ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கும் முருகபூபதியின் நடந்தாய் வாழி களனி கங்கை The Mystique of Kelani River இம்மாதம் 08 ஆம் திகதி மெய்நிகரில் வெளியீடு


கிழக்கு மாகாணத்திலிருந்து வெளியாகும் அரங்கம் பத்திரிகையில் முன்னர் தொடராக வெளிவந்த  எழுத்தாளர் முருகபூபதி எழுதிய நடந்தாய் வாழி களனி கங்கை,  2021 ஆம் ஆண்டு கொழும்பு குமரன் புத்தக இல்லத்தினால்  நூலாக வெளியிடப்பட்டது.

இந்நூலுக்கு அரங்கம் ஆசிரியர் சீவகன் பூபாலரட்ணம் அணிந்துரை எழுதியிருந்தார்.

கொழும்பை ஊடறுத்து ஓடும் களனி கங்கையின் கரையோரம் நிகழ்ந்த அரசியல், பொருளாதார,  சமூக மாற்றங்களை கதைபோன்று சித்திரித்த இந்த நூலை, அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் மொழிபெயர்ப்பாளர் திரு. நூர் மஃரூப் முகம்மட் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

குறிப்பிட்ட ஆங்கில மொழிபெயர்ப்பினை தற்போது அமேசன்


கிண்டிலில் தரவிறக்கம் செய்து படிக்கலாம்.

நூர் மஃரூப் முகம்மட்,  ஏற்கனவே முருகபூபதியின் சில ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவை Colombo Telegraph இணைய இதழிலும் வெளியாகியிருக்கின்றன.

அத்துடன் நூர் மஃரூப் முகம்மட்,   கவியரசு கண்ணதாசனின் வனவாசம் நூலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். எனினும் பதிப்புரிமை விவகாரங்களினால், இந்நூல் வெளியாவதில் தாமதம் நீடிக்கிறது.

The Mystique of Kelani River  என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கும் நடந்தாய் வாழி களனி கங்கை நூல் ஒக்டோர்  மாதம் 08 ஆம் திகதி ( 08-10-2022 ) சனிக்கிழமை,  அவுஸ்திரேலியா நேரம் இரவு 8-00 மணிக்கும்  இலங்கை – இந்திய நேரம் பிற்பகல்  2-30 மணிக்கும்  இங்கிலாந்து நேரம் முற்பகல் 10– 00 மணிக்கும்   மெய்நிகரில் வெளியிடப்படும்.

மனித உரிமை ஆர்வலரும் எழுத்தாளருமான கலாநிதி லயனல் போப்பகேயின்  தலைமையில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்வில்  எழுத்தாளரும், சமூகப்பணியாளருமான திரு. எஸ். சுந்தரமூர்த்தி வரவேற்புரை நிகழ்த்துவார்.  சட்டத்தரணிகள் திருமதி நிவேதனா அச்சுதன், ஆரூரண் ரவீந்திரன், மற்றும்  திருமதி றிஸானா சுபைர் சக்கரியா,  மொழிபெயர்ப்பாளர் திரு. நூர் மஃரூப் முகம்மட் ஆகியோர் உரையாற்றுவர்.

மூல நூலின் ஆசிரியர் திரு. முருகபூபதி நன்றியுரை நிகழ்த்துவார்.

அவுஸ்திரேலியா - கன்பரா தமிழ் அரங்கம் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

மெய்நிகர் இணைப்பு :

 

Join Zoom Meeting

 

Meeting ID: 842 7250 9206
Passcode: 005941

No comments: