.

தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் ஆஸ்திரேலியாவின் தலைநகர் கான்பராவில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் இவ்வருடம் மூன்றாம் முறையாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழர்களின் பண்பாட்டை பறைசாற்றும் விதமாக அரங்கம் பொங்கல் பானை, கரும்பு , வாழை மரங்களுடன், மாவிலை தோரணங்களும் சேர்ந்து ஆஸ்திரேலியா பாராளுமன்றம் விழாக்கோலம் பூண்டிருந்தது. இவ்விழாவில் ஆளும் கட்சி சார்பாக Russell Broadbent MP , எதிர் கட்சித் தலைவர் சார்பாக பரமட்டா மத்திய பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் Ms Julie Owens MP பசுமை கட்சியின் தேசியத் தலைவர் Mr Richard De Natalie MLC மட்டுமல்லாது பிற பாராளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் செனட்டர்களும் கலந்துகொண்டனர். இவ்விழாவை அமைப்பின் தலைவர் அனகன் பாபு துவக்கி வைத்தார். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழ் அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு பொங்கல் விழா பற்றி எடுத்துரைத்தனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இத்திருவிழாவை காண பிற மாநில தமிழ் அமைப்புகளை சார்ந்த தமிழ் ஆர்வலர்களும் வந்திருந்தனர். அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது இறுதியாக அமைப்பின் செயலாளர் கர்ணன் சிதம்பரபாரதி நன்றி கூற விழா இனிதே முடிந்தது. இதே போல் ஆஸ்திரேலிய பழமையான நியூ சவுத் வேல்ஸ் மாநில பாராளுமன்றத்திலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

No comments:
Post a Comment