இலங்கைச் செய்திகள்


ராஜபக்ஷ தரப்பினர் தமிழர்களைப் படுகொலை செய்த இனப்படுகொலையாளிகள் - ஸ்ரீதரன்

சியோன் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்கள் தோண்டி எடுப்பு

கிளிநொச்சியிலிருந்து நல்லிணக்கத்துக்கான நடைபயணத்தை தொடர்ந்த உயர்தர மாணவர்கள்

பலாலி விமான நிலைய அபிவிருந்திப் பணிகளை நேரில் ஆராய்த அர்ஜூன

யாழ். நோக்கி செல்லும் ஸ்ரீதேவி

கோத்தபாயவின் நிகழ்வில் முரளீதரன் - தெரிவித்திருப்பது என்ன?

விடுதலைப்புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிகப்பெரும் நாள்- கோத்தபாயவின் நிகழ்வில் முரளீதரன்- இரண்டாம் இணைப்பு



ராஜபக்ஷ தரப்பினர் தமிழர்களைப் படுகொலை செய்த இனப்படுகொலையாளிகள் - ஸ்ரீதரன்

02/09/2019 மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் தமிழர்களைப் படுகொலை செய்த இனப்படுகொலையாளிகளாவர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.
அத்துடன் மஹிந்த தரப்பினர் தேர்தல் காலத்தில் மாத்திரம் மழைக்காலத்தில் கத்துகின்ற தவளைகள் போன்று 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாகப் பொய்யான வாக்குறுதிகளை வழங்கிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகக் கூறுவார்கள்.
13 ஆவது திருத்தத்தைப் பொறுத்தவரை எவ்வித சமரசங்களுமின்றி இணைந்த வடகிழக்கில் காணி, பொலிஸ் அதிகாரங்களைத் தருவதற்குச் சம்மதித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தயாரான எந்தவொரு தரப்பினருடனும் பேச நாங்களும் தயாராகவே இருக்கின்றோம் என்றும் கூறினார்.
தேசிய பிரச்சினைக்குத் தீர்வாக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம். அதனைப் பொறுத்தவரை தற்போது காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களே சிக்கலுக்குரியதாகக் காணப்படுகின்றன. எனவே அவை தொடர்பிலும் அரசியல் தீர்வு குறித்தும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தயாராக இருக்கின்றோம். ஆனால் அவர்கள் வேறு எவருடைய நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக செயற்பட்டால் நாங்கள் தமிழ் மக்களுடன் நேரடியாகப் பேச்சு நடத்துவோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல கூறியிருக்கிறார். 
இதுகுறித்து வினவிய போதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.  நன்றி வீரகேசரி 










சியோன் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்கள் தோண்டி எடுப்பு

02/09/2019 சியோன் தேவாலயத்தில் தற்கொலைகுண்டுத்தாக்குதலை நடத்திய பயங்ரவாதியின் தலை மற்றும் உடற்பாகங்கள் இந்து மாயனத்தில் புதைக்கப்பட்டதை அடுத்து குறித்த உடற்பாகங்கள் இன்று தோண்டி எடுக்கப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு நீதவான் நீதமன்றத்தின் உத்தரவின் கீழ் தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்டு வருகின்றது.
குண்டுதாரியின் தலை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த உடற்பாகங்கள் இந்து மாயனத்தில் புதைக்கப்பட்டமை தொடர்பில் அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ததை தொடர்ந்து இன்று தோண்டி எடுக்கப்பட்டு வருகின்றது. நன்றி வீரகேசரி 










கிளிநொச்சியிலிருந்து நல்லிணக்கத்துக்கான நடைபயணத்தை தொடர்ந்த உயர்தர மாணவர்கள்

02/09/2019 பருத்தித்துறையிலிருந்து தேவேந்திர முனை நோக்கி உயர்தர மாணவர்கள் இருவரால் ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம் கிளிநொச்சியிலிருந்து இராண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக மட்டக்களப்பு புனித மிக்கேல் பாடசாலை மாணவர்களால் நேற்று முந்தினம் இந்த நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த நடைபயணம் நேற்று பிற்பகல் கிளிநொச்சியை சென்றடைந்திருந்த நிலையில், மீண்டும் அவர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கிளிநொச்சியிலிருந்து தமது பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
கிளிநொச்சி டிப்போ சந்தியிலிருந்து நேற்று காலை 6.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடை பயணம் வவுனியா புளியங்குளம் பகுதியில் நேற்று மாலை நிறைவடையவுள்ளது.
இம்மாணவர்களின் நடைபயணத்திற்கு பலரும் தமது ஆதரவினை வெளிப்படுத்தி வருவதுடன் பயணத்தின் நடுவே அவர்களை சந்தித்து தமது மகிழ்ச்சியினையும் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து நாட்டில் நிலவிய இனங்களுக்கிடையிலான முறுகல் நிலை மற்றும் பாதுகாப்பு அற்ற நிலை காரணமாக சுற்றுலாத்துறையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது.
இந்நிலையில் குறித்த பாதுகாப்பற்ற நிலை தற்போது இல்லை என்பதனை அறிவித்தல் மற்றும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றை மையப்படுத்தி இந்த பயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது  நன்றி வீரகேசரி 










பலாலி விமான நிலைய அபிவிருந்திப் பணிகளை நேரில் ஆராய்த அர்ஜூன

05/09/2019 பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இன்று நேரில் ஆராய்ந்தனர். அமைச்சர் தலைமையில் 80 பேர் கொண்ட குழுவினர் இதுதொடர்பில் ஆராய்ந்தனர்.
யாழ்ப்பாணம் பலாலி விமானத் தளம் பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்தும் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பலாலி பிராந்திய விமான நிலையம் ஒக்டோபர் 15ஆம் திகதி சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்படுகிறது. அன்றிலிருந்து இந்தியாவுக்கான விமான  சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.அதற்காக அபிவிருத்திப்பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன.
விமான நிலைய அபிவிருத்தியின் போது ஓடுபாதைகள் சீரமைப்பு செய்யப்படுவதுடன் பயணிகள் விமான நிலையத்துக்குள் வருவதற்கு காங்கேசன்துறை பக்கமாக உள்ள வீதி சீரமைக்கப்படுகிறது.இந்த அபிவிருத்திப் பணிகளை பார்வையிட கொழும்பிலிருந்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான குழுவினர் இன்று காலை பலாலிக்கு வருகை தந்தனர்.
இதையடுத்து அங்கு சென்ற குழுவினரை ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தியாகராஜா துவராகேஸ்வரன் வரவேற்றார்.
அவர்களுடன் வந்த குழுவில் சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள், சுங்கத் திணைக்கள அதிகாரிகள், பொறியியலாளர்கள் மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலர் சிவசிறி,விமானப்படை அதிகாரிகள் கலந்துகொண்டு அபிவிருத்தி பணி தொடர்பில் ஆராய்ந்தனர்.  நன்றி வீரகேசரி 










யாழ். நோக்கி செல்லும் ஸ்ரீதேவி

05/09/2019 ஸ்ரீதேவி என்ற பெயரிலான நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் ஒன்று கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசந்துறை ரயில் நிலையம் வரையில் சேவையில் ஈடுபடவிருப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
4003 என்ற இலக்கம் கொண்ட ரயில் இன்று பிற்பகல் 3.55 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் இந்நிலையில் இரவு 8.15 மணிக்கு வவுனியா ரயில் நிலையத்தை சென்றடையும். 
இந்த ரயில் வவுனியா ரயில் நிலையத்தில் இருந்து அறிவியல் நகர் கிளிநொச்சி, கொடிகாமம், யாழ்ப்பாணம் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நிறுத்தப்படும்.
அதன் பின்னர் இந்த ரயில் இரவு 10.16 மணிக்கு காங்கேசந்துறை ரயில் நிலையத்தை சென்றடையும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதே போன்று 4004 என்ற இலக்க ரயில் நாளைய தினம் 6 ஆம் திகதி அதிகாலை 3.45 மணிக்கு காங்கேசந்துறை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு வவுனியா ரயில் நிலையத்தை 5.49 மணிக்கு வந்தடையும்.
அங்கிருந்து புறப்பட்டு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும். இந்த ரயில் காங்கேசந்துறை ரயில் நிலையத்தில் இருந்து மீண்டும் புறப்பட்டு யாழ்ப்பாணம், கொடிகாமம், கிளிநொச்சி மற்றும் அறிவியல்நகர் ஆகிய ரயில் நிலையங்களிலும் நிறுத்தப்படும் என்றும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
4003 மற்றும் 4004 இலக்கங்களைக் கொண்ட ரயில்கள் கொழும்பு கோட்டையில் இருந்து வவுனியா வரையில் இதுவரையில் சேவையில் ஈடுபட்டிருந்த ரயில்களே இவ்வாறு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 









கோத்தபாயவின் நிகழ்வில் முரளீதரன் - தெரிவித்திருப்பது என்ன?

08/09/2019 பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் கொழும்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ள முன்னாள் சுழற்பந்து வீச்சாளர்  முத்தையா முரளீதரன் இலங்கையை அரசியல் அனுபவமிக்க அரசியல்வாதி ஒருவரே ஆட்சிசெய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி அனுபவமிக்க அரசியல்வாதி ஒருவரே தெரிவு செய்யப்படவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர்களும் ஏனைய துறைசார் வல்லுனர்களும் நாட்டிற்கு தலைமை தாங்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
 தெரிவித்துள்ளார்.
.இலங்கையில் சிலர் வர்த்தகர்கள் மீதும் ஏனையவர்கள் மீதும் நம்பிக்கை வைக்கின்றனர் ஆனால் மக்களின் பிரச்சினைகளை அரசியல் அனுபவம் உள்ள அரசியல் ரீதியில் முடிவெடுக்க கூடிய ஒருவராலேயே தீர்க்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சில விடயங்களை சாதித்த மக்களை பாதுகாக்ககூடிய ஒருவரிற்கு மக்கள் வாக்களிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உண்மையான தலைவர் முன்னுதாரணத்தின் மூலம் தலைமை தாங்குபவர் எனவும் முரளீதரன் தெரிவித்துள்ளார்.
சமாதான பேச்சுவார்த்தைகளின் போது விடுதலைப்புலிகளிற்கு வாய்ப்பு கிடைத்தது ஆனால் அவர்கள் அப்பாவிகளை கொலை செய்தனர் எனவும் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார்.
2009 இல் யுத்தம் முடிவிற்கு வந்த விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே எனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் எனவும் முரளீதரன் தெரிவித்துள்ளார்.  நன்றி வீரகேசரி 








விடுதலைப்புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிகப்பெரும் நாள்- கோத்தபாயவின் நிகழ்வில் முரளீதரன்- இரண்டாம் இணைப்பு

08/09/2019 பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் கொழும்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ள முன்னாள் சுழற்பந்து வீச்சாளர்  முத்தையா முரளீதரன் இலங்கையை அரசியல் அனுபவமிக்க அரசியல்வாதி ஒருவரே ஆட்சிசெய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி அனுபவமிக்க அரசியல்வாதி ஒருவரே தெரிவு செய்யப்படவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர்களும் ஏனைய துறைசார் வல்லுனர்களும் நாட்டிற்கு தலைமை தாங்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சிலர் வர்த்தகர்கள் மீதும் ஏனையவர்கள் மீதும் நம்பிக்கை வைக்கின்றனர் ஆனால் மக்களின் பிரச்சினைகளை அரசியல் அனுபவம் உள்ள அரசியல் ரீதியில் முடிவெடுக்க கூடிய ஒருவராலேயே தீர்க்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சில விடயங்களை சாதித்த மக்களை பாதுகாக்ககூடிய ஒருவரிற்கு மக்கள் வாக்களிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உண்மையான தலைவர் முன்னுதாரணத்தின் மூலம் தலைமை தாங்குபவர் எனவும் முரளீதரன் தெரிவித்துள்ளார்.
சமாதான பேச்சுவார்த்தைகளின் போது விடுதலைப்புலிகளிற்கு வாய்ப்பு கிடைத்தது ஆனால் அவர்கள் அப்பாவிகளை கொலை செய்தனர் எனவும் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார்.
2009 இல் யுத்தம் முடிவிற்கு வந்த விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே எனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் எனவும் முரளீதரன் தெரிவித்துள்ளார்.
அச்சம் என்பது பெரும் விடயம், நாங்கள் அச்சத்தில் பிடியின் வாழ்ந்துள்ளோம்,
1977 இல் ஆட்சி மாற்றத்தின் பின்னர் எங்கள் வீடுகள் அழிக்கப்பட்ட அனைத்து அழிக்கப்பட்டன எனது தந்தை தாக்கப்பட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனைவரும் இந்தியாவிற்கு சென்றனர் ஆனால் நாங்கள் செல்லவில்லை நாங்கள் இங்கு வாழவிரும்பினோம் நான் இலங்கையன்.
இரு தரப்பும் தவறிழைத்தன,ஒரு கட்டத்தில் அரசாங்கம் தவறிழைத்தது பின்னர் விடுதலைப்புலிகள் தவறிழைத்தனர்.
அவர்கள் வாய்ப்புகளை தவறவிட்டனர்.
நாங்கள் அச்சத்துடனேயே வாழ்ந்தோம், நான் பெலவத்தையில் வசித்தவேளை எந்நேரமும் அரசியல்வாதியொருவர் தாக்கப்படலாம் என்ற அச்சத்தினால் நாடாளுமன்ற வீதியை பயன்படுத்துவதில்லை, கொழும்பும் அச்சத்துடனேயே வாழ்ந்தது.
தமிழர்கள் அச்சத்துடனேயே வாழ்ந்தனர்.
மக்களிற்கு யார் பாதுகாப்பு வழங்குவார் என்பதே இந்த தேர்தலில் முக்கியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான தலைவரிற்கே நான் வாக்களிப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நன்றி வீரகேசரி 




No comments: