.
இலங்கையில் கல்வித்தேவை நாடி
நிற்கும் பாடசாலைகளுக்கு உதவி செய்யும் நோக்கோடு நிதி சேகரிக்கும் " இளைய
நிலா பொழிகிறதே" என்கின்ற இசை நிகழ்ச்சியை தரிசனம் நிறுவனம் 24. 9. 2022
சனிக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் மண்டபத்தில் வெற்றிகரமாக நடத்தி
முடித்திருந்தனர்.
இரண்டாவது தடவையாக இளையநிலா
பொழிகிறதே நிகழ்ச்சியை அவினாஷுடன் இணைந்து தொகுத்து வழங்கும்
வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தது. நிகழ்ச்சிக்கான முன் ஆயத்தங்கள் ,
ஒழுங்கமைப்புகள் ,
திட்டமிடல்,பயிற்ச்சிகள், திட்டமிடட
விடையங்களை மேடையிலும் மண்டபத்திலும் நடைமுறைப்படுத்திய விதம், நிகழ்ச்சி , நிகழ்ச்சிக்கு
வருகை தந்தவர்களின் பாராட்டுக்கள் அனைத்தையும் அருகில் இருந்து பார்த்தவன் என்ற
வகையில் இளையோர்களின் பெரும் பங்களிப்போடு நடந்தேறிய இந்த இசை நிகழ்ச்சியைப்பற்றி
எழுதாமல் இருப்பது மாபெரும் குற்றமாக கருதுகிறேன்.
கேஷிகா அமிர்தலிங்கம் 15 வயது சிறுமியாக
இலங்கை தொலைக்காட்சி ஒன்றின் இசைபோட்டிக்கு பங்குபெற்ற அவுஸ்திரேலியாவில் இருந்து
சென்றபோது அவரது பெற்றோர்கள் மலையகதில் பின்தங்கிய பிரதிதேசங்களுக்கு
கூட்டிச்சென்று காட்டிய போது கேஷிகாவின் மனதில் தோன்றிய எண்ணக்கருதான் தரிசனம் .
தரிசனத்தினுடைய நோக்கத்தை மிக சிறப்பாக கடடமைத்திருந்தார் கேஷிகா . தரிசனத்தின்
நோக்கமானது இலங்கையில் கல்வித்தேவை நாடி நிற்கும்
பாடசாலைகளுக்கு உதவி செய்வதோடு அவுஸ்ரேலிய இளம் கலைஞர்களுக்கு மேடைஅமைத்துக்கொடுத்து
அவர்களின் திறமைகளை மக்கள் முன் கொண்டு சென்று அதில்
இருந்து கிடைக்கும் பணத்தை வைத்து இலங்கையில்
உள்ள பாடசாலைகளுக்கு உதவி செய்வது . இதன் அடிப்படையில் கடந்த ஆறு வருடங்களாக வெற்றிகரமாக
பல இளம் மற்றும் சின்னஞ்சிறு குழந்தை கலைஞர்களை ஒன்றிணைத்து அவர்களுடைய அற்பணிப்பையும் திறமையும் மக்கள் முன் கொண்டுசென்று அதனூடாக கிடைத்த பணத்தை
வைத்து பல செயல் திட்டங்களை செய்திருந்தனர்.
இளையநிலா பொழிகிறதே 2022 நிகழ்ச்சி அவுஸ்திரேலிய கலைஞர்களுக்கு மேடையமைத்து கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவர்களை இந்திய பாடகர்களான சுப்பர் சிங்கர் புகழ் அஜய் கிர்ஷ்ணா மற்றும் சரி கம ப புகழ் ஹீநிதியோடு சேர்ந்து பாடுவதற்கான வாய்புக்களையும் பெற்றுக்கொடுத்திருந்தது. சமரசமற்ற திட்டமிடலை நடைமுறைப்படுத்தும் இளையவர்களின் கண்டிப்பான கட்டடளைக்கு அமைய இளையநிலா பொழிகிறதே 2022 இசைநிகழ்சி மண்டபம் நிறைந்த மக்களோடு சரியாக மாலை 6 மணிக்கு மங்கள விளக்கேற்றல் , ஒரு நிமிட மௌன அஞ்சலி, இந்த மண் அவுஸ்திரேலிய பூர்வீக குடிகளுக்கு சொந்தமானது என்பதை ஒப்புக்கொள்ளும் உறுதிவசனம்த்தோடு ஆரம்பமாகியது.
மங்கள விளக்கேற்றலை வைத்தியர்
தவசீலன், வைத்தியர்
சாந்தி தவசீலன்,வைத்தியர்
ஜெயமோகன், பவானி
ஜெயமோகன் மற்றும் ரஞ்சன் சிவஞானசுந்தரம் ஆகியோர் ஏற்றிவைத்தனர்.
அதனைத்தொடர்ந்து சின்னஞ்சிறு
சிறார்கள் மேடையில் தோன்றி மழலை மொழியில் தமிழ் மொழி
வாழ்த்து, அவுஸ்திரேலிய
தேசியகீதம் மற்றும் வரவேற்பு உரையை வழங்கியிருந்தனர் .
அடுத்து மேடையில் ஏற்கனவே தயார்
நிலையில் இருந்த ஹீமதி புஷ்பா ரமணாவின் ஐனரஞ்சனி நுண்கலை நிலைய மாணவர்கள் ஒரு
நிமிடம் கூட தாமதிக்காமல் கர்நாடக சங்கீதம்
இசை நிகழ்வை வழங்கி வருகை தந்திருந்த அனைவரையும் நிகழ்ச்சிக்குள் உள்வாங்கி ஒரு ரம்மியமான
மாலையை வரவேற்க தயார்படுத்தியிருந்தனர். சிறப்பாக மாணவர்களை பயிற்றுவித்த ஹீரிமதி ரமணா
புஷ்பா அவர்களை தொழில் கட்சியினை பிரதிநிதித்துவபடுத்தும்
துர்கா ஒவன் மலர் கொடுத்து கௌரவித்தார்.
நிகழ்சிக்கு தயாரான
பார்வையாளர்களுக்கு இந்த நிகழ்ச்சி எதற்காக மற்றும் உங்கள் கடந்தகால பங்களிப்பு எப்படி திட்டங்களாகமாறி கல்விக்கு உதவி செய்திருக்கிறது என்பதைக்காட்டும் முகமாக தரிசனம் செய்து முடித்த திட்டங்களையும், அதன் ஒளிப்படங்களை அதற்கான இலங்கை பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்களின்
நன்றிகள் தாங்கிய காணொளிகளையும் நிகழ்ச்சியில்
திரையிட்டு பங்களிப்பு செய்த மக்களுக்கு நன்றிகளையும்
பாராட்டுகளையும் தெரிவித்திருந்தனர் .
இளைய நிலா பொழிகிறதே 2022 நிகழ்ச்சிக்கு
மிகவும் பொருத்தமான பிரதம விருந்தினர் மண்டபத்துக்குள் உள்நுழையும் போது அவரை கண்ட
மக்களின் முகங்களில் ஏற்பட்ட ஆச்சரிய மாற்றங்களை மேடையில் நின்று பார்கும்போது அதை படம்பிடிக்க கைபேசியை மேடையில் எடுத்துவரவில்லையே என்று கவலைப்பட்டுவிட்டேன்.
பிரிதம விருந்தினராக இலங்கையில் இருந்து
வருகை தந்திருந்தார் முன்னாள் இலங்கை
அமைச்சரும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அவர்கள். பார்வையாளர்கள் முன்வரிசையில் அமர்ந்திருந்தவர்
கம்பீரமாக மேடையேறி நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்களை
தெரிவித்து தரிசனத்தினுடைய வேலை திட்டங்களுக்கு
பாராட்டுகளையும் தெரிவித்து இருந்தார். மனோ கணேசன் அவர்களை பிஜே அக்கவுண்டிங் நிறுவனத்தின்
நிறைவேற்று அதிகாரி மகிந்தன் மகாதேவன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
பிரதம விருந்தினர் உரையைத் தொடர்ந்து வருகை தந்திருந்த அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்து காத்திருந்த
இளையநிலா பொழிகிறதே நிகழ்ச்சி பார்வையாளர்களின் பலத்த கரகோஷங்களோடு ஆரம்பமாகியது.
நிகழ்ச்சியின் முதலாவது பாடல்
முருகன் புகழ் பாடும் பாடலோடு ஆரம்பித்தது. உள்ளத்தில் புகுந்து உணர்வுகளை தூண்டி
பக்தி பரவசம் ஏட்படுத்தும் விதமாக சரி க ம ப புகழ் ஸ்ரீநிதி பாடி அனைவரது பாராட்டுகளையும் பெற்றிருந்தார் அதை தொடர்ந்து
நானும் சளைத்தவன் அல்ல வடியம்மா யக்கம்மா வந்து நில்லு பக்கமா என்று பார்வையாளர்களை
குதுகல சூழலுக்குள் கொண்டுவந்திருந்தார் சூப்பர்
சிங்கப்பூர் அஜய் கிருஷ்ணா இவர்களைத் தொடர்ந்து
அவுஸ்திரேலியாவில் புகழ்பூத்த பல இசைமேடைகளை
அலங்கரித்த தமிழ் பாடகர்களான கேஷிகா அமிர்தலிங்கம்
, கிரி
ஞானராயா , ரஞ்ஜீவ் கிருபைராஜ் மற்றும் டாக்டர் நடராஜா கௌரிபாலன் ஆகியோர் பாடல்களை வழங்கியிருந்தனர்
. இவர்களை தொடர்ந்து வளர்ந்துவரும் இளம் தமிழ் பாடகர்களான மயூரியா மயூரதாஸ், கிஸோமி சிவனேசன் , பவீதன் கிருஷ்ணகுமார் , விஷால் சுரேஷ் ஆகியயோர் பாடியிருந்தார்
. இவர்களோடு இன்றைய சிறு நச்சத்திரங்களான சின்னஞ்சிறு
சிறார்களுடைய பாடல்களும் இடம்பெற்றது. கேஷிகா அமிர்தலிங்கம் அவர்கள் தனது "சர்க்கம்"
இசைப்பாடசாலையில் இசை பயிலும் சிறார்களை சிறப்பாக
பயிற்றுவித்து அவர்கள் திறமைகளை வெளிப்படுத்த மேடையையும் வழங்கியிருந்தார்.
இளையநிலா பொழிகிறதே இசை நிகழ்ச்சியயில் பெயருக்கு ஏற்றால் போல்
பாடல் தெரிவுகள் அனைத்தும் வருகை
தந்திருந்த பார்வையாளர்களின் எண்ண ஓட்டங்களையும் மனவிருப்பங்களையும் உணர்ந்து மாலைப்பொழுதை மயங்கவைக்கும் பாடல்களாக இருந்தன. இசையமைப்பாளர்
கே.பி மகாதேவனுடைய அறுபதாம் ஆண்டுகளில் வெளிவந்த பாடல்களில் இருந்து 70 80 90
மற்றும் இன்றைய அபிமானம் பெற்ற இசையமைப்பாளரான அனிருத்தினுடைய இசையமைப்பில் வந்த
பாடல்கள் வரை பாடல்கள் பாடப்பட்டன. இந்திய பாடகர்களான அஜய் கிர்ஷ்ணா மற்றும்
ஹீநிதி ஆகியோர் கேஷிகா அமிர்தலிங்கம்
மற்றும் கிரி ஞானராயா அவர்களின் பாடல்களை கேட்டு
உடனேயே மனம் திறந்து மேடையில் பாரட்டுகளை தெரிவிக்க அதை ஆமோதிக்கும் விதமாக
பார்வையாளர்களும் அரவாரமிட்டு கரகோஷம் செய்ய அந்த தருணமே ஒரு அற்புதமான தருணமாக
மாறியது. இந்த தருணத்தை கெட்டியாக பிடித்துக்கொண்ட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அவினாஷ் மற்றும் யாழவன் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த ஜோஷ்வா ஸ்ருதியின்
நினைத்தாலே இனிக்கும் இசைக்குழுவோடு இணைந்து இசைவழங்கிக்கொண்டிருந்த ஆஸ்திரேலியா இசை கலைஞர்களையும் பாராட்டிஇருந்தனர் . இந்த சந்தர்ப்பம்
மண்டபத்தில் கர ஓசை இரட்டிப்பாக மாறிய தருணமாக இருந்தது,
இளையநிலா பொழிகிறதே நிகழ்ச்சி பாடல்களால் மட்டும் மக்களை கட்டி
போடாமல் கண்கவர் நடனக்களால் அவ்வப்போது புத்துணர்வு
கொடுத்தவண்ணமே இருந்தது .பாடல்களுக்கு இடையில் டிவாஷினி ரமேஷ் அவர்களின் இந்தியன் டான்ஸ்
ஸ்கூல் மாணவர்கள் மற்றும் ஹீமதி பிரஷா பிரதீபன் அவர்களின் மாணவர்கள் வழங்கிய கண்கவர்
நடனங்களும் இடம்பெற்றன.பார்வையாளர்களை மெய்மறக்க வைத்த நடனங்களை வழங்கிய நடன
ஆசிரியர்களானடிவாஷினி ரமேஷ் அவர்களை வாகினி கிரஷ் அவர்கள் மலர் கொத்துக் கொடுத்து
கௌரவித்திருந்தார் அத்துடன் ஹீமதி பிரசா பிரதீபனுக்கு வதனா சுரேஷ் அவர்கள்
மலர்க்கொத்து கொடுத்து கௌரவப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பான சம்பவம்
என்றால் உணவு இடைவேளை கூட எடுக்க தயாராக இல்லாத நிலையில் பார்வையாளர்களை
கட்டிப்போட்டு வைத்ததோடு உணவை மண்டபத்திலே உண்ண வசதிகளையும் செய்து கொடுந்திருந்தமை. அதற்கும் மேலாக விற்பனைக்கு
வைத்திருந்த உணவுகள் அனைத்தும் விற்று தீர்ந்ததிருந்தது.
நிகழ்சிக்கான திட்டமிடல் மற்றும்
பயிற்ச்சியில் கேஷிகா அவரது தம்பி மற்றும் அவர்களுடைய நண்பர்கள் காட்டிய
செயல்திறன் அவர்களின் பக்குவப்பட்ட முதிர்ச்சியை காட்டிநிக்கின்ற அதேவேளை அவர்களது பெற்றோர்களும் அவர்களது நண்பர்களும் இணந்து செயலாற்றிய
மண்டப , உணவு
மற்றும் பொருளாதார திட்டமிடல் ஓழுங்கமைப்பும் பொறுப்புக்கூறும்
நிலையில் இருந்து கனகாட்சிதமாக செய்திருந்தமையை
கண்கூட காணக்கூடியவாறு இருந்தது.
மேடைநிர்வாகம் , கலைஞர்களை
ஓருங்கமைப்பது ,
நேர முகாமைத்துவம் ,
உணவு விற்பனை என அனைத்திலும் இளையோர்
வயதில் பெரியவர்களோடு இணைந்து சிறப்பாக செய்திருந்தாரர்கள் . வயதில் பெரியவர்களை
இளைஞர்களின் செயல்திறணைக்கண்டு வியப்படைந்ததை அருகில் இருந்து பார்த்த சாட்சியாக நானே இருக்கிறேன்.
இளையநிலா பொழிகிறதே நிகழ்ச்சியை
வழங்கிய கலைஞர்களையும் பார்வையிட வந்திருந்த பார்வையாளர்களையும் கலகலப்பாக இணைத்து
தொடுத்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருறிந்தீர்கள்,
ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை
நிகழ்ச்சியை கொண்டு சென்றவிதம் சிறப்பாக இருந்தது என பார்வையாளர்கள் பலர் தாயகம் தமிழ் ஒளிபரப்பு சேவையின் அறிவிப்பாளர் ஆர் ஜே யாழவன் மற்றும் அவினாஷ் அவர்களை
பாராட்டியது நாங்களும் இந்த நிகச்சி சிறப்புற ஒரு
பங்காளர்களாக இருந்திருக்கிறோம் என்ற மன சந்தோஷத்தை கொடுத்தது.
நன்றி உரைக்கு முன் இளயநிலா
பொழிகிறதே நிகழ்ச்சிக்கு பிரதான அனுசரணை வழங்கிய
ராஜ் பவன் உணவக உரிமையாளர் லெஸ்லி அவர்களையும் மற்றும் ஊடக அனுசரணை வழங்கிய தாயகம்
தமிழ் ஒலிபரப்பு சேவை நிறைவேற்ற அதிகாரி விஜய் ராஜகோபால் அவர்களை சமுக அரசியல்
செயற்பா ட்டாலரும் அவுஸ்திரேலிய தமிழ் வார்ட்க சங்க தலைவருமான திரு ஆறு திருமுருகன் அவர்கள் நினைவு பரிசு கொடுத்து கௌரவித்தார்.
இறுதியாக கேஷிகா அமிர்தலிங்கம் அவர்களின் நன்றியுரையோடும் துள்ளல்
பாடல்களோடும் இறுதிவரை அரங்கில்
அமர்துரிந்து நிகழ்ச்சியை கண்டு கழிந்த மக்களின் பாராட்டுகளோடும் பாடகர்களுடனான படப்பிடிப்புகளோடும்
மன நிறைவோடு நிகச்சி இனிதே நிறைவுபெற்றது .
No comments:
Post a Comment