அன்று கவியரசு கண்ணதாசன் -இன்று கவிப்பேரரசு வைரமுத்து - பார்வதி சுப்பிரமணியன் பதிவு

.


கவிஞர் வைரமுத்து அவர்களை நேரில் சந்தித்து, எங்கள் கல்லூரி தமிழ் இலக்கிய விழாவில் உரை ஆற்ற அழைத்தோம்.
முதலில் அவர்களுடைய உதவியாளரை தொடர்பு கொண்டு பேசினோம். கவிஞரை நேரில் சந்திப்பதற்கு அனுமதி பெற்றோம்.

அவர்களை நேரில் சந்தித்தபோது அழைப்பிதழை வழங்கினோம். பின்பு விழாவினைப்பற்றிய விவரங்களை கேட்டறிந்தார் . அதன் பின் மகிழ்ச்சியோடு கலந்து கொள்வதாக உறுதி அளித்தார்.

ஆனால் அவர் தரப்பில் சில நிபந்தனைகள் வைக்கப்பட்டது. அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றோம். இறுதியாக ஒரு நிபந்தனை அதில் அவர் எழுதிய மூன்றாம் உலகப்போர் என்ற புத்தகத்தை 500 புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று கூறினார்கள்.

நாங்கள் அழைப்பு விடுத்திருந்த நிகழ்ச்சி மாணவர்களால் தங்கள் செலவில் நடத்த படுகின்ற நிகழ்ச்சி,

அப்போது அது மிகப்பெரிய தொகையாக இருந்தது .ஒரு புத்தகத்தின் விலை 240.
500 புத்தகங்களின் விலை 1,20,000 (ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் ). ஆகவே நாங்கள் 300 புத்தகங்கள் வாங்க சம்மதம் தெரிவித்தோம். அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்துவிட்டோம்.

இரண்டு நாட்களுக்கு பின்பு கவிஞருடைய வீட்டு தொலைபேசி எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது , அவருடைய உதவியாளர் பேசினார்.
மீண்டும் 500 புத்தகங்கள் வாங்கியாக வேண்டும் என்று கூறினார்.




அப்போது 500 புத்தங்கள் வாங்க நாங்கள் தயார் நிலையில் இருந்தாலும்,
இப்படிப்பட்டவர் இலக்கிய விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என்று முடிவுசெய்துவிட்டோம் .

ஒருவர் ஒரு புத்தகத்தை எழுதினால் அதை புத்தக ஆர்வலர்கள் தாங்களாகவே வாங்கவேண்டும், இப்படி வலுக்கட்டாயமாக தள்ளக்கூடாது .

பிரபலங்கள் எழுதுகின்ற புத்தகங்கள் இப்படித்தான் விற்பனை செய்யப்படுகின்றது

தமிழை வளர்ப்பவர்களை விட தமிழை வைத்து வாழ்பவர்கள் தமிழ்நாட்டில் அதிகம்

#ஃப்ளாஷ்பேக்

1979 என்று நினைக்கிறேன். எங்கள் கல்சுரல் விழாவிற்கு கவிஞர் கண்ணதாசன் சிறப்புரையாற்ற வந்திருந்தார்.

சிரித்த முகத்துடன் நெற்றியில் விபூதியுடன் பேசிக்கொண்டு இருந்தார்.

சொல்லி வைத்தாற்போல நாங்கள் அனைவரும் அவரின் அர்த்தமுள்ள இந்து மதம் பற்றியே கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தோம். சளைக்காமல் பதில் சொன்னார் கண்ணதாசன்.

விழா முடியும்போது ஒரு ஆட்டோ வந்தது. அதிலிருந்து பண்டல் பண்டலாக அவரது அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகத்தின் பிரதிகள் இறக்கப்பட்டன.

இப்போது நினைத்தாலும் அவரை நினைத்து கண்ணீர் வருகிறது.

அத்தனை புத்தகங்களையும் ஆர்வத்தோடு கேள்வி கேட்ட கேட்காத அத்தனை பேருக்கும் ஒரு பைசா வாங்காமல் இலவசமாக கொடுத்து படிக்கச் சொன்னார்.

அவர்தான் மனிதர்.. எழுத்தாளர்.. கவிஞர்.. எங்கள் வாழ்வியல் பேராசிரியர்..

அந்த ஞானி வெறும் அரசாம் இது பேரரசாம்

No comments: