அவுஸ்திரேலியாவில் தமிழ் பேசும் மக்கள் அவுஸ்திரேலிய புள்ளிவிபரவியல் இலாகா, குடிசன மதிப்பீடு 2021 தொகுப்பு: தளையசிங்கம் ரவீந்திரன், கான்பெரா, அவுஸ்திரேலியா

முக்கிய அம்சங்கள்

2021 குடிசன மதிப்பீட்டின்படி அவுஸ்திரேலியாவில் 95,404 தமிழ் பேசும் மக்கள் உள்ளனர். 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 30.4 சத வீதமாக அதிகரித்துள்ளது.

விக்டோரியா குயீன்ஸ்லாந்து மற்றும் தாஸ்மேனியா மாநிலங்கள் சராசரிக்கும் அதிகமான வளர்ச்சியை 2021 இல் பதிவு செய்துள்ளன.

2021ல் இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களின் விகிதாசாரம் 42.5 சத வீதமாகவும் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்டவர்களின் விகிதாசாரம் 29.6 சத வீதமாகவும் உள்ளது.

தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பெண்களை விட ஆண்கள் அதிகமாக உள்ளனர். இதே சமயம் அவுஸ்திரேலிய சனத்தொகையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ளனர்;.

இந்து சமயமே தமிழ் பேசும் மக்களுள் முதன்மை இடத்திலுள்ள சமயநெறியாகும் (73.2 சத வீதம்). அடுத்ததாக கிறிஸ்தவமும் (16.8 சத வீதம்) இஸ்லாமும் (4.5 சத வீதம்) உள்ளன.

தமிழ் பேசும் மக்களில் 65.9 வீதமானோர் அவுஸ்திரேலிய குடியுரிமை கொண்டுள்ளார்கள். இதே சமயம் மொத்த சனத்தொகையில் சுமார் 84 சத வீதமானோர் அவுஸ்திரேலிய குடியுரிமை உடையவர்களாவர்.

அவுஸ்திரேலியாவில் தமிழ் பேசும் மக்கள்

அவுஸ்திரேலிய புள்ளிவிபரவியல் இலாகாவால் (Australian Bureau of Statistics) ஐந்து வருடங்களுக்கு ஓரு முறை சனத்தொகைக் கணக்கெடுப்பு என பொதுவாக அழைக்கப்படும் சனத்தொகை மற்றும் வீட்டுவசதிக் கணக்கெடுப்பு நடாத்தப்பட்டு வருகின்றது. கடைசியாக சனத்தொகைக் கணக்கெடுப்பு 10 ஆகஸ்ட் 2021 அன்று நடாத்தப்பட்டது.

கணக்கெடுப்பில் கேட்கப்பட்ட 66 கேள்விகளில் 20வது கேள்வியில் இந்த நபர் வீட்டில் ஆங்கிலத்தை விட வேறு மொழி பேசுவாரா? என்று கேட்கப்பட்டது. அவுஸ்திரேலியாவில் தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கையானது இக்கேள்விக்கு வீட்டில் பேசும் மொழி தமிழ் என பதிலளித்தவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது. இக்கேள்விக்கு தமிழ் என பதில் அளிக்காதவர்கள் தமிழ் பேசும் மக்கள் தொகையில் கணக்கிடப்படமாட்டார்கள்.

இதன் அடிப்படையில் 2021 சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி அவுஸ்திரேலியாவில் உள்ள வீடுகளில் தமிழ் பேசும் மக்களின் (இனி தமிழ் பேசும் மக்கள் என்போம்;) எண்ணிக்கை 95,404. இந்த 2021 சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி அவுஸ்திரேவியாவில் வசிக்கும் தமிழ் பேசும் மக்கள் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உட்பட 60 நாடுகளில் இருந்து குடிபெயர்ந்து வந்துள்ளனர்.

எல்லாத் தமிழர்களும் வீட்டில் பேசும் மொழி தமிழ் என கணக்கெடுப்பு கேள்விக்கொத்தில் பதிலளித்திருப்பார்கள் என்பதில்லை என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டும். எனவே அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழ் மக்களின் உண்மையான தொகை இங்கு தரப்படும் தொகையைவிட அதிகமானதாகவே இருக்கும். 2021 சனத்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் இங்கு சில முன்னிலைத் தரவுகளும் தேவைக்கேற்ப முந்திய ஆண்டுடன் செய்யப்பட்ட ஒப்பீடுகளும் தரப்பட்டுள்ளன.

இந்தத் தகவல் அறிக்கை பின்வருமாறு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது:

இந்தத் தகவல் அறிக்கை பின்வருமாறு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது:

வரைபடம் 1. அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் பேசும் மக்கள், 1991-2021

அட்டவணை 1. மாநில ரீதியாக தமிழ் பேசும் மக்கள் அவுஸ்திரேலியா 2011, 2016 மற்றும் 2021

அட்டவணை 2. பிறப்பிட ரீதியாக தமிழ் பேசும் மக்கள், அவுஸ்திரேலியா 2011, 2016 மற்றும் 2021

வரைபடம் 2. சமய ரீதியாக தமிழ் பேசும் மக்கள், அவுஸ்திரேலியா, 2021

வரைபடம் 3. குடியுரிமை ரீதியாக தமிழ் பேசும் மக்கள், 2021

அட்டவணை 3. வயது ரீதியான சனத்தொகைப்பகிர்வு: அவுஸ்திரேலியாவில் வாழும்; தமிழ் பேசும் மக்களும் அவுஸ்திரேலிய சனத்தொகையும்ரூபவ் அவுஸ்திரேலியா, 2021

அட்டவணை 4. பால் ரீதியான சனத்தொகைப் பகிர்வு: அவுஸ்திரேலியாவில் வாழும்; தமிழ் பேசும் மக்களும் அவுஸ்திரேலிய சனத்தொகையும், 2021

அட்டவணை 5. பூர்வீக ரீதியான தமிழ் பேசும் மக்கள், அவுஸ்திரேலியா, 2021

வரைபடம் 4. நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் தமிழ் பேசும் மக்கள் செறிவாக வாழும் புறநகர்ப் பகுதிகள், 2021

வரைபடம் 5. விக்டோரியா மாநிலத்தில் தமிழ் பேசும் மக்கள் செறிவாக வாழும் புறநகர்ப் பகுதிகள், 2021

வரைபடம் 6. குயீன்ஸ்லாந்து மாநிலத்தில் தமிழ் பேசும் மக்கள் செறிவாக வாழும் புறநகர்ப் பகுதிகள்,  2021

வரைபடம் 7. மேற்கு அவுஸ்திரேலியா மாநிலத்தில் தமிழ் பேசும் மக்கள் செறிவாக வாழும் புறநகர்ப் பகுதிகள், 2021

வரைபடம் 8. தென் அவுஸ்திரேலியா மாநிலத்தில் தமிழ் பேசும் மக்கள் செறிவாக வாழும் புறநகர்ப்பகுதிகள்,  2021

வரைபடம் 9 தாஸ்மேனியா மாநிலத்தில் தமிழ் பேசும் மக்கள் செறிவாக வாழும் புறநகர்ப் பகுதிகள், 2021

வரைபடம் 10. அவுஸ்திரேலிய தலைநகரப் பிரதேசத்தில் தமிழ் பேசும் மக்கள் செறிவாக வாழும் புறநகர்ப் பகுதிகள், 2021

வரைபடம் 11. வடக்குப் பிரதேசத்தில் தமிழ் பேசும் மக்கள் செறிவாக வாழும் புறநகர்ப் பகுதிகள்,  2021

குறிப்பு: இந்தத் தரவுகள் அவுஸ்திரேலிய புள்ளிவிபரவியல் இலாகாவின் தரவுகளின் அடிப்படையில் த.ரவீந்திரனால் தொகுக்கப்பட்டது. இந்தக் தகவலில் தரப்பட்டுள்ள கருத்துக்கள் ஆசிரியரின் கருத்துக்களே. இத் தரவுகளின் மூலம் அங்கீகாரம் செய்யப்படின் இவை பிரதி செய்யப்படலாம். இந்த தகவல் பற்றிய ஆக்கபூர்வமான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. (ravindiran@grapevine.com.au).
No comments: