வித்தியாசமாய் சிந்தித்த புதுவைப் புயல் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் ....  அவுஸ்திரேலியா


    " பாட்டுக்கொரு புலவன் பாரதியடா " என்று


போற்றப்பட்டவர்தான் எட்ட யபுரம் தந்த எங்கள் தமிழின் சொத்து பாரதியார். அவரின் கருத்துக்களை மனமிருத்தி அவரின் பாதையில் பல கவிஞர்கள் பயணப் பட்டிருக்கிறார் கள். ஒவ்வொரு கவிஞரும் பாரதியைப் பார்த்த பார்வைகள் அவரவர் சிந்த னைகளாக மலர்ந்திருக்கின்றன. பாரதியாரின் காலத்தில் கவிமணி தேசிக விநாகம் பிள்ளை இருந்திருக்கிறார். நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை இருந்திருக்கிறார்.பாரதிதாசனும் இருந்திருக்கிறார். கவிமணி யின் சிந்தனை வேறாயும், நாமக்கல்லார் சிந்தனை வேறாயும் பாரதிதாசன் சிந்தனை வேறாகாவுமே அமைந்திருக்கிறது. இவர்கள் மூவருமே பாரதியைப் போற்றியாவர்களாகவே இருந்திருக்கிறார்கள். எட்டய புரத்துத்துப் பாரதிக்கு எட்டவே போகாமல் கிட்டவே நிற்கும் வாய்ப்பு புதுவையில் கால்பதித்த கனகசுப்பு ரத்தினத்துக்கே வாய்த்திருக்கிறது. கனகசுப்புரத்தினத்துக்குத்தான் எட்டயபுரத்து மகாகவி பாரதியின் ஆசீர்வாதம் கிடைத்திருக்கிறது. அந்த ஆசீர்வாதம்தான் " பாரதிதாசன் " என்று இன்றுவரை அவரை    சமூகத்தில் பார்த்திடக் , கொண்டாட , வைத்திருக்கிறது என்பதைக் கருத்திருத்தல் அவசியமாகும்.

  பாரதியையும் புரட்சிக்கவி என்று அழைக்கின்றோம். அவரின்


வாரிசாக வாய்த்திருக்கும் பாரதிதாச னையும் அழைக்கின்றோம். இருவரையும் புரட் சியின் வடிவமாகவே பார்ப்பதையே சமூகமும் விரும்பி நிற்கிறது என்பதும் மனங் கொள்ளத்தக்கதாகும்.பாரதி வாழ்ந்த காலமோ முப்பத்தொன்பது ஆண்டுக ளேயாகும். ஆனால் பாரதிதாசன் அவரைவிட இருமடங்கு காலம் வாழ்ந்திருக்கிறார்.பாரதியின் தாசனாகவே வாழ்ந்திடவே பாரதி தாசன் ஆசைப்பட்டார். அதுவே தனக்கும் , தனது வாழ்வுக்கும் மிகவும் பெருமையானது என்றும் கூட அவர் எண்ணியே இருந்தார். பாரதியைப் போலவே அவரும் புதிதாய்   புரட்சியாய். சிந்தித்தார். சிந்தித்தவற்றைத் தன்னுடைய படைப்புகள் வாயிலாகச் சமூகத்தில் இடம் பெறவும் செய்தார். பாரதியின் தாசனாய் அவரின் வாரிசாக வாய்த்த பாரதிதாசன் தன்னுடைய காலத் துக்கு ஏற்ப தன்னுடைய சிந்தனைகளை புதிதாய் வெளிப்படுத்தினார் என்பதை மறுத்துரைத்துவிடல் முடியாது. பாரதியார் வாழ்ந்த காலம்  பாரததேசம் அன்னியத்துக்கு அடிமைப்பட்டிருந்த காலம்.அவரின் வாரிசாய் வாய்த்த பாரதிதாசன் காலமே சுதந்திரக் காற்றினைப் பாரததேசம் சுவாசித்த காலமாகிவிட்டது. அதனால் தன்னுடைய குருவின் சிந்தனைகளை விட வித்தியாசமாய் சிந்திக்கும் அவசியம் பாரதிதாசனுக்கு அவசியமாய் 
ஆகிவிட்டது. அதனால் பாரதியின் சிந்தனைப் பாதையில் பயணித்தாலும் தனக்கென வித்தியாசமான சிந்தனைகளை பாரதிதாசன் வெளிப்படுத்தி நிற்கிறார் என்பதுதான் உண்மை நிலையாகும்.

  தம்முடைய குருவான பாரதியின் பிரிவை முன்னிட்டு பாரதிதாசன்

 

          நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா

          காடு கமழும் கற்பூரச் சொற்கோ ......

          திறம் பாட வந்த மறவன் புதிய

          அறம் பாட வந்த அறிஞன்

 

இவ்வாறு உளமார உரைத்து நின்றாலும் அவரின் சிந்தனையானது மட்டும் பல நிலைகளில்    வித்தி யாசமாய் அமைகின்றது என்பதுதான் உண்மையாகும். பாரதி தமிழைப் போற்றுகின்றார். அவரின் வாரிசான பாரதிதாசனும் போற்று கின்றார். பாரதி...

  " யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

      இனிதாவது எங்கும் காணோம் "

என்று உலகத்துக்கு உரத்துத் துணிவுடன் சொன்னவர் என்றவகையில் பாரதி முன்னிற்கிறார் என்பதை எவருமே மறுத்திடல் இயலாது. ஆனால் அவரின் வாரிசாய் வாய்த்த பாரதிதாசனோ வித்தியாசமாய் தனது சிந்த னையை முன் வைக்கிறார்.

    " தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்

      தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர் "

உலகமொழிகளில் இனிமையானது தமிழென்று குருவானவர் மொழிகின்றார். அவரின் மொழிதல் புதுமை யானதுதான். ஆனால் வித்தியாசமாய் சிந்தித்து தமிழினை உயிர் என்று காட்டுவதும் இன்பத் தமிழ்,   அமுதம் என்று காட்டுவதும் பாரதிதாசனின் வித்தியாசமான சிந்தனையாய் வெளி ப்பட்டு நிற்கிற தல் லவா ! அமுதம் என்பது நிரந்தராமாய் உயிருடன் வாழப் பண்ணுவதாகும். தமிழும் எம்மையெல்லாம் நிரந்தரமாய் வாழப் பண்ணும் என்னும் சிந்தனைவியப்பாய் மலர்கிறதல்லவா பாரதியின் மொழிப் பற்றானது போற்றப் படவேண்டியதே. அன்னிய மொழியான ஆங்கிலத்தை அறவே வெறுத்தார். அன்னை மொழியான தமிழினையே அகத்தில் இருத்தினார். அரியாசனத்தில் அமர்த்தியே பார்த்தார்.பாரதி வட மொழியிலும் வல்லமை பெற்று விளங்கினார். அவருக்கு வடமொழியிலும் பற்றிருந்தது. ஆனால் அவரின் வழியில் பயணத்தை ஆரம்பித்த பாரதிதாசனோ முழுக்க முழுக்க தமிழ்மொழிப் பற்றாளராகவே தன் வாழ் நாளெல்லாம் விளங்கினார்.வடமொழியினை அவர் ஒதுக்கியே நின்றார். திராவிடமே அவரின் சிந்தையில் நிறைந்து காணப்பட்டது. இது அவரின் வித்தியாசமான சிந்தனை என்றும் சொல்லலாம் அல்லவா !

  குருவான பாரதியின் தமிழ்மொழி பற்றிய சிந்தனையிலிருந்து வித்தியாசமாய் சிந்தனையினைத் தருவ தோடு அதற்காக அவர் பயன்படுத்தும் சொற் கோவைகளும் வித்தியாசமானதாகவே வருகிறது. மரபு யாப் பினைப் பயன் படுத்தினாலும் இங்கு வித்தியாசமாய் சிந்தித்து கூழைக்கூத்தரின் ஆட்டத்தை மனமிருத்தி அதனை ஆட்டத்தோடு கூடிய விதமாய் இசையுடன் பாட க்கூடியவகையில் தமிழையும், தமிழ் சமூகத்தையும் சிந்தித்திந்து அவரால் வழங்கப்பட்ட வித்தியாசமான சிந்தனையாய் இப்பாடல் அமைகிறது.

 

  திடுகிடும் திடுகிடும் திடுகிடும் திடுகிடும்

  ....................................................................................

அஃகஃக கும்பிட்றேன் அல்லா ருக்கும்

அஃகஃக வரிஞ்சலா அமைந்திருங்க

மக்களெ பெத்த மகரா சருங்க .....

 

என்னடா தம்பி ?

ஏண்டா அண்ணா ?

இதோபார் தம்பி எலும்புக்கூடு

சதையும் இல்லே சத்தும் இல்லை

ஆமாம் திடுகிடும் அதுக்குப் பேர்என்னா ? ...

இந்த மருந்துக்கு என்னா பேரு ?

உள்ளெ தொட்டா உசிரில் இனிக்கும் ;

தெள்ளுதமிழ் தம்பி தெள்ளுதமிழ் இதுதான் !

இந்த மருந்தே எலும்புக் கூட்டில்

தடவுறேன் தம்பி அடிமோ ளத்தை !

திடுதிடும் திடுதிடும் திடுதிடும் திடுதிடும்

 

சிரித்தது பாரடா செந்தமிழ்க் கூடு !

விரிந்தது பாரடா அழிந்தநம் நாடு !

பாடுது பாரடா பைந்தமிழ் நாடு ....

தாயி மாரே தக்கப்ப மாரே !

மாயம் இல்லே மந்திரம் இல்லே

கருத்து வேணும் நம்ப

வருத்தம் நீங்க தேடணும் வழியே !

 

தமிழினமானது எலும்புக்கூடாய் இருக்கிறதாம். அதில் சதையும் இல் லையாம் ! சத்துமே இல்லையாம் ! அதற்குச் சதையும் சத்தும் தந்து புத்துயிர் ஊட்டவேண்டும் என்னும் வித்தியாசமான சிந்தனையினைக் காட்டும் பாரதிதாசனை வியக்காமல் இருந்திட முடியுமா !

  பாரதி வாழ்ந்த காலம் அடிமையிருள் சூழ்ந்திருந்த காலம். பாரதியின் பார்வை பாரததேசத்தின் அடங்கி லும் பரவியே இருந்தது.பாரதத்தாயை மீட்டிடும் பாங்கில் பாரதியின் சிந்தனை அமைந்திருந்தது. ஆனால் அவரின் வாரிசான  பாரதிதாசன் காலம் அவரின் சிந்தனையினை வேறு விதமாக்கி விட் டது.பாரதியின் வழியில் பயணித்தாலும் அத்தனையையும் ஏற்று நிற்க அவர் விரும்பாதவராய் வித்தியாசமாய் ஒவ்வொ ன்றையும் வெளிப் படுத்துகிறார். அந்த வகையில் ஒட்டு மொத்த இந்தியாவைவிட்டு அவரின் சிந்தனை யானது திராவிட மீட்பாய் மாறுகிறது. பாரதி தமிழைதமிழினத்தைப் போற்றினார். அதற்காக பலவற்றை உரக்கவே சொன்னார். ஆனால் பாரதிதாசனோ திராவிடச் சிந்தனையாளராய்தமிழ்மொழியின் அடையா ளமாய் தனது வித்தியாசமான சிந்தனைகளால் எழுந்து நிற்கிறார்.

   சமய நம்பிக்கையினை தெய்வ நம்பிக்கையினைப் பாரதி கைவிட விரும்பவேயில்லை. மூட நம்பிக்கை களை எதிர்த்தார். வெறுத்தார். ஆனால் தெய்வம் இருக்கிறது என்பதில் ஆணித்தரமாய் பாரதி வாழ் வெல்  லாம் இருந்தார். இந்த இடத்தில் அவரின் வாரிசான பாரதிதாசன் வித்தியாசமாய் சிந்திக்கிறறார். ஆரம்ப த்தில் சக்தியைப் பாடியே பாரதியின் ஆசீர்வாதத்தைப் பெற்றவர் பிற்பாடு தெய்வீக சக்தியை விட்டு விட்டு மனித சக்தியையே பாடும் நிலைக்குள் வந்து விடுகிறார். பாரதி நாத்திகர் அல்ல. அவருள் ஆத்தீகம் அமர் ந்தே இருந்தது. ஆனால் வித்தியாசமாய் சிந்தித்த காரணத்தால் பாரதிதாசன் முழுதுமே நாத்திகராய் மாறி அதன் வழியில் பயணப்பட்டு அது சார்ந்த அரசியலிலும் தன்னை ஈடு படுத்திக் கொள்ளுகின்றவராய ஆகியே விடுகிறார். இதனால் அவரின் சிந்தனைகள் தன்னுடைய குருவின் சிந்தனைகளிலிருந்து வித்தியா சமாய் புதிய பார்வையினையே காட்டுவதாகவே ஆகியும் விடுகிறது எனலாம்.

  கல்விபற்றிய பாரதியின் சிந்தனையிலும்கூட பாரதிதாசன் வித்தியாசமாகவே தன்னுடைய சிந்தனை களை விதைக்கின்றார். பாரதியின் கல்வி பற்றிய சிந்தனையினை நோக்கும் பொழுது -

 

          வயிற்றுச் சோறிட வேண்டும் - இங்கு

          வாழும் மனிதருக்கு எல்லாம்

          பயிற்றிப் பல கல்வி தந்து - இந்தப்

          பாரை உயர்த்திட வேண்டும்

 

          அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்

          ஆலயம் பதினாயிரம் நாட்டல்

          பின்னருள்ள தருமங்கள் யாவும்

          பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்

          அன்னயாவினும் புண்ணியம் கோடி

          ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

 

          வீடுதோறும் கலையின் விளக்கம்

          வீதிதோறும் இரண்டொரு பள்ளி

          நாடுமுற்றிலும் உள்ளவூர்கள்

          நகர்களெங்கும் பலபலபள்ளி

          தேடு கல்வியிலாத தொருவூரைத்

          தீயினுக்கு இரையாக மடுத்தல்

 

என்று தன்னுடைய கல்விபற்றிய சிந்தனையைப் பாரதி இப்படிக் காட்டி நிற்கிறார். பெண்களைக் கண்க ளாய் காணும் பாரதி பெண்கள் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்காமல் வெளியில் வந்து கற்று தேர்ந்திட கல்விச் சிந்தினையினை விதைத்தும் நிற்கிறார். புதுமைப் பெண்களாய் பெண்கள் வரவும் அழைப்பினை விடுக் கிறார்.

  பாரதிவழியில் கல்வி பற்றிச் சிந்தித்தாலும் தனக்கே உரித்தான வித்தியாசமான சிந்தனைகளையும் அவர் முன்வைக்கிறார் என்பதுதான் கருத்திருத்த வேண்டிய விடயமாகும். பாரதிபோல் பெண்கல்வியை வலியுறு த்துகின்றார். பாரதியின் பார்வை வேறு . பாரதிதாசனின் பார்வையோ வேறு.

 

  " கல்வியில்லை உரிமையில்லை பெண்களுக்குக்

    கடைத்தேற வழியின்றி விழிக்கின்றார்கள் "

 

  " மகளிரெலாம் கல்வியறி வொழுக்கமுள ராயின்

      மருத்துவமே வேண்டாவாம் பிணிமூப்பு வாரா "

 

  " கல்வியறிவுடைய பெண்கள்

      திருந்திய கழனி அங்கே

      நல்லறி வுடைய மக்கள்

      விளைவது நவில வேநான் "

 

  " கல்வியில்லாத பெண்கள்

      களர்நிலம் அந்நிலத்தில்

      புல்விளைந் திடலாம் நல்ல

      புதல்வர்கள் விளைதல் இல்லை "

 

    " கற்பது பெண்களுக்கா பரணம் - கெம்புக்

      கல்வைத்த நகை தீராத ரணம் "

 

    " பெற்றநல் தந்தைதாய் மாரே - நும்

      பெண்களைக் கற்கவைப் பீரே

      இற்றைநாள் பெண் கல்வி யாலே - முன்

      நேறவேண் டும்வைய மேலே "

 

பெண்கள் கல்வியின் சிந்தனையினைப் பாரதிதாசன் வித்தியாசமாய் வெளிப்படுத்துகிறார். சிறுவர்க்குக் கல்விஆடவர்க்குக் கல்விமுதியோர்க்குக் கல்வி உடல் ஊனமுற்றவர்க்குக் கல்வி என்று பாரதிதாசனின் புதிய சிந்தனைகள் எழுந்து நிற்கின்றன.

  பொதுவுடமை பற்றிய வகையிலும் பாரதிதாசன் வித்தியாசமாய் சிந்திக்கிக்கிறார்.

 

      சித்திரச் சோலைகளே - உமை நன்கு

      திருத்தஇப் பாரினிலே - முன்னர்

      எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனர்

      ஓஉங்கள் வேரினிலே

 

      நித்தம் திருத்திய நேர்மையி னால்மிகு

      நெல்விளை நன்னிலமே - உனக்கு

      எத்தனை மாந்தர்கள் நெற்றி வியர்வை

      இறைத்தனர் காண் கிலமே

 

        தாமரை பூத்த தடாகங் களே உமைத்

        தந்த அக் காலத்திலே - எங்கள்

        தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச்

        சொல்லலோ ஞாலத்திலே

 

சோலைகளைப் பார்க்கிறார்.வயல்களைப் பார்க்கிறார்.தாமரைத் தடாகங்களைப் பார்க்கிறார். அந்தப் பார்வையையினூடாக அதற்காக உழைத்துப் பாடுபட்ட  உழைப்பாளிகளை அவர் மனம் எண்ணுகிறது. இப்படி எண்ணும் எண்ணமேதான் பாரதிதாசனின் புதிய சிந்தனையாக, வித்தியாசமான சிந்தனையாக  இங்கே வந்து நிற்கிறது அல்லவா !

 

            ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர்

            உடையப்ப ராகிவிட்டால் ஓர்நொடிக்குள்

            ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி

            ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ

 

சமத்துவத்தை இப்படியாய் சிந்திந்து வித்தியாசமாய் பாரதிதாசனால்த்தான் பார்த்திட முடியும்.

 

      மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற

      காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே

 

      வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்குத்

      தூண்டா விளக்காய்த் துலங்கும் பெருமாட்டி

 

என்று சமூக சிந்தினையினை சீர்திருத்த நோக்கில் பார்த்து வித்தியாசமான சிந்தனையாக தாலாட்டுப் பாடியவர் என்ற வகையில் பாரதிதாசனை வியந்து பாராட்டியே ஆகவேண்டும்.

  கவித்துவம் மிக்கவர் பாரதிதாசன். கவிதை எழுதினார். நாடகம் எழுதினார். கட்டுரைகள் எழுதினார். நூல்கள் பல எழுதினார். திரையிலும் ஜொலித்து நின்றார். எங்கு சென்றாலும் பாரதிதாசன் என்னும் முத்திரையினைப் பதித்தே நின்றார். " மகாகவி பாரதியார் தமிழனினத்துக்கு விட் டுப்போன மகத்தான மூன்று சொத்துக்களானவை குயில்பாட்டு, கண்ணன் பாட்டு, " பாரதிதாசன்" என்று எழுத்துலக ஜாம்பவான் கல்கி அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். இவ்வாறு பாரதிதாசன் பார்க்கப்படுவதற்கு முக்கியமான காரணம் எது தெரியுமா அவரிடம் காணப்பட்ட வித்தியாசமான சிந்தனைகளே.


No comments: