என்றுமே உன் சிரிப்பால் இருந்திடுவாய் வாழ் வெல்லாம் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மெல்பேண் .. அவுஸ்திரேலியா
சிரிக்க வைத்த கலைவாணா
சென்று விட்ட தேனையா
விவேகமுடன் கதை சொல்லி
விதம்விதமாய் படந் தந்தாய்

சிந்திக்க வைத்து நின்றாய்
சிறப்பாக படித்துச் சொன்னாய்
சந்திக்கு மரம் நட்டாய்
சளைக்காது ஓடி நின்றாய்

பாரதத்தின் பெரும் விருதாய்
பத்மஶ்ரீ நீ பெற்றாய்
பலபேரும் மெச்சும் வண்ணம்
பசுமைக்கு வழி வகுத்தாய்

அப்துல்கலாம் எனும் ஆசான்
அருமைவழி நீ நடந்தாய்
ஆதலால் அனைவர் உள்ளம்
அமர்ந்து விட்டாய் அன்புவிவேக்

வெள்ளித் திரை புகுந்தாலும்
நல்லவற்றை நீ புகன்றாய்
துள்ளி வரும் சொற்புதையல்
சுதந்திரமாய் நீ அளித்தாய்

உன்பிரிவை பலர் எண்ணி
உளம் நொந்து நிற்கின்றார்
என்றுமே உன் சிரிப்பால்
இருந்திடுவாய் வாழ் வெல்லாம் 

No comments: