பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் - பாபு - ச. சுந்தரதாஸ் - பகுதி 16

.


தமிழில் ஏராளமான வெற்றிப் படங்களை இயக்கி புகழ் பெற்றவர் ஏ சி திருலோகச்சந்தர்.ஏவிஎம்,பாலாஜி போன்றவர்கள் தயாரித்த படங்களையும் சிவாஜி நடித்த பல படங்களையும் இயக்கி வெற்றி பெற்ற இவருக்கு தயாரிப்பாளராக வேண்டும் என்ற ஆசை உருவானது.அதன் விளைவு சினிபாரத் என்ற நிறுவனத்தை உருவாக்கி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் பாபு என்ற படத்தை தயாரித்து டைரக்ட் செய்தார். படத்திட்கான நிதியுதவியை ஏ வி எம் நிறுவனம் வழங்கி பதிலுக்கு விநியோக உரிமையை பெற்றுக்கொண்டது.

தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் நீண்ட காலமாக கைவண்டி ரிக்சோக்கள் பாவனையில் இருந்து வந்தன.மனிதனை மனிதன் கை வண்டியில் சுமந்து கொண்டு மழையிலும் வெய்யிலிலும் போவதை நீக்கும் வகையில் 70ஆம் ஆண்டுகளில்கலைஞர் கருணாநிதி தலைமையில் ஆன தி மு க ஆட்சியில் கை வண்டி ரிக்க்ஷாக்கள் தமிழ்நாட்டில் ஒழிக்கப்பட்டன.அதட்கு பதில் சைக்கிள் ரிக்க்ஷாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

பாபு படத்தின் கதாநாயகன் பாபு ஓர் அனாதை தெருவில் வளரும் அவன் வாலிபனானதும் கை வண்டி ரிக்க்ஷ இழுத்து பிழைக்கிறான்.சாப்பாடு கூடை தூக்கி ரிக்க்ஷா தரிப்பிடத்தில் உணவு படைக்கும் கண்ணம்மா அவன் காதலி.ஒரு நாள் குழந்தை அம்முவையும் அவள் பெற்றோரையும் தன் வண்டியில் கொட்டும் மழையில் இழுத்து செல்கிறான் பாபு இதனால் அம்மு குடும்பம் அவன் மீது இரக்கம் காட்டுகிறது ஆனால் விதி வசத்தால் அம்முவின் தந்தை காலமாக குடும்பம் நடுத் தெருவுக்கு வருகிறது.குடிசை வாசியான அம்முவையும் அவள் தாயார் பார்வதிக்கும் அரணாக நிட்கும் பாபு அம்முவை பட்டதாரி ஆக்குவதட்கு திடசங்கட்பம் பூணுகிறான்



இவ்வாறு அமைக்கப்பட்ட படத்தின் கதைக்கு எ எல் நாராயணன் கருத்துச் செரிவான வசனங்களை எழுதியிருந்தார் எந்த வேடமானாலும் அதுவாகவே மாறிவிடும் சிவாஜிக்கு பாபு பாத்திரம் விதிவிலக்காக அமையவில்லை. கருணை சோகம் ஆனந்தம் என்று காட்சிக்கு காட்சி தன நடிப்பு முத்திரையை பதித்திருந்தார் அவர் அவருக்கு ஈடு கொடுத்து தன் திறமையை வெளிப்படுத்தி இருந்தார் பார்வதியாக வரும் சௌகார் ஜானகி சிறுமி அம்முவாக ஸ்ரீதேவியும் வளர்ந்த பிறகு வெண்ணிற ஆடை நிர்மலாவும் நடித்திருந்தனர் இவர்களுடன் நாகேஷ் வி கே ராமசாமி எம் ஆர் ஆர் வாசு விஜயஸ்ரீ எ கருணாநிதி ஆகியோரும் நடித்திருந்தனர் பல படங்களில் கவர்ச்சி நடனம் ஆடி வந்த விஜயஸ்ரீக்கு இந்த படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிட்டியது



நடிகர் பாலாஜி படத் தயாரிப்பாளராகி சிவாஜியை வைத்து முதல் தடவையாக தங்கை படத்தை தயாரித்த போது அன்று பிசி டைரக்டராக இருந்த திருலோக்கை மிக வலியுறுத்தி தன் படத்தை இயக்க வைத்திருந்தார் இப்போது திருலோக் முதல் தடவையாக தயாரித்த படத்தில் ஒரு காட்சியில் மட்டும் நட்பு ரீதியாக நடித்திருந்தார்.அதே போல் சிவகுமார் நடித்த முதல் படமான காக்கும் கரங்கள் படத்தைஇயக்கியவரும் திருலோக் தான் அந்த வகையில் படத்தில் முக்கிய வேடங்களில் ஒன்றான அம்முவின் காதலன் வேடத்தில் சிவகுமார் நடித்தார் அதே போல் திருலோக்கின் நீண்ட கால நண்பனான சுந்தர்ராஜனும் படத்தில் இடம் பெற்றார்


இவ்வாறு உருவான படத்தின் பாடல்கள் எல்லாவற்றையும் வாலி எழுதியிருந்தார் இசை மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் இவர்கள் கூட்டில் உருவான இதோ எந்தன் தெய்வம் முன்னாலே,வரதப்பா வருதப்ப கஞ்சி வருதப்பா,என்ன சொல்ல என்ன சொல்ல ஆகிய பாடல்கள் பிரபலமாகின.சீரியசான கதை என்ற போதும் வெண்ணிற ஆடை நிர்மலா சிவகுமார் பங்குபற்றிய இரண்டு பாடல் காட்சிகளிலும் கவர்ச்சி விருந்து படைக்க திருலோக் தவறவில்லை.

கடைசி வரை ஏழையாகவும் தியாகியாகவும் வாழ்ந்த ரிக்க்ஷோக்காரன் பாபுவின் கதை பாபு என்ற பெயரில் படமாகி வெற்றி பெற்று பின்னர் திருலோகச்சந்தரின் இயக்கத்தில் ராஜேஷ் கண்ணா ஹேமமாலினி நடிப்பில் ஹிந்தியிலும் தயாரிக்கப்பட்டு வெள்ளி விழா கண்டது





No comments: