சிங்கபூரில் ஸ்ரீ தேவியின் மெழுகு சிலை !


04/09/2019 இந்திய சினிமாவில் தனெக்கெனெ ஒரு இடத்தை பதித்தவர் நடிகை ஸ்ரீ தேவி. கடந்த வருடம் டுபாயில் ஹோட்டலில் உயிரிழந்தார்.
அவர் இறந்து ஒரு வருடமாகிவிட்ட நிலையில் புகழ் பெற்ற சிங்கப்பூரிலுள்ள மேடம் துசாட்ஸ் மெழுகு அருங்காட்சியகத்தில் அவருக்கு மெழுகு சிலை வைத்துள்ளார்கள்.
இந்நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் தனது மறைந்த மனைவி ஸ்ரீதேவியின் மெழுகு சிலையை இன்று திறந்து வைத்தார். இதில் கபூருடன் அவரது இரண்டு மகள்களான ஜான்வி மற்றும் குசி ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்த மெழுகு சிலை 1987 ஆம் ஆண்டு வெளியான ‘மிஸ்டர் இந்தியா’ படத்தில் இடம் பெற்ற ஸ்ரீதேவின் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த சிலை ஸ்ரீதேவி போல இல்லை என்றும் அவரின் மகள் ஜான்வி கபூர் போல இருப்பதாக விமர்சனம் கிளம்பியுள்ளது.
நன்றி வீரகேசரி 
No comments: