உலகச் செய்திகள்


கலிபோர்னியாவில் படகில் தீ – 35 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

லண்டனில் இந்திய தூதரகம் எதிரே பாகிஸ்தானியர்கள் வன்முறை போராட்டம்

பிரக்ஸிட் முக்கிய வாக்கெடுப்பில் பிரித்தானிய பிரதமர் தோல்வி ; தேர்தல் அறிவிப்புக்கு தயாராகும் பிரித்தானியா !

நாடுகடத்தல் சட்டமூலத்தை வாபஸ் பெற்றது ஹொங்கொங்

ரஷ்யா - சென்னை இடையே விரைவில் நேரடி கப்பல் போக்குவரத்து- மோடி

காபூல் அமெரிக்க தூதரகம் அருகே குண்டுவெடிப்பு - 10 பேர் பலி ; 42 பேர் காயம்

எனது மகன் கண்ணெதிரே நீரில் அடித்துசெல்லப்படுவதை பார்த்தேன் - பஹாமாஸ் தந்தையின் துயரம்

பிரித்­தா­னிய பிர­த­மரின் தேர்­தலை முன்­கூட்­டியே  நடத்தும்  திட்டத்துக்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முட்­டுக்­கட்டை

டோறியன் சூறாவளியால் 30 பேர் உயிரிழப்பு

சந்திரயான் -2 ன் தொடர்பு துண்டிப்பு : மோடியை கட்டித்தழுவி அழுத இஸ்ரோ தலைவர் சிவன்..! 

காஸாவில் ஆர்ப்பாட்டம்- 14 வயது சிறுவன் உட்பட இருவர் இஸ்ரேலிய படையினரால் சுட்டுக்கொலை

தெலுங்கானா ஆளுநராகப் பதவியேற்றார் தமிழிசை..!


கலிபோர்னியாவில் படகில் தீ – 35 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

02/09/2019 அமெரிக்காவின் கலிபோர்னியாவில் படகொன்றில்  ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 35 அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
கலிபோர்னியாவின் தென்பகுதியில் படகொன்றில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட படகில் 35 பேர் பயணித்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சன்டா பாபர கவுண்டியின் தீயணைப்பு பிரிவினர் படகிலிருந்து தங்களிற்கு அபாய சமிக்ஞை கிடைத்தது என தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறிப்பிட்ட படகில் ஏற்பட்ட தீயை அணைப்பது கடினமாகவுள்ளது சில நிமிடத்திற்கு தீ தணிகின்றது பின்னர் மூள்கின்றது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
படகில் உள்ள எரிபொருள் காரணமாகவே இந்த நிலை ஏற்படுகின்றது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பல கப்பல்கள் படகில் ஏற்பட்டுள்ள தீயை அணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன ஆனால் எங்களால் உள்ள செல்லவோ யாராவது உயிர் தப்பியுள்ளனரா என்பதை உறுதிப்படுத்தவோ முடியவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
படகிலிருந்தவர்கள் எவராவது நீந்தி உயிர் தப்பியிருக்கவேண்டும் என்பதே எங்கள் நம்பிக்கை ஆனால் நாங்கள் மோசமான சம்பவத்திற்காக தயாராகிவருகின்றோம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  நன்றி வீரகேசரி 









லண்டனில் இந்திய தூதரகம் எதிரே பாகிஸ்தானியர்கள் வன்முறை போராட்டம்

04/09/2019 லண்டனிலுள்ள இந்திய தூதரகம் எதிரே பாகிஸ்தானியர்கள் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. 
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 ஆவது சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. அத்துடன் அந்த மாநிலமானது ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக்  என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.  இந்த முடிவுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 
 இந்நிலையில், பாகிஸ்தானியர்கள் மற்றும் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு திடீரென திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய அரசுக்கு எதிராக கோஷமிட்ட அவர்கள் திடீரென வன்முறையில் ஈடுபட்டனர். தூதரக அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டம் தொடர்பான தகவல் மற்றும் வீடியோ பதிவை இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.
இந்த வன்முறைப் போராட்டத்திற்கு லண்டன் மேயர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இந்த விடயத்தில் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். 

இதேபோல் கடந்த மாதமும் இந்திய தூதரகம் எதிரே பாகிஸ்தானியர்கள் தங்கள் நாட்டு கொடிகளை கைகளில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 








பிரக்ஸிட் முக்கிய வாக்கெடுப்பில் பிரித்தானிய பிரதமர் தோல்வி ; தேர்தல் அறிவிப்புக்கு தயாராகும் பிரித்தானியா !

04/09/2019 பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து உடன்­ப­டிக்கை எது­வு­மின்றி வில­கு­வது,  அது குறித்து எதிர்ப்பைத் தெரி­வித்து வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களால்  இன்று தோற்­க­டிக்­கப்­பட்டுள்ளது.­
பிரித்­தா­னியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வில­கு­வது தொடர்­பாக பாராளுமன்றில் நடந்த  வாக்­கெ­டுப்பில் ஆதரவாக 328 வாக்குகளும், எதிராக 301 வாக்குகளும் கிடைத்துள்ளது.
இந்த வாக்குப்பதிவு பற்றி குறிப்பிட்டு பதிலளித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், நாட்டில் பொதுத்தேர்தல் வழக்கத்தைவிட முன்னதாகவே நடத்திட வழிசெய்யும் மசோதாவை தான் கொண்டுவர உள்ளதாக தெரிவித்தார்.
தேர்தல் நடப்பதற்குமுன் பிரெக்ஸிட் தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் என்று தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெர்மி கார்பைன் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த 21 எம்பிக்கள் எதிர்கட்சிகளுடன் இணைந்து அரசின் முயற்சியை தோற்கடித்துள்ளனர்.
இந்த வாக்குப்பதிவுக்கு பிறகு, கட்சியின் கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்த எம்பிக்கள் கட்சியை விட்டு நீக்கப்படுவர் என்று அரசுத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் ஒன்றை நடத்­து­வ­தற்கு தான் விரும்­ப­வில்லை என்ற போதும்  உடன்­ப­டிக்­கை­யின்றி பிரித்­தா­னியா வில­கு­வது தொடர்­பான வாக்­கெ­டுப்பில் அது குறித்து எதிர்ப்பைக் கொண்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் வெற்றி பெற்றால் அவ்­வி­வ­கா­ரத்தில் முன்­னேற்ற நிலையை  எட்­டு­வது சாத்­தி­ய­மற்றுப் போய்­வி­டலாம் என்­பதால் தேர்­த­லொன்றை நடத்த வேண்­டிய நிர்ப்­பந்த நிலை ஏற்­பட்­டுள்­ள­தாக  பிரித்­தா­னிய பிர­தமர் போரிஸ் ஜோன்ஸன் கூறினார். 
டோரி கட்­சி­யி­லுள்ள எதிர்ப்­பா­ளர்கள்  தொழில் கட்­சி­யி­ன­ருடன் இணைந்து  எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் 31 ஆம் திகதி பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து உடன்­ப­டிக்கை எது­வு­மின்றி வில­கு­வதை தடுத்து நிறுத்­து­வ­தற்­கான சட்­ட­மூ­ல­மொன்றை கொண்டு வரும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்­ளனர்.
அந்த சட்­ட­மூலம்   பிரித்­தா­னியா  ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து வில­கு­வ­தற்­கான பிறிக்ஸிட் செயற்­கி­ர­மத்தை  எதிர்­வரும் ஆண்டு ஜன­வரி 31ஆம் திகதிவரை ஒத்­தி­வைக்க பிர­த­மரை நிர்ப்­பந்­திக்கும் வகையில் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது.  நன்றி வீரகேசரி 










நாடுகடத்தல் சட்டமூலத்தை வாபஸ் பெற்றது ஹொங்கொங்

04/09/2019 சீனாவின் ஹொங்கொங் விசேட நிருவாகப் பிராந்தியத்தில் வன்முறை ஆர்ப்பாட்டங்களுக்கு காரணமான சர்ச்சைக்குரிய நாடுகடத்தல் சட்டமூலத்தை திரும்பப் பெறுவதாக ஹொங்கொங் தலைவர் கேரீ லாம் அந்நாட்டு ஊடகங்கள் மூலம் அறிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹொங்கொங்கில் குற்ற வழக்குகளில் சிக்கும் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்க வகை செய்யும் சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் வெடித்தன.
இந்த போராட்டங்கள் ஹொங்கொங்கை பெரும் சிக்கலுக்குள் உள்ளாக்கியதையடுத்து கைதிகள் பரிமாற்ற சட்டமூலம் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.
எனினும் சட்டமூலத்தை முழுமையாக கைவிட வலியுறுத்தியும், கூடுதலான ஜனநாயக உரிமைகளை கோரியும் ஹொங்கொங்கில் போராட்டங்கள் தொடர்கின்றன.
ஜனநாயக ஆர்வலர்கள் முன்னெடுத்த இந்த போராட்டங்களில் மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என பல தரப்பினரும் கைகோர்த்ததால் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
ஜூன் மாதத்தில் இருந்து நடைபெற்று வரும் குறித்த போராட்டங்கள் தொடர்பாக இதுவரை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், சீனா தனது இராணுவத்தை பயன்படுத்தி ஹொங்கொங்  போராட்டத்தை ஒடுக்க முயற்சித்தது. இதற்காக ஹொங்கொங்  எல்லையில் சீனா இராணுவ தளவாடங்களை குவித்து வருகிறது.
இதற்கிடையில், ஹொங்கொங்கிற்கு சர்வதேச வாக்குரிமை மறுக்கப்பட்டதன் 5 ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி மாபெரும் பேரணி நடைபெற்றது.
தடையை மீறி இந்த பேரணி நடந்ததால், பொலிசார் போராட்டக்காரர்களை கலைக்க முற்பட்டனர். இதில் பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது.
ஹொங்கொங்கின் பல்வேறு நகரங்களிலும் பொலிசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் சம்பவங்கள் அரங்கேறின. குறிப்பாக ஹொங்கொங்  பாராளுமன்றம் அமைந்துள்ள பகுதி கலவர பூமியாக மாறியது.  
இந்த நிலையில், ஆர்ப்பாட்டங்களைத் தூண்டிய  ஒப்படைப்பு சட்டமூலத்தை திரும்பப் பெறுவதாக ஹொங்கொங் தலைவர் கேரீ லாம் அறிவித்துள்ளதாக அங்குள்ள  ஊடக அறிக்கைகளை மேற்கோள் காட்டி சர்வதேச செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளன.  நன்றி வீரகேசரி 









ரஷ்யா - சென்னை இடையே விரைவில் நேரடி கப்பல் போக்குவரத்து- மோடி

04/09/2019 ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரில் இருந்து சென்னைக்கு நேரடியாக முழுநேர கப்பல் போக்குவரத்து விரைவில் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
அரசமுறை பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் விளாடிவாஸ்டோக் நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்தை பார்வையிட்டார்.
பின்னர் இந்தியா-ரஷியா இடையில் பல்வேறு புதிய ஒப்பந்தங்களும் 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
இதன்போது, ஜனாதிபதி புடினுடன் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் நரேந்திர மோடி 'இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நல்லுறவு இருநாடுகளின் தலைநகரங்களுக்கு மட்டும் இடையிலான உறவல்ல, இந்த நல்லுறவில் இருநாடுகளை சேர்ந்த அனைத்து மக்களும் இணைக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், ரஷ்யாவின் விளாடிவ்ஸ்டோக் நகரில் இருந்து சென்னைக்கு நேரடியாக முழுநேர கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது’ என தெரிவித்தார்.  நன்றி வீரகேசரி 










காபூல் அமெரிக்க தூதரகம் அருகே குண்டுவெடிப்பு - 10 பேர் பலி ; 42 பேர் காயம்

05/09/2019 ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் படையினர் உட்பட 10 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 42 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
காபூலின் கிழக்குப் பகுதியில் அமெரிக்க தூதரத்துக்கு அருகே காரில் வைக்கப்பட்ட குண்டொன்றே இவ்வாறு வெடித்துள்ளது. சம்வத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப் படையும் அங்கு முகாமிட்டுள்ளது.இதில் சில நாட்களுக்கு தலிபான்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண தலிபான்களுடன் ஆப்கானிஸ்தான் அரசும், அமெரிக்க அரசும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்ற நிலையிலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலை தலிபானியர்கள் மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்களும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 








எனது மகன் கண்ணெதிரே நீரில் அடித்துசெல்லப்படுவதை பார்த்தேன் - பஹாமாஸ் தந்தையின் துயரம்

05/09/2019 பஹாமாஸை உலுக்கியுள்ள டோரியன் சூறாவளி காரணமாக ஏற்பட்டுள்ள பாரிய அழிவுகள் குறித்து விபரங்கள் வெளியாக தொடங்கியுள்ளன.
டோரியன் சூறாவளி காரணமாக 20ற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளனர்.
சூறாவளி காரணமாக அனைத்து முற்றாக அழிக்கப்பட்டுவிட்டன என இயற்கை அனர்த்தத்திலிருந்து உயிர் தப்பிய பலர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஐம்பது வருடங்களாக பகாமாசின் அபாகோ தீவுகளில் வசிந்து வந்த ரொபேர்ட் பைலிஸ் கோர்னியா தம்பதியினர் ஞாயிற்றுக்கிழமை முதல் நாங்கள் வீடற்றவர்களாக மாறிவிட்டோம் என தெரிவித்துள்ளனர்.
அனைத்து முக்கிய கட்டிடங்களும் அழிந்துவிட்டன் அனைத்தும் போய்விட்டன என் பைலிஸ் கோர்னியா தெரிவித்துள்ளார்.
என்னை ஒரு படமெடுங்கள் ஏனென்றால் தற்போது எஞ்சியிருப்பது நானே என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சிபிஎஸின் செய்தியாளர்  தனது மகனை இழந்த அட்ரியன் பெரிங்டன் என்பவருடன்  உரையாடியுள்ளார்.
எனது மகன் நீரில் அடித்துச்செல்லப்பட்டதை பார்த்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளத்திலிருந்து காப்பாற்றுவதற்காக எனது ஐந்து வயது மகனை வீட்டின் கூரையில் ஏற்றிவிட்டேன் ஆனால் அவன் பின்னர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டான் என அவர் தெரிவித்துள்ளார்.
எனது மகன் காப்பாற்றப்பட்டால் கடவுளிற்கு நன்றி சொல்லுங்கள் ஆனால் எதுவேண்டுமென்றாலும் நடக்கலாம் நீரில் சுறாக்களை நான் பார்த்தேன் என அட்ரியன் பெரிங்டன் தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ் செய்தியாளர் டேவிட் பெக்னட் பகாமாசில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட டிரெசர் கே பகுதிக்கு சென்று உயிர்தப்பியவர்களுடன்  உரையாடியுள்ளார்.நான்சி அல்பேர்ட் என்ற பெண்மணி தனது வீடு எப்படி காணாமல்போனது என்பதை விபரித்துள்ளார்.
நாங்கள் எங்கள் கழிவறைக்கான கதவை திறந்தோம்,அங்கு எதுவுமேயிருக்கவில்லை,அது காணாமல்போயிருந்தது வீடே காணாமல் போயிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பகாமாசில் டோரியன் சூறாவளியில் சிக்கிய அவுஸ்திரேலிய பிரஜைகள் சமுத்திரம் எப்படி பகாமாஸ் தீவை விழுங்கியது என வர்ணித்துள்ளனர்.
இந்த சூறாவளி  மிகவும் அச்சமூட்டுவதாக காணப்பட்டது,அது நிற்கவேயில்லை அது தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருந்தது நாங்கள் அச்சமடைந்தோம் என அவுஸ்திரேலிய பெண்கள் இருவர் தெரிவித்துள்ளனர்.
சமுத்திரம் தீவை விழுங்கியது பல வீடுகளையும் விழுங்கியது என ஸ்கெனே என்ற பெண்மணி தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்படாத  தென்பகுதியில் வசிக்கின்றோம் நாங்கள் அதிஸ்டசாலிகள் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சூறாவளி தாக்கிய பின்னர் அயல் என்ற ஒன்றேயில்லாமல் போயுள்ளது என பகாமாசின் அபாகொஸ் பகுதியில் வசிக்கும் சரோன் ரோல் என்பவர் சிஎன்எனிற்கு தெரிவித்துள்ளார்.
இங்கு எதுவுமில்லை, நாங்கள் காரிற்குள் இருக்கின்றோம்,அடுத்து என்ன நடவடிக்கையை எடுப்பது என சிந்திக்கின்றோம்,நாங்கள் அச்சத்தில் உள்ளோம் அதிகாரிகளை நாங்கள் பார்க்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த இடங்களில் பல மரணங்கள் நிகழ்ந்துள்ளன பாரிய குழப்பமும் அழிவும் காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  நன்றி வீரகேசரி 










பிரித்­தா­னிய பிர­த­மரின் தேர்­தலை முன்­கூட்­டியே  நடத்தும்  திட்டத்துக்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முட்­டுக்­கட்டை

06/09/2019 பிரித்­தா­னிய தொழிற்­கட்சித் தலைவர் ஜெரேமி கொர்பைன்  பொதுத் தேர்­தலை நடத்­து­வ­தற்கு ஆத­ர­வ­ளிக்­கா­ததன் மூலம் ஜன­நா­ய­கத்தை கோழைத்­த­ன­மான முறையில்  அவ­தூறு செய்­துள்­ள­தாக  பிர­தமர் போரிஸ் ஜோன்ஸன் குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார்.
 முன்­கூட்­டியே தேர்­தலை நடத்­து­வ­தற்­கான போரிஸ் ஜோன்­ஸனின் திட்­டத்­துக்கு அந்­நாட்டு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை முட்­டுக்­கட்டை போட்­டி­ருந்­தனர்.
 அந்­நாட்டின் நிழல் அதி­ப­ரான ஜோன் மக்­டொன்னல் இது குறித்து தெரி­விக்­கையில், தொழிற்­கட்சி முன்­கூட்­டி­யே­ தேர்­தலை நடத்து­வ­தற்கு விருப்பம் கொண்­டுள்­ள­தா­கவும்  ஆனால்  பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து உடன்­ப­டிக்­கை­யின்றி வெளியே­று­வதை தடுப்­ப­தற்கு அது முன்­னு­ரிமை கொடுப்­ப­தா­கவும் கூறினார்.
அத்­துடன் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான தினம் குறித்தும்  கட்­சிக்குள் வேறு­பா­டுகள் காணப்­ப­டு­வ­தாக அவர் தெரி­வித்தார்.
 அதனால் தலை­மைத்­து­வ­மா­னது எதனைச் செய்­வது என்­பது தொடர்பில் சட்­ட­நி­பு­ணர்­க­ளு­டனும்  ஏனைய எதிர்க்­கட்­சி­க­ளுடனும் கலந்­து­ரை­யா­டி­வ­ரு­வ­தாக  அவர் கூறினார்.
விரை­வாக அல்­லாது பின்­ன­ரான ஒரு தேர்­த­லையே தான்  விரும்­பு­வ­தாக அவர் குறிப்­பிட்டார்.
ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து பிரித்­தா­னியா உடன்­ப­டிக்­கை­யின்றி வில­கு­வதை தடுக்கும் சட்­ட­மூ­ல­மொன்று இன்று வெள்ளிக்­கி­ழமை பிர­புக்கள் சபையில் முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அர­சாங்கம் தெரி­வித்­தி­ருந்த நிலை­யி­லேயே ஜோன் மக்­டொன்­னலின் விமர்­சனம் வெளியா­கி­யுள்­ளது.
அந்த சட்­ட­மூ­லத்­துக்கு  சர­ண­டை­வது பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து வில­கு­வ­தற்­கான பிறிக்ஸிட் செயற்­கி­ரமம் தொடர்பில் மேலும் குழப்­பமும் தாம­தமும் ஏற்­ப­டவே வழி­வகை செய்யும் என பிர­தமர் போரிஸ் ஜோன்ஸன் எச்­ச­ரித்­துள்ளார்.
அந்த சட்­ட­மூலம்  பிரித்­தா­னிய வர­லாற்றில் மிகவும் பெரிய ஜன­நா­யக ரீதி­யான வாக்­கெ­டுப்­பாக கரு­தப்­படும் 2016 ஆம் ஆண்டு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை மாற்­று­வ­தாக உள்­ள­தாக  பிர­த­மரின் அலு­வ­லகம் குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளது.
அதே­ச­மயம்  தொழிற்­கட்சி மற்றும் ஏனைய எதிர்க்­கட்­சி­களைச் சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்பினர்கள்  எதிர்வரும் ஒக்டோபர் 31ஆம் திகதி  பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உடன்படிக்கை எதுவுமின்றி  விலகும் அதேவேளை  பொதுத் தேர்தலை நடத்துவதற்கு  போரிஸ் ஜோன்ஸனால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு தாம் ஆதரவளிக்கப் போவதில்லை என  தெரிவிக்கின்றனர்.  நன்றி வீரகேசரி 











டோறியன் சூறாவளியால் 30 பேர் உயிரிழப்பு

06/09/2019 பஹ­மாஸை தாக்­கிய  டோறியன் சூறா­வ­ளியில் சிக்கி பலி­யா­ன­வர்­களின்  தொகை 30  ஆக உயர்ந்­துள்­ளது.
இந்நிலையில் மேலும் உயிரிழப்புகள் அதிகாரிக்கலாம் என அந்நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளது.
இந்த சூறா­வ­ளியால்  பஹ­மாஸில்  துறை­மு­கங்கள், கடைகள்,  வேலைத்­த­ளங்கள், மருத்­து­வ­ம­னை­யொன்று, விமான நிலையம் என்­பன கடும் சேதத்­திற்­குள்­ளா­கி­யுள்­ளன. 
தற்­போது அந்த சூறா­வளி மேலும் பலம் பெற்று  அமெ­ரிக்­காவை நோக்கி நகர்ந்து வருகிறது.  நன்றி வீரகேசரி 








சந்திரயான் -2 ன் தொடர்பு துண்டிப்பு : மோடியை கட்டித்தழுவி அழுத இஸ்ரோ தலைவர் சிவன்..! 

07/09/2019 நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் ஒரு கலமான விக்ரம், நிலவில் தரையிறங்க 2 கிலோ மீற்றர், தூரம் இருந்த நிலையில் கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை இழந்த நிலையில் விஞ்ஞானிகள் பெறும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த நிகழ்வை பிரதமர் மோடி, இஸ்ரோ மையத்தில் இருந்து நேரடியாக பார்வையிட்டார். விக்ரம் உடனான தொடர்பை பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்ற இந்நிலையில்,
சந்திரயான் 2 விண்கலத்துடனான தொடர்பு 5 சதவீதம் மட்டுமே இழந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
அத்தோடு விஞ்ஞானிகளிடம் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள் என தெரிவித்த பிரதமர் மோடி மேலும் தெரிவித்ததாவது,
"உங்களின் கனவுகளும், திட்டங்களும் என்னை விடவும் வலிமையானவை. உங்களை சந்தித்து உரையாட வந்த நான், உங்களிடம் இருந்து ஊக்கத்தை பெற்றுக் கொண்டேன் " என விஞ்ஞானிகளிடம் தெரிவித்தார்.
நம்பிக்கையான வார்த்தைகளை பேசிய  பிரதமர் மோடியின் உரையை கேட்ட பெண் விஞ்ஞானிகள் சிலர் கண்ணீர் விட்டு அழுதனர்.
உரையை நிறைவு செய்து புறப்பட்ட மோடியை வழியனுப்ப சென்ற இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் விட்டு அழுதமை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. 

நன்றி வீரகேசரி 












காஸாவில் ஆர்ப்பாட்டம்- 14 வயது சிறுவன் உட்பட இருவர் இஸ்ரேலிய படையினரால் சுட்டுக்கொலை

07/09/2019 காஸா பள்ளத்தாக்கில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது இஸ்ரேலிய படையினர் இரு இளைஞர்களை சுட்டுக்கொன்றுள்ளனர் என பாலஸ்தீன மருத்துவவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
14 வயது அலிரபாயும் 17 வயது அலி அல் அஸ்கரும் இஸ்ரேலிய படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் 38 பேர் காயமடைந்துள்ளனர் என பாலஸ்தீன மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயங்களை அவதானிக்கும்போது கொலை செய்யவேண்டும் என்ற நோக்கத்துடனேயே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றமை புலனாகியுள்ளது என பாலஸ்தீன மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் 5000ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர் என பாலஸ்தீன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை காஸா எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த தமது படையினர் 6000ற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது சிலர் வெடிபொருட்களையும் குண்டுகளையும் வீசினார்கள் என இஸ்ரேலிய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர் எல்லையை கடந்து உள்ளே நுழைந்த பின்னர் திரும்பிச்சென்றனர் என தெரிவித்துள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு வட்டாரங்கள் தமது படையினர் கலகம் அடக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
1948இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்ட பின்னர் தாங்கள் தப்பியோடிய பகுதிகளிற்கு மீண்டும் திரும்புவதற்கான உரிமையை கோரியும்  பொருளாதார தடைகளை விலக்குமாறு கோரியும் கடந்த 18 மாதங்களாக பாலஸ்தீன மக்கள் வாராந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2018 மார்ச்சில் இந்த ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் 210 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை இந்த சம்பவங்களின் பின்னர் பாலஸ்தீனிய பகுதிகளில் இருந்து இஸ்ரேலை நோக்கி சிறிய ரொக்கட் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் பின்னர் ஹமாசின் பகுதிகளை நோக்கி விமானதாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.  நன்றி வீரகேசரி 









தெலுங்கானா ஆளுநராகப் பதவியேற்றார் தமிழிசை..!

08/09/2019 இந்தியாவின், தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் இன்று பதவியேற்றுள்ளார்.
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் , தெலுங்கானா மாநில முதல் பெண் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமை முக்கிய அம்சமாகும். இன்று காலை ஐதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநராக பொறுப்பேற்று கொண்டுள்ளார்.  அவருக்கு அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, ராகவேந்திரா எஸ்.சவுகான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்ற பின், தனது தந்தை குமரி அனந்தன் மற்றும் தாய் காலில் விழுந்து தமிழிசை சௌந்தரராஜன் ஆசி பெற்றுள்ளமையும் குறிப்பிடதக்கது. 


பதவியேற்பு விழாவில், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், மாநில அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 
தமிழகத்தின் சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், ராதிகா சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா, சுதீஷ் , ஏ.சி.சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  நன்றி வீரகேசரி 






No comments: