பொய்மான் 🦌 மெய்மை தேடும் ஒரு பயணம் 🏡 திரை அனுபவம் 🎬கானா பிரபா


 ஈழத்தில் இருந்து படகு வழி ஏதிலிகளாக நம் உறவுகள்
அவுஸ்திரேலியாவை எட்டும் செய்திகள் ஊடகப் பரப்பிலும், அரசியல் அரங்கிலும் பரபரப்பாகப் பேசப்பட்ட நேரமது. 

நமது அலுவலகத்தின் மதிய உணவு நேரத்தில் எழும் அரட்டையிலும் பேசு பொருளாக அமர்ந்து கொண்டது.

“உங்கள் ஆட்கள் படகில் வருகிறார்களே” 

என்ற எள்ளலோடு எனக்கு முன்னால் இருந்த 
ஆசியப் பின்புலம் கொண்ட மேலதிகாரி தொடங்கவும், 

நான் சிரித்து விட்டு 

“ஆமாம் நானும் நீங்களும் பறந்து வந்தோம்”
 
என்று சொன்னதோடு அந்த உரையாடலும் 
அன்றோடு முற்றுப்புள்ளி கண்டது.

“பொய் மான்” திரைப்படத்தைப் பார்க்கத் தொடங்கிய போது இந்தச் சம்பவத்தை அது நினைப்பூட்டிய சில நிமிடங்கள் கழித்து, இதே மாதிரியானதொரு அனுபவம் திரையில் கண்முன்னே விரிந்தது.
உண்மைக்கு அணுக்கமாகவும், நம் வாழ்வியல் தரிசனங்களையும், இப்படைப்பின் கதை மாந்தர்களாகவும், காட்சிப் பின்புலங்களாகவும் காண்பதே “பொய் மான்” நிறுவிய வெற்றி எனலாம்.








No comments: