- தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் விரைவில்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள், சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் '800' திரைப்படத்தின் First Look நேற்று வெளியிடப்பட்டது.
முத்தையா முரளிதரனின் 51 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, நேற்றுக் காலை 08 மணிக்கும் இதன் முதற்பார்வை வெளியிடப்பட்டது.
இத் திரைப்படம் இவ்வருடம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில், அதிகூடிய விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனை இன்னும் முரளிதரனிடமே உள்ளது.
அவர் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 800 விக்கெட்டுகளை பெற்றுள்ளார்.
அதனை கௌரவிக்கும் விதமாக அவரது, வாழ்க்கை வரலாற்றை பற்றிய திரைப்படம் தயாரிக்கப்பட்டு '800' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படத்தில், முத்தையா முரளிதரன் கதா பாத்திரத்தில், ஒஸ்கார் விருது வென்ற ஸ்லம்டோக் மில்லியனர் படத்தில் நடித்த, மாதுர் மிட்டல் நடித்துள்ளார். கதாநாயகியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார். எம்.எஸ். சிறிபாதி இயக்கும் இந்தத் திரைப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். நன்றி தினகரன்
No comments:
Post a Comment