந்தனைப்பூக்கள் பத்மநாதன் (கனடா),
முன்னாள் இலங்கை தேசிய உதைபந்தாட்ட வீரர் எஸ். என். ஜே. அந்தோனிப்பிள்ளை ஞாபகார்த்த விருது வீராங்கனை ஸ்ரீசயனந்தபவன் அகிலத்திருநாயகி (இலங்கை), மாமனிதர் பேராசிரியர் அழகையா துரைராஜா ஞாபகார்த்த விருது மூத்த விஞ்ஞானி பேராசிரியர் கலாநிதி நடேஸ் பழனியர் (கனடா), தமிழ் பதிப்புத்துறையின் முன்னோடி சி. வை. தாமோதரம்பிள்ளை ஞாபகார்த்த விருது எழுத்தாளர் கந்தையா சண்முகலிங்கம் (கனடா), மூத்த ஒலிபரப்பாளர் சோ. சிவபாதசுந்தரம் ஞாபகார்த்த விருது மூத்த ஊடகவியலாளர், ஒலிபரப்பாளர் வி.என் மதிஅழகன் (கனடா), நாடகக் காவலர் கலையரசு சொர்ணலிங்கம் ஞாபகார்த்த விருது நாடக நேசர் மனுவேல்பிள்ளை அரியநாயகம் (பிரான்ஸ்)
இலங்கையர்கோன் த. சிவஞானசுந்தரம் ஞாபகார்த்த விருது எழுத்தாளர் விஸ்வலிங்கம் ஜீவகுமாரன் (டென்மார்க்), ஈழத்துப் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஞாபகார்த்த விருது எழுத்தாளர் முருகேசு நற்குணதயாளன் (பிரித்தானியா) சமூகசேவையாளர் மில்க்வைற் கந்தையா கனகராஜா ஞாபகார்த்த விருது மனிதநேயப்பண்பாளர் செல்லராஜா முரளிதரன் (அவுஸ்திரேலியா) எழுத்தாளர் ஏ. எம். ஏ. அஸீஸ் ஞாபகார்த்த விருது மொழிப்பெயர்ப்பாளர் பீர் முஹம்மது முஹம்மது இர்பான் (தாய்லாந்து) மூத்த திரைப்பட கலைஞர் ஏ. ரகுநாதன்; ஞாபகார்த்த விருது திரைப்பட இயக்குனர் சிபோ சிவகுமாரன் (ஜேர்மனி) ஆகியோருக்கு வழங்கி கெளரவிக்கப்படவுள்ளனர்.
விழிப்புலனற்றோர் நல் வாழ்வு சேவைக்காக செயற்படும் வாழ்வகம் நிறுவனத்திற்கு சமூக ஆர்வலர் சீமாட்டி லீலாவதி இராமநாதன் ஞாபகார்த்த விருது வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment