மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
உலகிலே பல மொழிகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு மொழியும் முக்கியமான மொழிகள்தாம். ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு விதமான சிறப்பு இருக்கிறது. ஆனால் எந்த ஒரு மொழிக்குமே இல்லாத சிறப்பினை உலகில் எங்கள் தமிழ் மொழி பெற்றிருக்கிறது. அந்தச் சிறப்புத்தான் " பக்தி இலக்கியம் " என்னும் சிறப்பாகும். பக்தி என்பது - இலக்கியமாக எழுந்தி ருப்பது உலகமொழிகளில் தமிழ் மொழியில் மட்டுமே என்பதை எல்லா மொழியியல் அறிஞர்களுமே ஏற்றுக் கொள்ளுகிறார்கள். அந்த அளவுக்கு தனித்துவமாய் , வளர்ந்து யாவரும் வியக்கும் வண்ணம் பக்தி இலக்கியம் தமிழில் அமைந்திருக்கிறது என்பது தமிழருக்கெல்லாம் மிகவும் பெருமை அல்லவா !
பக்தி இலக்கிய வரலாற்றை எடுத்து நோக்கினால் தமிழகத்திற்கு தனித்த தொரு இடமுண்டு எனலாம். சைவ நாயன்மார்களும், வைணவ ஆழ்வார்க ளும் உவந்தளித்த பக்தி இலக்கியத்தால் எங்கள் தமிழ் மொழி " பக்தியின் மொழி " என்னும் சிறப்பினைப் பெற்றது என்பது மறுக்கமுடியாத உண்மை எனலாம். இவர்களின் அருட்பாடல்களால் " பக்தி இலக்கியம் " தமிழின் தமிழ்ச்சமூகத்தின் பெருஞ் சொத்தாக ஆகிவிட்டது எனலாம்.
சைவ பக்தி இலக்கியத்தின் எழுகின்ற ஞாயிறாக விளங்குவர் காரைக் கால் தந்த தவப்புதல்வி , தமிழ்ச்செல்வி ,
சைவசமயம் போற்றும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் மூவர்மட்டுமே பெண்களாக இருக்கிறார்கள். அவர்களுள் மூத்தவராய் தலையானவராய் இருப்பவர் காரைக்கார் அம்மையார் என்பது மனங்கொள்ளத்தக்கதாகும். மற்றைய பெண்களைவிட காராக்கால் தந்த தமிழ்ச்செல்வி யாவற்றிலும் முன்னிற்பவர் ஆகிறார் எனலாம். இவ்வம்மையாரைப் பன்முக நோக்கிலே தான் பார்க்கவேண்டி இருக்கிறது.
தத்துவச் செறிவு மிக்கார். மெஞ்ஞான உணர்வு மிக்கார். சமயசாதனை மிக்கார். இலக்கியச் சாதனை மிக்கார். என்று இவரின் நோக்கு பரந்து விரிந்து சைவ பக்தி இலக்கியத்துக்கு வெளிச்சமாய் நிற்கிறது எனலாம்.
அதிசயங்கள் இல்லாமல் பிறந்த அம்மையார் அனைவரும் மெச்சும் ஆன்மீக அதிசயமாகிறார். சித்துக்கள் அறியாத அம்மையார் சிந்தனைகளை விதைத்த பெரும் சித்தராகவே ஆகிறார் சைவபக்தி உலகில்.சாதாரண பெண்ணாக வளர்ந்து சாதாரணமாகவே இல்லறவாழ்வில் இணைக்க ப்படுகின்றார். இல்லறத்தில் நல்லறம் விளையும் வண்ணம் வாழ்ந்தவரின் வாழ்வில் ஆண்டவன் அருள் பாய்ந்து அவரின் கோலம் மாறுகிறது. குடும்பம் மாறுகிறது. சைவ பக்தி உலகுக்கு தத்துவஞான முத்துக் கிடை க்கிறது எனலாம். இது காரைக்காலில் வந்து பிறந்த ஏனைய பெண்களுக்கு வாய்க்கவில்லை. இவருக்கு மட்டுமே வாய்த்திருக்கிற தென்றால் திரு வருள் என்பது கருவிலேயே வந்து அமர்ந்து விட்டது என்றுதான் கருத்தத் தோன்றுகிறதல்லவா ! மாங்கனியின் வருகை ஒரு மங்கையின் வாழ்வை யே பக்திக்குள் புகுந்துவிட வைக்கிறது ! மாங்கனியால் மானிலத்துக்கே ஆன்மீக அம்மையாய் ஆகிவிடுகிறார் காரக்கால் ஈந்த புனிதவதியான தமிழ்ச்செல்வி !
காரைக்கால் தந்த ஆன்மீக முத்து சைவ பக்தி இலக்கியத்தின் முன்னோ டியாக விளங்கினார் என்பதற்கு அவரின் பரந்துபட்ட செயற்பாடுகளே அர ணாகி நிற்கின்றன. கோவில்களில் இருக்கின்ற நாயன்மார்களின் சிலைகள் நின்றபடியே இருக்க காரைக்கால் அம்மையார் சிலைமட்டும் இருந்தபடி வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.மற்றவர்கள் எல்லாம் நிற்க இவர் மட்டும் இருக்கும் வண்ணம் சிறப்புற்றதற்குக் காரணந்தான் என்ன ?
மாங்கனியை இறைவனிடம் பெற்றதாலா ? பேயுடலுடன் கயிலை மலையில் தலையால் நடந்து அதியம் புரிந்ததாலா ? புலமையில் சிறந்து விளங்கியதாலா ? தியாகங்களைச் செய்தலாலா ? அப்படியெல்லா மெண் ணிப் பார்க்கையில் அம்மையாரைவிட பல செய்தவர்கள் இருந்திரு க்கிறார்கள் எனலாம். அப்படி இருக்க இவருக்கேன் இப்படிச் சிறப்பென்றால்" இவர் தோன்றி இருக்காவிட்டால் சைவமும் இல்லை மற்ற சிவன் அடியார்களும் இல்லை " என்பதனாலாகும் என்பது பல பெரியோர்களின் கருத்து எனலாம்.
" இவள் நம்மைப் பேணும் அம்மை " என்று முழுமுதற் கடவுளான சிவனே செப்பியதாகக் கூறப்படுகிறது. உண்மையில் சைவத்தைப் பேணிய தாய் ! சைவத்துக்கு ஒரு திட்டமான வடிவம் கொடுத்து அது ஒரு தனிப்பெருஞ் சமயமாக வளர்வதற்கான அடித்தளம் இட்டவர் அம்மையார் அவர்களேயாவர். சமணமும் சாக்கியமும் சைவத்தை நிலைகுலையச் செய்யாமல் சைவத்தை தலைநிமிரச் செய்தவர் சைவம் நிலைபெறச் செய்தவர் காராக்கால் அம்மையார் என்பதனாலேயே அவர் முக்கியத்து வப் படுத்தப்படுகிறார். முன்னிலையில் அமர்ந்திருக்கிறார் எனலாம். எந்த ஒன்றும் தாயின் வயிற்றில்த்தான் பிறக்க வேண்டும் என்பதை நாமனைவரும் அறிவோம். முழுத்தன்னை பெற்ற சைவம் என்ற ஒன்று , சிவ வழிபாடு என்ற ஒன்று , காரைக்கால் அம்மையாராகிய தாய் வயிற்றில் பிறந்ததாகும் என்பதை மனமிருத்தல் அவசியமாகும்.தமிழ் நாட்டில் சைவத்தைக் காத்திட்ட பெருமை காரைக்கால் அம்மையாரையே சாரும் எனலாம். அவர் போட்டுக் கொடுத்த பாதையில்த்தான் பின் வந்த அடியார்கள் செப்பமாய் செல்ல முடிந்தது எனலாம். " தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறைவனாய் " ஆவதற்கு முதலடி எடுத்து வைத்தவர் என்னும் நிலையில் காரைக்கால் தந்த தமிழ்ச்செல்வி புனித வதி அம்மையார் திகழுகிறார் எனலாம்.
சைவசமயத்தின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் அடித்தளமாய் இருந்த காரைக்கால் அம்மையார் தமிழ் இலக்கியத்திலும் புத்திலக்கிய முன்னோடியாக மிளிர்கிறார் எனலாம். சங்க இலக்கியம் காதலை யும் , போரையும் கருவாய் கொண்டு மகிழ்ந்தது.காப்பியங்கள் சாதனை புரிந்த தலைவர்கள் புகழ்பாடி போற்றும் வகையில் எழுந்தன. ஆனால் பக்தி எனும் பாதையில் மலர்ந்த பக்தி இலக்கியங்களோ மானுடக் காதலை , மனிதனைப் புகழ்ந்து பாடுவதை விடுத்து இறைகாதலை யும் , பரமான்வாவைப் பாடுதலையும் , இறை தொடர்பினைத் தேடுவனவாகவுமே மலர்ந்தன எனலாம். இவ்வாறு மலர்ந்த பக்தி இலக்கியத்தில் சிறப்பாக சைவபக்தி இலக்கியத்தின் முன் னோடியாக காரைக்கால் அம்மையார் திகழ்கிறார் எனலாம். நாயன்மார் களுக்குக் காலத்தால் முற்பட்ட இவ்வம்மையார் தமிழ் இலக்கியத்தில் பல இலட்சியப் புதுமைகளைச் செய்து புத்திலக்கிய முன்னோடியாக விளங் குகிறார் என்பதை தமிழ் இலக்கிய வரலாற்று ஆய்வாளர்கள் அனை வருமே ஏற்று நின்கின்றார்கள் என்பது மனம் இருத்தவேண்டிய கருத் தெனலாம்.
அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் என்பன அம்மையார் தமிழ் இலக்கியத்துக்கு அளித்த மிகப் பெருங்கொடைகள் எனலாம். முதல் ஆழ்வார்களின் பங்களிப்பும் அம்மை யாரின் பங்களிப்பும் பல்லவர் காலத்தில் பக்திப் பாடல்கள் தோன்றுவதற்கு விடிவெள்ளியாய் அமைந்தாலும் - பல்லவர்கால இலக்கியக்கியப் போக்கினுக்கு வழிகாட்டிய பெருமையினை அம்மையாரே பெற்றுக் கொள்ளுகிறார் எனலாம்.அந்த வகையில் அம்மையாரின் பிரபந்தங்கள் விளங்குகின்றன என தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் வியந்து போற்றுகின்றனர்.இந்த ரீதியில் காரைக்கால் தந்த தமிழ்ச்செல்வி காரைக்கால் அம்மையார் தமிழகத்துப் பெரும்புலவர் வரிசையில் வைத்து எண்ணத்தக்க சிறப்பு வாய்ந்த தமிழிலக்கியப் படைப்பாளியாக விளங்கு கிறார் என்பது மிகவும் பொருத்த முடையதேயாகும்.
நூற்று நாற்பது செய்யுட்களே காரைக்கால் அம்மையாரின் இலக்கிய வெளிப்பாடாய் கிடைத்திருக்கிறது.நான்கு சிறைய பிரபந்தங்கள் வாயிலாக இப்பாடல்கள் வந்திருக்கின்றன. குறைந்த அளவில் இலக்கியத்தில் இணைந்து நிற்கும் இவரை பெரும்புலவர் என்று எப்படிக் கருத முடியும் ? அப்படி எண்ணுமளவுக்கு அம்மையாரின் இலக்கிய ஆளுமைதான் என்ன ? என்று சிந்திக்கத் தோன்றுகிறதல்லவா ! இலக்கியத்தரம் என்பது எண்ணிக் கையால் வருவதுதல்ல ! இலக்கியத்தைப் படைத்த சிறப்பினைக் கொண்டே தீர்மானிக்கப் படுவதெனலாம். அந்த வகையில் அம்மையாரின் ஆற்றல் அவரை உன்னத நிலையில் காணவே வைத்திருக்கிறது எனலாம்.
பின்னால் வந்த நாயன்மார்களுக்கும் ஆழ்வார்களுக்கும் பொருள் மரபிலும்,யாப்பு முறையிலும் அம்மையாரே வழிகாட்டியாய் அமைந்திருக்கிறார். அவரின் பிரபந்தங்கள் அவர்களுக்கு பாடமாக நல்லாசிரியனாக முன்னின்றது எனலாம். வெண்பாவைக் கையாண்டு சங்கமருவிய கால நிலையினைப் பேணினார். ஆனால் தனது உள்ளத்தில் எழும் தெய்வானுபங்களை , உணர்ச்சிகளை வெளிப்படுத்த வெண்பா யாப்பு சிறந்ததாக எனக்கருதி விருத்தம் என்னும் யாப்பினைக் கையெடுக்கின்றார். அம்மையாரின் இந்தச் சிந்தனையானது தமிழ் இலக்கியப் பாதையில் புதிய இலக்கிய மரபு ஆரம்பித்து வைத்தது எனலாம்.
இசையால் இறைவனைப் பாடும் பதிகப் பாதையினை அம்மையாரே தொடக்கி வைக்கிறார். பதிகத்தின் நிறைவில் இடம் பெறும் திருக்கடைக் காப்புப் பாடலில் - பாடுபவர் பெயர், பாடுவோர் பெறும் நலன்கள், ஆகிய வற்றை ஆரம்பித்து வைத்தவரும் அம்மையாரே ஆவர். இதுவே சம்பந்தப் பெருமானுக்குக் கைகொடுத்தது எனலாம். அந்தாதி என்னும் யாப்பினை அம்மையார் காட்டுகிறார். பின்னர் தொடரும் இலக்கியப் பெருவழிக்கு இவையாவுமே பெருவெளிச்சமாய் அமைகிறது என்பதை மனமிருத்தினால் அம்மையாரின் ஆளுமை தெள்ளிதிற் புலனாகும் !
நிலையாமையை வலியுறுத்தி இலக்கியம் பேசப்பட்ட நிலையில் - இல்லறத்தில் இன்பங்காணா இறைவன்பால் இன்பங்கண்ட காரைக்கால் அம்மையாரின் சிந்தனையும் அதன் நிமித்தம் வெளிவந்த அவரின் இலக்கிய வெளிச்சமும் ; மக்கள் மனதில் நல்லதோர் நம்பிக்கையினை வாழ்க்கையில் உருவாக்குவதாக அமைந்தது எனலாம். பெண்ணாக இருந்தும் ஈமப்புறங் காட்டினைக் கண்டு அஞ்சாமல் அங்கு ஆண்டவன் ஓயாமல் நடனமிடுகிறான் என்று கண்டு கொள்ளுகிறார். இச்செயலானது அம்மையாரினால் அஞ்சிய பெண்களுக்குக் காட்டிய புதிய பாதையாக எடுத்துக் கொள்ளவும் - அம்மையாரின் புதியதான ஒரு சமயப்பாதையினைக் காட்டி நிற்பதையும் விளக்கி நிற்கிறது அல்லவா ! இப்படிச் செய்தமையால் காரைக்கால் அம்மையார் தனித்துவம் மிக்க பெண்ணரசியாய் மிளிர்கிறார் என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறது. சுடு காட்டில் இறைவனின் நடனத்தைக் காண ஒரு சாதரண பெண்மணி விரும்பியமையும், சுடலையினை நடனமிடும் இடமாகக் கண்டு ஆனந்தம் அடைந்தமையும் , அம்மையாரின் மனதில் தோன் றிய வித்தியாசமான போக்கினையே காட்டுகிறது எனலாம். அந்த நடனத்தை ரசிப்பவர்கள் பேய்களாக இருப்பதால் தனக்கும் பேய் உருவினை ஆண்டவனிடம் வேண்டிப் பெற்றார் என்பதும் அம்மையாரின் நிலையினை அடியார்கள் நிலையில் பார்க்கும்பொழுது மிகவும் வேறு பட்ட , மாறு பட்ட , புதிய தொரு கோணத்தையே வெளிப்படுத்தி நிற்கிறது எனலாம்.
சிவனைப் பற்றி ஏனைய இலக்கியங்களில் காட்டியதை விட காரைக்கால் அம்மையார் தனது பாடல்கள் வாயிலாக காட்டிய பாங்கு மிகவும் வளர்ச்சி உடையதாகவே இருக்கிறது என்று பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் அவர்கள் குறிப்படுவது நோக்கத்தக்கதாகும். " இறைவனுடன் அன்பு பூண்டுஅவனுக்கு அடியவனாகவும் , அடிமையாகவும் ,
கரைக்கால் தந்த தவச்செல்வி , தமிழ்ச்செல்வி , பு
' அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு ' என்னும் நிலையினை வெறுத்து நிற்கும் - சேக்கிழார் காரைக்கால் அம்மையாரின் பெருமையைக் காட்டி அவரைத்தொடர்ந்து திலவதியார், மங்கையற்கரசியார் போன்றவர்களைக் காட்டி பெண்கள் எல்லோருக்கும்- ஏன் பெண்களை ஒதுக்கிய சமூகத்துக்கேநல்லதோர் பாடத்தைப் புகட்டுகிறார் என்பது புலனாகிறதல்லவா ?
தமிழ் நாட்டிலே முதன்முதலாக சைவநாயன்மார் வரிசை யில்,வணங்கப் பெற்றவர் என்னும் பெருமைக்குரியவர் காரைக்கால் அம்மையார் அவர்களே ஆவர். சிலை அமைத்து வழிபாடும் அம்மையாருக்கு நடத்தப்படுகிறது. வணிகத்துக்குச் சென்றவர்கள் அம்மையாரின் சிலையினை எடுத்துச் சென்றுள்ளனர் என்று அறிய முடிகிறது. கி. பி. ஐந்தாம் நூற்றாண்டிலே இவ்வாறு நடைபெற்றிருக்கிறது என்பது மனமிருத்த வேண்டிய கருத் தென லாம். அம்மையாரின் வழிபாடானது தாய்லாந்து, கம்பூச்சியா, இந்தோனேசியா, பாலி, போன்ற இடங்களில் பரவியிருக்கிறது என்பதையும் வரலாற்றால் கண்டு கொள்ளுகிறோம். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அம்மையாரின் வழிபாடு பரவி இருந்திருக்கிறது என்பதற்கும் ஆதாரங்கள் கிடைத்திருக் கின்றன என்பதும் மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.
காரைக்கால் அம்மையாரின் வழிபாடு மட்டுமல்ல அவரின் வரலாறும் வடமொழி, தெலுங்கு, கன்னடம் , போ
" பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை யென்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்நான் மகிழ்ந்துபாடி
அறவாநீ நீயாடும்போது அடியின் கீழுருக்க என்றார் "
No comments:
Post a Comment