யாழ்ப்பாணத்தில் முருகபூபதியின் நூல்கள் அறிமுக நிகழ்வு

.


படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளருமான அவுஸ்திரேலியாவில் வதியும் லெ. முருகபூபதி எழுதிய சொல்லவேண்டிய கதைகள் மற்றும் சொல்லத்தவறிய கதைகள் ஆகிய இரண்டு நூல்களின் அறிமுக அரங்கு எதிர்வரும் மார்ச் மாதம் 02 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் – நல்லூரில் நாவலர் மண்டபத்தில் மாலை 3.00 மணிக்கு நடைபெறும்.

சொல்லவேண்டிய கதைகள் - யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதி கலை இலக்கிய மாத இதழின் வெளியீடாகும்.
யாழ்ப்பாணம் காலைக்கதிர் வார இதழ் உட்பட பல இணைய இதழ்களிலும்  வெளியான  சொல்லத்தவறிய கதைகள் கிளிநொச்சி மகிழ் பதிப்பக வௌியீடாகும்.
இந்நிகழ்வில் எழுத்தாளர்கள்  திரு. கருணாகரன், திருமதி கோகிலா மகேந்திரன், காலைக்கதிர் ஆசிரியர் திரு. வித்தியாதரன்  ஆகியோர் உரையாற்றுவர்.நூல்களின் அறிமுகத்தைத் தொடர்ந்து, இலக்கிய கலந்துரையாடலும் தேநீர் விருந்தும் இடம்பெறும்.
கலை இலக்கியவாதிகளும் ஊடகவியலாளர்களும் அன்புடன்அழைக்கப்படுகின்றனர்.
---0---


No comments: