.
ஒரு பிரமாண்ட மேடை அனுபவத்துக்குத் தயாராகின்றது சிட்னித் தமிழ் சமூகம்.
ஒரு பிரமாண்ட மேடை அனுபவத்துக்குத் தயாராகின்றது சிட்னித் தமிழ் சமூகம்.
விதை என்ற அமைப்பின் (Vidhai Entertainment) என்ற அமைப்பின் நிறுவகர் சக இயக்குநர் செல்வன் ஆதி ( ஆதித்தன் திரு நந்தகுமார்) இன் எண்ணக் கருவில் உருவான மேடைப் படைப்பு ஒன்று நிகழ் நடிப்பின் வழியே ஒரு திரை அனுபவத்தைத் தரப் போகின்றது.
இந்தப் படைப்பை இயக்கும் பொறுப்பை இன்னுமொரு இளையவரான செல்வன் ஜனா ( ஜனார்த்தன் குமார குருபரன்) ஏற்றிருக்கிறார்.
புகழேந்தி, ஆறு வயதில் இருந்து பல்கலைக் கழக மாணவர்கள், மூத்த நாடகக் கலைஞர்கள் உள்ளிட்டோரை உள்வாங்கி 60 க்கு மேற்பட்ட கலைஞர்கள், அரங்கக் கலை நிபுணர்களை ஒருங்கிணைத்து நிகழ்த்தப்படவிருக்கின்றது.
வீடியோஸ்பதி காணொளி வலைப்பதிவின் சந்திப்பாக செல்வன் ஆதி மற்றும் செல்வன் ஜனாவைச் சந்தித்தேன்.
அந்த உரையாடலின் காணொளியோடு “புகழேந்தி” முன்னோட்டமும் இதோ
விதை அமைப்பின் எதிர்காலப் பல்லூடக முயற்சிகள், புகழேந்தி உருவான கதை இவற்றோடு கட்டம் கட்டமாக அறுபது கலைஞர்களை ஒருங்கிணைத்த ஒத்திகை அனுபவங்களை இவ்விருவரும் விபரிக்கிறார்கள்.
புகழேந்தி
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு
The Science Theatre
F13, UNSW, Union Rd, Kensington NSW 2033, Australia
அரங்கத்தில் நிகழவிருக்கின்றது.
No comments:
Post a Comment