தற்போது சிட்னி வருகை தந்திருக்கும் ஆறு.திருமுருகன் அவர்களால் ஈழத்தில் முன்னெடுக்கப்படுப்படும் அறப்பணிகளின் நீட்சியும், சவால்களும் அனுபவங்களுமாக நமது ATBC வானொலிக்கு வழங்கிய பேட்டியைக் கேட்கலாம்.
இந்தப் பேட்டியின் வழியாக கோவிட் முடக்க காலத்தில் சந்தித்த புதிய சவால்கள், சிவபூமி என்று திருமூலரால் சிறப்பிக்கப்பட்ட ஈழத்தில் நிலவும் சைவ மதம் எதிர் நோக்கும் சவால்கள், நமது வரலாற்றை ஆவணப்படுத்தவும், காட்சிப்படுத்தவும் வேண்டிய தேவைகள் அதன் சார்பில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் என்று பரந்து விரிந்த தளத்தில் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை சிட்னியில் நிகழும் இனிய மாலைப்பொழுது நிகழ்வின் வழியாக சிட்னி வாழ் அன்பர்களைச் சந்தித்துத் தன் அனுபவங்களையும் வழங்கவிருக்கிறார் எங்கள் "செஞ்சொற் செல்வர்" கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்கள்.
No comments:
Post a Comment