முருகபூபதியின் சொல்லத் தவறிய கதைகள் புத்தகம் சிட்னியில் வெளியீடு

.எழுத்தாளர் லெ.முருகபூபதியின் “சொல்லத் தவறிய கதைகள்” சிட்னியில் வெளியீடு கண்டது

கடந்த சனிக்கிழமை ஏப்ரல் 27 ஆம் திகதி, சிட்னியின் மேற்குப் பிராந்தியமான Parramatta வில் கல்வி அரங்கு ஒன்றில் இந்த நூல் வெளியீடு வெகு சிறப்பாக நிகழ்ந்தது.
“சொல்லத் தவறிய கதைகள்” ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளிலும், இலங்கையிலும் நூல் விமர்சன அரங்கில் வெளியிடப்பட்டாலும் சற்றுத் தாமதமாகவே சிட்னி மண்ணுக்கு வந்திருக்கிறது.

ஏற்கனவே “சொல்ல மறந்த கதைகள்”, “சொல்ல வேண்டிய கதைகள்” என்று தன்னுடைய வாழ்வியல் அனுபவங்களோடு அமைந்த படைப்புகளை வழங்கிய லெ.முருகபூபதி அவர்கள் அதன் தொடர்ச்சியாக “சொல்லத் தவறிய கதைகள்” என்ற இந்த நூலைப் படைத்திருகிறார். மகிழ் பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது.

சிட்னியில் நடந்த இந்த நூல் விமர்சன அரங்கின் தலைவராக கல்விச் செயற்பாட்டாளர், இலக்கிய ஆர்வலர் திரு. திருநந்தகுமார் அவர்கள் இயங்க, வரவேற்புரையை திரு கானா பிரபா நிகழ்த்தினார்.

விமர்சன உரைகளை சட்ட வல்லு நரும்எழுத்தாளருமான கலாநிதி சந்திரிக்கா சுப்பிரமணியன்கவிஞர் செபாஸ்கரன் மற்றும்
கலாநிதி மாலினி அனந்தகிருஷ்ணன் ஆகியோர் ந்த நூலில் தம்மைப் பாதித்த சம்பவக் கோவைகள், வரலாற்றுப் பதிவுகளைச் சிலாகித்துப் பேசினர். தொடர்ந்து ஏற்புரையை நூலாசிரியர் லெ. முருகபூபதி அவர்கள் ஏற்க இந்த விமர்சன அரங்கு இனிதே நிறைந்தது.  - கான பிரபா 


No comments: