மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
பனையும் தென்னையும் எங்களின் வாழ்வில் பயனை அளிக்கும் வகையிலேதான்
இருக்கிறது.அதனில் எந்த மாற்றுக் கருத்துக்களுக் குமே இடமில்லை என்றுதான் கொள்ள வேண்டும்.ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் உடைய தாகவே இருப்பதை யும் மறுத்துவிட முடியாது. ஆனால் பனையின் ஓலை , தென்னை யின் ஓலை என்று வரும்பொழுது - பனையின் ஓலைதான் முன் னுக்கு வந்து நின்று விடுவதைக் காணமுடிகிறது. காரணம் பனை யின் ஓலை பெற்று வந்த வரமென்று தான் எண்ணத் தோன்று கிறது.பனை ஓலையின் வன்மையினைத் தென்னை ஓலை யானது பெற்றிருக்கவில்லை. அதனால் தென்னை ஓலை ஒரு மட்டோடு நின்று விடுகிறது.பனை ஓலையோ பல நிலைகளில் தன்னை வெளி ப்படுத்தி நிற்கிறது என்பதை கருத்திருத்தல் வேண்டும்.மங்கலம், அமங்கலம்,
பனையின் ஓலை குருத்தோலையாயும், அதன்பின் முற்றிய
நிலையிலும் பயனினைக் கொடுத்தே நிற்கிறது.குருத்தோலையுடன் நின்று விடாமல் அதனுடன் இணைந்திரு க்கும் ஈர்க்கினையுமே பய ன்பாட்டுக்குக் கொடுத்தும் நிற்கிறது என்பதும் நோக்கத் தக்கதாகும். ஈர்க்குடன் அமைந்துவிடாது - குருத்தோலையுடன் இணைந்திருக்கும் மட்டையினையும் வழங்கி மகிழ்கிறது என்பதையும் எண்ணிப் பார் க்க வேண்டும்.
தென்னோலை என்பதன் பயன்பாடு ஒரு மட்டோடு நின்று விடுகிறது. தென்னோ லைக்கு என்று கைத்தொழில் அமைவதில்லை. ஆனால் பனை ஓலை என்பது கைத்தொழில் நிலையில் தன்னை நிலை நிறுத்தி வைத்தே இருக்கிறது.ஈழத்திலும் , இந்தி
பனை ஓலையினால் பலவகைப் பொருட்கள் செய்யப்பட்டு அத்த
னையும் பொருளாதார நிலையில் முன்னிற்கின்றன என்பதை யாவ ரும் அறிவோம். அப்படியான பனை ஓலையினாலாகிய " பனங்குடை " சங்ககாலத்தில் பயன்பாட்டில் இருந்திருக்கிறது என்பதையும் அறிகின்றோம்.பனை ஓலையின் வன்மையான தன்மையானது மழை நீரை உட்புக விடாமல் தடுத்துவிடும். இந்தத் தன்மையினை அறிந்திட்ட பறவைகளே பனை ஓலைகளைத் தேர்ந்து அதனைக் கொண்டு கூடுகள் கட்டி வாழ்ந்ததாய் சங்கப் பாடல்கள் காட்டி நிற்கின்றன.இப்படிப் பறவைகளால் அமைக்கப்பட்ட அந்தக் கூடுகள் "குடம்பை " என்று அழைக்கப்பட்டன.
" ஓங்கு மணல் உடுத்த நெடுமாய்ப் பெண்ணை
வீங்குமடற் குடம்பைப் பைதல் வெண்குருகு "
உயர்ந்த மணல் திடரில் நீண்டு வளர்ந்திருந்த மரத்தின்
உச்சியிலே - நெருக்கமான பனைமடலால் கட்டிய கூட்டில் - வெண்மை நிறமான நாரை ஒன்று இருந்தது என்னும் செய்தியை நற்றிணை என்னும் இலக்கியம் காட்டி நிற்கிறது, பறவைக்குக் கூட பனை ஓலை கைகொடுத்து நிற்கிறது என்றால் அது பனை ஓலையின் பெருமைய ல்லால் வேறென்ன வென்று எடுத்துக் கொள்ளுவது !
மழையில் நனையாது மனிதனைக் காத்திட உதவிய பனங்குடை பற்றி எங்கள் தமிழ் மூதாட்டி ஒளவையாரும் சொல்லுகிறார்.
" இவற்கீத் துண்மதி கள்ளே சினப்போர்
இனக்களிற் றியானை யியறேர்க் குரிசில்
நுந்தை தந்தைக் கிவன்றந்தை தந்தை
எடுத்தெறி ஞாட்பி னிமையான் றச்சன்
அடுத்தெறி குறட்டி னின்றுமாய்ந் தனனே
மறப்புகழ் நிறைந்த மைந்தனோ னிவனும்
உறைப்புழி யோலை போல "
மிகவும் கடுமையாக மழை பெய்தாலும் தடுத்து - தன்னைப் பிடித் திருப்போரை காத்தித்து நிற்கும் பனை ஓலையினால் ஆகிய " பனங்குடை " போல - உன்னை நோக்கி பகைவரால் ஏவப்படும் அம்புகள் தாக்கிடா வண்ணம் தடுத்து நிற்கும் தடுப்பாய் இவ்வீரன் விளங்குகிறான் என்று ஒளவைப் பாட்டி கூறுவதாய் வரும் சங்கப் பாட்டில் பனங்குடை எடுத்துக்காட்டாய் காட்டப்படுவது கருத்திருத்த வேண்டியதாய் இருக்கிறது அல்லவா !
பனை ஓலை குடையாய் அமைந்து காப்பாற்றி வந்திருக்கிறது.
வீட்டின் கூரையாய் அமைந்து - வெப்பமும் , குளிரும் எம்மை அணு கவிடாமல் இப்போதும் கவசமாயாகிக் காத்தே வருகிறது. காத்து நிற்கும் பனை ஓலை கடவுளரின் வழிபாட்டிலும் தன்னைப் புகுத் தியிருக்கிறது. பனை ஓலை எப்படி வழிபாட்டில் நுழைந்தது என்று எண்ணுகிறீர்களா ! கிராமப் புறங்களில் தெய்வங்களுக்குப் படையல் இடும் வேளை - பனை ஓலையினாலான பாயினைப் பயன்படுத்தி அதில் பலவகையான பதார்த்தங்களைப் படைப்பார்கள். குறிப்பாக சோற்றினைப் படைப்பதை இன்றும் காணமுடிகிறது. அது மட்டு மன்றி பனை ஓலையினாலான பெட்டிகளையும் பயன்படுத்தி படை யலுக்கான பலவற்றை அதில் இட்டும் வைப்பதையும் காண் கின்றோம்.
சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரைக்கஞ்சித் திருவிழா
மறக்க முடியாததாகும்.இந்த வேளையில் ஊர்மக்கள் அனைவரும் சூழவுள்ள கோயில்களில் பெரிய அளவில் அண்டாவினை வைத்து சித்திரைக் கஞ்சியைக் காய்ச்சுவார்கள். காய்ச்சிய கஞ்சி கடவு ளுக்குப் படைத்து பூசை முடிந்த பின்னர் - அந்தக் கஞ்சியை அனைவரும் பருகுவதற்கு ஒரு பாத்திரம் உடனே வந்து நிற்கும். அந்தப் பாத்திரத்தின் பெயர் " பிளா " ஆகும்.அந்தப் பிளாவினை அளித்து நிற்பது எங்கள் கற்பகதருவாம் பனையின் ஓலைகளே என்பதை அனைவரும் கருத்திருத்தல் அவசியமாகும். சுடச் சுடச் சித்திரைக் கஞ்சியினைச் சுவையோடு அருந்திடத் துணையாய் வந்துவிடும் பனை ஓலை.கஞ்சியின் சூடு கூட கைக்குத் தெரியாமல் காப்பாற்றி நிற்கும் பனை ஓலை.சுடு கஞ்சியை வேறு வகையான எந்தப் பாத்திரத்தில் குடித்தாலும் வராத சுவையினை - பனை ஓலையினாலான பிளா என்னும் உடனடியான பாத்திரம் தந்து நிற்கும் என்பதை மனமிருத்தல் வேண்டும்.பச்சைப் பனை ஓலையின் வாசனை கஞ்சியினுடன் சேர்ந்து மேலும் சுவையினை வழங்கி நிற்கும். இதனை எழுத்தில் வடிப்பதை விட - உண்மை யாகவே குடித்து மகிழ்ந்தால்தான் இதன் அருமை அகத்தில் பதி யும்.
பனை ஓலை தொடர்பான கைத்தொழில்கள் இந்தியாவில் பல
இடங்களில் இன்றும் நடை பெற்று வருகின்றன. இலங்கையில் வடபகுதியிலும் , கிழக்குப் பகுதியிலும் இடம் பெற்றும் வருகின்றன. வட மாகாணத்தில் பனை நிறையவே காணப்படுகிறது. கிழக்கி லங்கையிலும் கணிசமாய் பனை காணப்படுகிறது. கிழக்கி லைங்கையில் - தாளங்குடா, புதுக்குடியிருப்பு,
பாய் இளைத்தலில் பெரும்பாலும் பெண்களே ஈடுபடுகிறார்கள் என்பதும் நோக்கத்தக்கது.பாய் என்னும் நிலையில் பனை ஓலைப் பாய் பல வகையில் அமைகிறது. கதிர்ப்பாய், தடுக்குப்பாய், படு
கல நிகழ்ச்சிகளுக்காய் வர்ணப்பாய் என்னும் பாயும்
இளைக்கப்படு கிறது. வர்ணப்பாய் இளைத்து மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும் வேளை மங்கல தீபத்தை ஏற்றுவதற்கு தீப்பெட்டி தேவை அல்லவா ? அந்தத் தீப்பெட்டியினையும் பதப்படுத்திய பனை ஓலையினால் செய்யலாம் என்றும் - அதற்கான தீக்குச்சியை பனம் ஈர்க்கினால் ஆக்கலாம் என்றும் - பனை பற்றிய ஆராய்வில் இருந்த ஆராய் வாளர் சொல்லுவர். அப்படி வருமாயின் எவ்வளவு ஆனந்தமாய் இருக்கும். பனையின் நிலையும் பெரும் வணிகமாய் மாறிவிடும் அல்லவா !
ஆயிரத்துத் தொழாயிரத்து ஐம்பத்து இரண்டாம் ஆண்டு பன்ன வேலைக்கு என்று ஒரு பயிற்சி நிலையம் யாழ்மாவட்டதில் ஸ்தாபிக்கப்பட்டது. அதனை ஸ்தாபித்தார் ஒரு கல்வி அதிகாரி யாவார். அவர்தான் தென்கோவை சுவாமிநாதன் அவர்கள். அவர் புகழ்பூத்த கல்வியியலாளராயும் சமூகச் சிந்தனையாளராகவும் விளங்கினார்.பன்ன வேலையினைப் பல பெண்களும் பயின்று அதன் மூலம் பாடசாலைகளில் ஆசிரியராகவும் = இப்பெரியாரின் வழி காட்டல் அமைந்தது எனலாம். பன்ன வேலையினைப் பாடசாலை யில் ஒரு பாடமாகப், படிப்பிக்கவும் பலரும் அப்பணியில் இணை ந்திடவும் , இவரின் முயற்சி பெருங்காரணமாய் அமைந்திருந்தது என்பது மனங்கொள்ளத்தக்கதாகும். பனை அபிவிருத்தியிலும் இப்பெரியார் மிகவும் சிறப்பாகச் செயற்பட்டிருக்கிறார் என்று அறிய முடிகிறது. இவ்வாறு பனையினை அபிவிருத்தி செய்யும் நிலையில் நின்ற பெரியாரை வாழ்த்தாமல் இருப்பது முறையா ! அவரை வாழ்த்துவதுதான் முறையாகும்.
" கைப்பணிக் கலாசா லைக்குவித் திட்டு
நற்பணி புரிந்து நங்கையர் பலரை
ஈண்டிவ ணிருந்து ஆண்டுப் போத்தி
பன்ன வேலைப் பயிற்சியா சிரியை
என்றொரு பணியை இலங்கா தீவகம்
கண்டுபன் னூறு கன்னியர் வாழ்வை
மலரவைத் துள்ள மாபெருந் தயாளன் "
" கற்பக தருவாம் நம்பனையில்
கணிப்பரும் பொருள்பல வாராய்ச்சி
நற்பயனளிக்கும் நிலையபொன்று
நல்லபி விருத்திச் சங்கமொன்று
உற்பவித் துலகில் உயர்சேவை
ஊக்கி யளித்த உயர்பெருயான்
சிற்பர நருளைச் சேவிக்கும்
சுவாமி நாதப் பெருந்தகையே "
No comments:
Post a Comment