ஏ.எல்.ராகவன் - எங்கிருந்தாலும்வாழ்க - கானா பிரபா


 “இவரின் கலைச்சேவையை மெச்சி ஒரு பாராட்டு விழாவை வைக்கணும்னு நானும் ராஜாவும் பேசிட்டிட்டிருந்தோம்.

ஆனால் அந்தப் பாக்கியம் நமக்குக் கிட்டல”

 

என்று வருந்தி அஞ்சலி பகிர்ந்தார் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் இதே நாள் (ஜீன் 19) கடந்த ஆண்டு கொடு நோய் கொரோனா நோய்த்தொற்று காரணமாக நம்மை விட்டு மறைந்த பாடகர் ஏ.எல்.ராகவன் அவர்களது மறைவில்.

 

தமிழ்த் திரையிசையில் மென் குரல் பாடகர் யுகத்தில் தனி முத்திரை பதித்தவர் ஏ.எல்.ராகவன் அவர்கள்.

பாடகராக அறிமுகமானதே ஒரு பெண் குரலாக, விஜயகுமாரி என்ற படத்தின் வழியாக. அந்தக் கணக்கில் பாடகராக 50 ஆண்டுகள் போன 2020 ஆம் ஆண்டோடு. தவிர நடிகராகவும் அதற்கு முன்பிருந்தே இயங்கியவர். ஏ.எல்.ராகவன் & எம்.என்.ராஜம் கலைத்துறை தாண்டி, வாழ்க்கையிலும் இணை பிரியா ஜோடியராக முன்னுதாரணமாக விளங்கியவர்கள்.

 

இவர்கள் இருவரதும் கலகல பேச்சையெல்லாம் விரும்பி ரசித்துப் பார்ப்பேன்

https://www.youtube.com/watch?v=1yhz95Dhh-8

 


 

நம் காலத்து நாயகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கே.ஜே.ஜேசுதாஸ், மலேசியா தேவன் தாண்டி, அந்தக் காலத்துப் பாடகர்களை அறிமுகப்படுத்திய விதத்தில் றேடியோ சிலோன் வழியாகவும், நம்முன்னோர் தம் முதுசம் போலப் பாடிப் பாடி நமக்குக் கடத்திய வகையிலும் ஏ.எல்.ராகவன் அறிமுகமானர் அப்போது.

 

 

“பாப்பா பாப்பா கதை கேளு”

 

https://www.youtube.com/watch?v=-S2OmlIoLvo

 


ஏ.எல்.ராகவனை குழந்தைகளுக்கான கனவினான பாடகராகவும்,

 

“அன்று ஊமைப்பெண்ணெல்லோ” https://www.youtube.com/watch?v=fE5qtx2PbU4 பாடும் போது அச்சொட்டாக ஜெமினியாக மாறி விடுவார்.



 

“எங்கிருந்தாலும் வாழ்க” https://www.youtube.com/watch?v=b2vDDWSAJjI வில் கல்யாண் குமாரின் மனச்சாட்சியாகவும் கூடு விட்டுக் கூடு பாய்வார்.

 


“காதல் யாத்திரைக்குப் பிருந்தாவனமும் கர்ப்பகச் சோலையும் ஏனோ”

 

https://www.youtube.com/watch?v=tdHbvt-Dn2g

 


என்று தெம்மாங்குப் பாட்டெடுப்பார்,

 

“அங்கமுத்து தங்கமுத்து தண்ணிக்குப் போனாளாம்”

 

https://www.youtube.com/watch?v=bz-FKcZwFUY

 

என்று துள்ளிசைப்பார்.

 


எத்தனைஎத்தனை விதவிதமான பாடல் பரிமாணங்கள் எல்லாவற்றிலும் ஒரு சுற்றுச் சுற்றிக் காட்டினார் ஏ.எல்.ராகவன்.

 

தமிழ்த் திரையிசையில் புதுமையாக கண்ணில் தெரியும் கதைகள்” படத்தில் கே.வி.மகாதேவன்ஜி.கே.வெங்கடேஷ், சங்கர் – கணேஷ்இளையராஜாஅகத்தியர் என்று ஐந்து இசையமைப்பாளர் கூட்டை வைத்துப் படமெடுத்துப் புதுமை பண்ணியவர்.

இளையராஜா காலத்திலும் “ஒரு கோடிப் பொய்யை” என்ற பாடலை ஓடி விளையாடு தாத்தா படத்தில் இளையராஜாஎல்.ஆர்.அஞ்சலிமலேசியா வாசுதேவன் ஆகியோரோடு இணைந்து பாடியவர்,

புதிய அடிமைகள் படத்திலும் ராஜா இசையில் “மானம் கருத்ததடி மேகம் தண்ணி மேகம்” https://www.youtube.com/watch?v=acSsYBKncwI என்று பாடியளித்திருக்கின்றார்.

 


ஏ.எல்.ராகவனின் பாடல் பொதிகள்

 

https://www.youtube.com/watch?v=x2YxxxH3elc



 

https://www.youtube.com/watch?v=eaKF2bLdAcA

 

 


எங்கிருந்தாலும் வாழ்க
உன் இதயம் அமைதியில் வாழ்க

 


No comments: