இப்படி எல்லாமே பறிபோகப்போகிறதே ! பொன் குலேந்திரன் - கனடா

 

கண்ணீர்  வடித்தேன்  என்  காணி  நிலை  கண்டு.

கண்டு  கொள்ளவில்லை  அந்த கயவர்கள் .

கடை சியில் கண்டு  பிடித்தனர்     புத்தர் சிலையொன்றை .

 

இந்த  காணி    பௌத்த  சிங்காவர்கள்  வாழ்ந்த   காணி

இது  எப்படி  உனக்கச்   சொந்தமாகும்?   

 இது அவர்கள்  என்னை கேட்ட  கேள்வி



 வன்னி .jpeg

அய்யா அம்மா  கொஞ்சம்   கேளுங்கோ\

ஆறுதலாய்  கொஞ்சம்   நிண்டு  கேளுங்கோ,.

ஆறுமுகத்தான்  நான்  சொல்லும்  என்    சோகக்  கதையை.

 

பண்டார வன்னியன்    என்ற   வீரன் ,

பறங்கி  படைக்கு  அஞ்சாத வீரன்,  என்

பூட்டனுக்கு  அவன்  கொடுத்த  என் காணி.

 

கடும்  உழைப்பில் காடு வெட்டி.

 சுட்ட    சாம்பலை  உரமாக்கி . வேலி  போட்டு.

கத்தரி , மிளகாய், வாழை நெல் ,  நான்  நட்டேன் .

 

காட்டு  பன்றி . யானை.   எருமை  உணவு தேடி

காணிக்குள்  என் உத்தரவின்றி  வந்தபோது,

 கடுமையாக   அவைகளை  எதிர்த்து  நின்றேன்.

 

 

காணிக்கு அருகில்   கனகராயன்     குளம்

கண்டவர்  மயங்கும்  தாமரைக்  குளம்

குளம் அருகில் கண்ணகி  அம்மன்  கோவில்  .

 

கடும்  உழைப்பில்   விளைந்த    நெல்லை நான்,

குடும்பத்துடன்  கூடிப்    பொங்கிப் படைத்து  ,

கண்ணகியிடம்  என் காணிக்கு நீ  காவல்  என்றேன் .

 

எங்கிருந்தோ   வந்த  ஆர்மி காரன் ,

எதுவும்  கேளாமல்   என்   காணிக்குள்   புகுந்து  காம்ப்  போட்டான் .

 எல்லாம்  அழிந்தன நான் வளர்த்த பயிர்கள்.

 

திடீர்  என்று ஒரு நாள்   வந்து  இறங்கியது   ஒரு கூட்டம்,  

 தோல்  பொருள்  ஆராச்சி  செய்கிறோம் என்று   சொல்லி.

தோண்டி  எடுத்தனர்   என் உயிருக்கு  உயியரன   காணியை.

 

கண்ணீர்  வடித்தேன்  என்  காணி  நிலை  கண்டு.

கண்டு  கொள்ளவில்லை  அந்த கயவர்கள் .

கடை சியில் கண்டு  பிடித்தனர்     புத்தர் சிலையொன்றை .

 

இந்த  காணி    பௌத்த  சிங்காவர்கள்  வாழ்ந்த   காணி

இது  எப்படி  உனக்கச்   சொந்தமாகும்?  

 இது அவர்கள்  என்னை கேட்ட  கேள்வி,

 

 வாயடைத்து  போய்  நான்   நின்றேன் ,

வந்து   என் காணியை  அபகரித்தவர்களைப்  பார்த்து. 

வீர  மறவன்  என்  பூட்டனுக்கு  கொடுத்  காணி என்றேன்

 

 அதெல்லாம்  நீ  சொல்வது    பொய்    என்றனர் ,

அரச   காணி இது  பௌத்த சிங்களவர்  முன்ப  வாழ்ந்த காணி.

அரச மரமும்  புத்தரும்   கண்ணகிக்கு துணையாய் தோன்றின.

 

  காணி நிலம்  இழந்த  நான்  பிச்சை எடுப்பதை,

 கண்டு  பரிதாபப்  பட்டு என் கதைகேட்பவர்  எவரும்  இல்லை.

கொஞ்சம் நிண்டு  அய்யா  அம்மா   நீங்களாவது  கேளுங்கோ  .


No comments: