பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் - ஒரு தாய் மக்கள் - ச. சுந்தரதாஸ் - பகுதி 3

.


1971 ஆம் ஆண்டு புரட்சி நடிகர் எம் ஜி ஆரின் நடிப்பில் 4 படங்கள் வெளிவந்தன இவற்றுள் வெழிவந்த ஒரே கருப்பு வெள்ளை படம் தான் ஒரு தாய் மக்கள். காரணம் இந்த படம் 1967 ஆம் ஆண்டளவில் தயாராகத் தொடங்கியது. எம்ஜிஆர் சரோஜாதேவி ஜெய்சங்கர் நடிப்பில் கே ஷங்கர் இயக்கத்தில் உருவான படம் இடையே நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் சில ஆண்டுகள் கழித்து தயாரானபோது சரோஜாதேவிக்கு பதில் ஜெயலலிதா கதாநாயகியானார் . ஜெய்சங்கருக்குப் பதில் முத்துராமன் வந்தார் டைரக்ஷன் பொறுப்பு கே சங்கரிடம் இருந்து நீலகண்டன் இடம் கொடுக்கப்பட்டது. இவ்வாறு இழுபட்ட படமே 1971 இல் வெளிவந்தது.

இந்தியில் கலரில் வெளிவந்து வெற்றிபெற்ற ஆய் மிலன்சி பேலா என்ற படத்தை தழுவி இந்தப் படம் உருவானது. இந்தியில் ராஜேந்திர குமார், சைராபானு , தர்மேந்திரா ஆகியோர் நடித்தனர். தமிழ்ப் படத்தை கலைவாணர் என் எஸ் கிருஷ்ணரின் மனைவி மதுரத்தின் சகோதரர் டீ ஏ துரைராஜ் படத்தை தயாரித்திருந்தார்.

கடந்த வாரம் தனது 88வது வயதில் காலமான சொர்ணம் படத்தின் வசனத்தை எழுதி இருந்தார். கலைஞர் கருணாநிதியின் பெரியப்பாவின் பேரனான சொர்ணம் கலைஞர் பாசறையில் உருவாகி வசனகர்த்தாவாக திகழ்ந்தவர. எம் ஜி ஆர் நடித்த 16 படங்களுக்கு வசனம் எழுதிய பெருமை சொர்ணத்தைச் சாரும். எம் ஜி ஆர் கருணாநிதி இடையில் ஏற்பட்ட பிளவின் பின்னர் அம ஜி ஆர் படங்களுக்கு எழுதும் வாய்ப்பு அவரிடமிருந்து பறிபோக காரணமானது.


வீட்டுப் பணிப் பெண்ணான பாக்கியம் ஒரே பிரசவத்தில் இரு ஆண் குழந்தைகளை பெறுகிறாள் அதே சமயம் வீட்டு எஜமானிக்கு பிறக்கும் குழந்தை இறக்கவே ஒரு குழந்தையை தத்து கொடுக்கிறாள். கிராமத்தில் ஒரு குழந்தையும் நகரத்தில் ஒரு குழந்தையும் வளர்ந்து பின்னர் சந்தித்து நண்பர்கள் ஆகிறார்கள். ஆனால் செல்வநாயகம் என்ற செல்வந்தரின் மகள் ராதாவை இருவரும் காதலிக்கிறார்கள். இதனால் பல சிக்கல்கள் உருவாகின்றன.

படத்தில் பாக்கியமாக பண்டரிபாயும் அவளிடம் வளரும் மகனாக கண்ணனாக எம்ஜிஆரும் மற்றைய மகனாக முத்துராமனும் நடித்தனர். வில்லனாக நம்பியாரும் , நகைச்சுவையை வி கே ராமசாமி, சோ இருவரும் பார்த்துக்கொண்டனர். இந்தப் படத்தில் சங்கர்ஜெய்கிஷன் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகின. தமிழில் சியாம் சுந்தரின் பயிற்சியில் சண்டைக்காட்சிகள் தூள் கிளம்பின. ஆனாலும் கண்ணதாசனின் ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும் , வாலியின் கண்ணன் எந்தன் காதலன், பாடினாள் ஒரு பாட்டு பாடல்கள் விஸ்வநாதன் இசையில் கேட்கும்படி அமைந்தன. சுமாரான வரவேற்பையே படம் பெற்றது


No comments: