ஸ்வீட் சிக்ஸ்டி 8- நல்லவன் வாழ்வான் - ச சுந்தரதாஸ்

.  



அறிஞர் அண்ணாவை தன அரசியல் ஆசானாக வரித்துக் கொண்டவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அவரின் பெயரிலேயே அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி ஆட்சியைப் பிடித்தார். அண்ணாவின் வசனங்களை பேசி நடிக்க வேண்டும் என்ற ஆசையை எம்ஜிஆருக்கு ஏற்படவே அதன் பலனாக உருவான படம் தான் நல்லவன் வாழ்வான். எம் ஜி ஆரின் 50வது படமாக உருவான இதனை தயாரித்து இயக்கியவர் ப.நீலகண்டன்

இந்த படத்தின் மூலம்தான் எம்ஜிஆருக்கு ஏராளமான பாடல்களை எழுதிய வாலி முதன்முறையாக அவருக்கு பாடலை எழுதினார். சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் என்ற அந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது. அதேபோல் மிக அரிதாக இசையமைப்பாளர் டி ஆர் பாப்பா எம்ஜிஆரின் இந்தப் படத்திற்கு இசை அமைத்திருந்தார்.



நாத்திக கருத்துக்களை வலியுறுத்தும் கட்சியான திமுக காலக்கிரமத்தில் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று அண்ணா வினால் வழிமொழிய பட்டு கழகத்தின் கொள்கையானது. அதனை வலியுறுத்தும் விதத்தில் கவிஞர் ஆத்மநாதன் இயற்றிய ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் என்ற பாடல் எம் ஜி ஆர் பாடுவதாக அமைக்கப்பட்டு பட்டிதொட்டியெங்கும் பரவியது. இந்த காட்சியில் ஒரு துறவியாக காட்சி அளித்தார்.

படத்தில் நம்பியாருக்கு நல்லவன் வேடம் போலீஸ் இன்ஸ்பெக்டராக வந்து கொலை பழி சுமத்தப் பட்ட கதாநாயகனை கைது செய்ய பாடுபடுகிறார் அவருக்கு ஜோடி ஈ வி சரோஜா எம்ஜிஆருக்கு ஜோடியாக இந்தப் படத்தில் மட்டும் ராஜசுலோசனா நடித்தார்.

அண்ணாவின் வசனங்கள் கருத்துடன் அமைந்தன நடிகவேள் எம்ஆர் ராதா இதிலும் வில்லனாக வருகிறார். அரசியல்வாதியாக வரும் காட்சிகள் எல்லாமே கலகலப்பு.

ஊருக்கு நல்லது செய்யும் கதாநாயகன் வில்லனால் கொலை பழிக்கு ஆளாகிறான் மனைவி, தயைப் புரிகிறான் .ஆனாலும் நல்லவன் வாழ்வான் என்பதற்கு அமைய இறுதியில் வெற்றி பெறுகிறான் ஏனென்றால் நல்லவன் வாழ்வான்


No comments: