தமிழ் இலக்கிய கலை மன்றம் – திருக்குறள் மனனப் போட்டிகள் – 2019



இப்போட்டிகள் மார்ச் மாதம் 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள தமிழர் மண்டபத்தில் மாலை 2.15 மணியிலிருந்து நடைபெறவுள்ளன. போட்டிக்கான பரிசுகள் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது என்ற பிரிவுகளின் கீழ் வழங்கப்படவுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் பரிசு பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த முறை கையாளப்படுகிறது.
போட்டிகளுக்கான விண்ணப்பப்படிவம்
விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து 1  MARCH 2019 க்கு முன்பு கிடைக்கக்கூடியதாக tikmkural@gmail.com முகவரிக்கு அனுப்பிவைக்கவும். ஒருவர் அந்தந்த வயதுக்கேற்ற போட்டிகளில் பங்கு பெறலாம். ஒரு நபருக்கு திருக்குறள் போட்டிக்கென நுழைவுக்கட்டணமாக $5, போட்டி நடைபெறும் தினத்தில் பெறப்படுகிறது.
போட்டிக்கான விதிமுறைகள், குறள்கள் முதலிய விவரங்களை விண்ணப்படிவத்துடன் பெற்றுக்கொள்ளலாம்.


-->
Description: Tamil Ilakkiya kalai manram logo
சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றம்
21 Rose Crescent Regents Park 2143 NSW Australia

Email: tikmsydney@gmail.com
திருக்குறள் மனனப் போட்டிகள் 3 March 2019
இப்போட்டிகள் மார்ச் மாதம் 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள தமிழர் மண்டபத்தில் மாலை 2.15 மணியிலிருந்து நடைபெறவுள்ளது. போட்டிகளின் முடிவுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் மின்னஞ்சல் அல்லது  தொலைபேசி மூலம் அறியத்தரப்படும். போட்டிக்கான பரிசுகளும், சான்றிதழ்களும் சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றம் அடுத்து நடத்தும் விழாவில் வழங்கப்படும்.
போட்டி நடத்தப்படும் பிரிவுகளும் வயது வரம்பும்.
பிரிவுகள்
பிறந்த திகதி விவரம்
பாலர் ஆரம்பப்பிரிவு
01.08.2014 இலும் அதற்குப் பின்னரும் பிறந்தவர்கள்
பாலர் பிரிவு
01.08.2012 க்கும் 31.07.2014 க்கும் இடையில் பிறந்தவர்கள்
கீழ்ப்பிரிவு
01.08.2010 க்கும் 31.07.2012 க்கும் இடையில் பிறந்தவர்கள்
மத்திய பிரிவு.
01.08.2007 க்கும் 31.07.2010 க்கும் இடையில் பிறந்தவர்கள் 
மேற்பிரிவு
01.08.2004 க்கும் 31.07.2007 க்கும் இடையில் பிறந்தவர்கள் 
அதிமேற்பிரிவு
01.08.2000 க்கும் 31.07.2004 க்கும் இடையில் பிறந்தவர்கள்

போட்டிகளுக்கான விவரங்கள்
போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவம், மனனம் செய்யவேண்டிய குறள்களின் விவரங்களை பின்வரும் போட்டிக்குழு அங்கத்தினர்களிடமும்,  தமிழ்முரசு அவுஸ்திரேலியா  (www.tamilmurasuaustralia.com)  இணையத்தளப் பத்திரிகையிலிருந்தும், www.anbujaya.com என்ற இணையத்தளத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.
திருமதி கனகாம்பிகை ஜெகநாதன்                                     - 0403 795 361
திரு அன்பு ஜெயா                                                             - 0423 515 263
திரு பஞ்சாட்சரம் பரமசாமி                                               - 0434 006 841
திரு குமார் கருணாசலதேவா                                                   - 0418 442 674
திரு செ பாஸ்கரன்                                                         - 0407 206 841
திரு செ மகேஸ்வரன்                                                                        - 0409 847 003
திருமதி ஜெகத்ஜெனனி சிவானந்தன்                              - 02 9863 1465
விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து 1  MARCH 2019 க்கு முன்பு கிடைக்கக்கூடியதாக  tikmkural@gmail.com முகவரிக்கு அனுப்பிவைக்கவும். ஒருவர் அந்தந்த வயதுக்கேற்ற போட்டிகளில் பங்கு பெறலாம். ஒரு நபருக்கு போட்டிக்கான நுழைவுக்கட்டணமாக $5, போட்டி நடைபெறும் தினத்தில் பெறப்படுகிறது.
Please send application forms via email to: tikmkural@gmail.com by 1 March 2019




-->


திருக்குறள் மனனப் போட்டி - 2019
பாலர் ஆரம்பப் பிரிவு


கீழே கொடுக்கப்பட்ட குறள்கள் இரண்டையும் மனனம் செய்து ஒப்புவித்தல் வேண்டும்.

1.   பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.

2.   கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.



Please send application forms via email to: tikmkural@gmail.com by 1 March 2019

-->






திருக்குறள் மனனப் போட்டி - 2019
பாலர் பிரிவு

கீழே கொடுக்கப்பட்ட குறள்கள் மூன்றையும் மனனம் செய்து ஒப்புவித்தல் வேண்டும்.

1.    தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

2.    வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.

3.    ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.  
                                                                                                                                

Please send application forms via email to: tikmkural@gmail.com by  1 March 2019

-->






-->
திருக்குறள் மனனப் போட்டி - 2019
கீழ்ப்பிரிவு
கீழே கொடுக்கப்பட்ட நான்கு குறள்களையும் மனனம் செய்து ஒப்புவித்தல் வேண்டும்.

1.    வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை  
பருவந்து பாழ்படுதல் இன்று.

2.    பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்
இறைவன் அடி சேராதார்.  

3.    அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.

4.    அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. 


Please send application forms via email to: tikmkural@gmail.com by 1 March 2019







-->
திருக்குறள் மனனப் போட்டி  - 2019
மத்திய பிரிவு
கீழே கொடுக்கப்பட்ட ஐந்து குறள்களையும் மனனம் செய்து ஒப்புவித்தல் வேண்டும்.

1.    காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

2.    தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.

3.    வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.

4.    மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.

5.    உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.

Please send application forms via email to: tikmkural@gmail.com by 1 March 2019






-->
திருக்குறள் மனனப் போட்டி - 2019
மேற்பிரிவு   (பக்கம் 1)
கீழே கொடுக்கப்பட்ட ஐந்து குறள்களையும் மனனம் செய்து, அவற்றின் பொருளையும் தெளிவாக விளக்குதல் வேண்டும். (பொருளும் கீழே தரப்பட்டுள்ளது. பொருள் வேறுபடாவண்ணம் தெளிவாக விளக்கினால் போதுமானது)

1.     செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்  
நல்விருந்து வானத் தவர்க்கு.
வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர்பார்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினன் ஆவான்.
2.     வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.
வெள்ளம் போல் துன்பம் தொடர்ந்து பெருகி வரினும், அறிவுடையோர் மனத்தின்மையால் அத்துன்பத்தைப் பொறுத்துக் கொள்வர். வந்த துன்பம் இல்லாமல் ஓடிவிடும்.
3.     ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்  
இழிந்த பிறப்பாய் விடும்.
ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப் பிறப்பின் தன்மையாகும். ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகிவிடும்.   
4.     எனைத்தானும் நல்லவை கேட்க, அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.
என்னதான் அளவிற் சிறிதாயினும் நல்லனவற்றை விரும்பிக் கேட்கவேண்டும். அப்படிக் கேட்டால் கேட்கின்ற அளவுக்கு அவை நிறைந்த பெருமையும் புகழும் தரும்.

5.     மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
 உயிர்நீப்பர் மானம் வரின்.
தன் உடலில் இருந்து ஒரு மயிர் உதிர்ந்தாலும் மானமே போயிற்றென்று உயிர் வாழ விரும்பாது இறக்கின்ற கவரிமானைப் போன்றவர்கள், மானத்திற்குக் கேடு வந்தால் உயிரையே விட்டுவிடுவர்





Please send application forms via email to: tikmkural@gmail.com by 1 March 2019




-->
திருக்குறள் மனனப் போட்டி 2019
அதிமேற்பிரிவு  (பக்கம் 1)
கீழே கொடுக்கப்பட்ட ஆறு குறள்களையும் மனனம் செய்து, அவற்றின் பொருளையும் தெளிவாக விளக்குதல் வேண்டும். (பொருளும் கீழே தரப்பட்டுள்ளது. பொருள் வேறுபடாவண்ணம் தெளிவாக விளக்கினால் போதுமானது)

1.     தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
மணலைத் தோண்டத் தோண்ட தண்ணீர் ஊறுவதுபோல், நூல்களைப் படிக்கப் படிக்க மக்ளுக்குக் கல்வியிறிவு வளர்ச்சியுறும், வளம் பெறும்.

2.     எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
ஒரு பொருளின் உருவம், தோற்றம் எப்படியிருப்பினும் அதைக்கொண்டு தெளியாமல், பொருள்களின் உண்மை நிலையையும் இயல்பையும் கண்டறிவதே உண்மையான அறிவு.

3.     எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
செய்யத்தொடங்கும் எச்செயலையும் நன்கு ஆராய்ந்தே செய்யத் தொடங்கவேண்டும்.  செய்யத் தொடங்கியபின் ஆராய்ந்து கொள்வோம் என்று நினைப்பது தவறாகும்.

Please send application forms via email to: tikmkural@gmail.com by 1 March 2019
  
4.     மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனுஞ் சொல்.
மகன் தந்தைக்குச் செய்யக்கூடிய கடமை இவன் தந்தை இப்படியொரு மகனைப் பெற என்ன பேறு செய்தானோ என்று பிறர் வியந்து போற்றும் பெருமையைத் தந்தைக்குத் தேடித் தருவதாகும்.  

5.     வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.
திருப்பிக் கொடுக்கும் சக்தி இல்லாத ஏழைகளுக்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை. மற்றதெல்லாம் பலனை எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மை உடையது.

6.     எனைத்தானும் நல்லவை கேட்க, அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.
என்னதான் அளவிற் சிறிதாயினும் நல்லனவற்றை விரும்பிக் கேட்கவேண்டும். அப்படிக் கேட்டால் கேட்கின்ற அளவுக்கு அவை நிறைந்த பெருமையும் புகழும் தரும்.




Please send application forms via email to: tikmkural@gmail.com by 1 March 2019












-->
திருக்குறள் மனனப் போட்டிகள்3 March 2019

புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும்
1.   மனனம் செய்யும் திறமை (40 புள்ளிகள்)
தடங்கலின்றி திருக்குறளை ஒப்புவிக்கவேண்டும்.  சரியாக மாணவர்கள் மனனம் செய்திருக்க வேண்டும். மாணவர்கள் ஒப்புவிக்கும்போது  கருத்துப் பிழையின்றி ஒப்புவிக்க வேண்டும்
2.     உச்சரிப்பு: (40 புள்ளிகள்)
மாணவர்கள் தமிழை சரியாக உச்சரிக்க வேண்டும். அதாவது சொற்களையும் எழுத்துக்களையும் கேட்பவர்கள் விளங்கிக் கொள்ளக் கூடிய முறையில் தெளிவாக உச்சரிக்க வேண்டும்.
3.     சபை மரபு: (20 புள்ளிகள்)
சபைக்கு வருதல், சபையில் உள்ளவர்களை விளித்தல், சபைக்கு முன் நிற்றல், சபையை விட்டகலல் என்பவற்றிக்கு வயதிற்கேற்ற பக்குவமும் தமிழர் மரபிற்கேற்ற செயற்பாடுகளும் இருத்தல் வேண்டும்.  ஒப்புவித்து முடித்தவுடன் இயற்கையான முறையில் வணக்கம் தெரிவித்து, தனது இருப்பிடம் சென்று அமர்தல் வேண்டும்.
விதிமுறைகள்
1.              போட்டிகளை இரண்டு அல்லது மூன்று நடுவர்கள் நடத்துவார்கள். நடுவர்களின் தீர்ப்பே முடிவானதாகும். போட்டி முடிவுகள் போட்டி முடிந்து 2 வாரங்களில் மின்னஞ்சல்வழி தெரிவிக்கப்படும். பரிசளிப்பு பற்றிய விவரங்களும் மின்னஞ்சல் வழி தெரிவிக்கப்படும்.
2.              போட்டியின்போது பெற்றோர் சற்று தூரத்திலிருந்து பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
3.              போட்டிகள் தொடர்பாக முறையீடு செய்ய விரும்புவோர், எங்களுக்கு எழுத்து வடிவில் கொடுக்கவேண்டும்.
4.              முதலாவது வந்த மாணவரின் புள்ளிகள் 100க்கு உயர்த்தப்பட்டு மற்றைய மாணவர்களுக்கும் அதே விகிதாசாரப்படி புள்ளிகள் வழங்கப்படும்.
5.              90 புள்ளியும் அதற்கு மேலாகவும் பெற்ற மாணவர்கள் BAND A ஆகவும், 75 - 89 புள்ளிகள் பெற்ற மாணவர்கள்  BAND  B ஆகவும், 60-74 புள்ளிகள் பெற்ற மாணவர்கள் BAND  C ஆகவும் கணிக்கப்படுவர். 60 புள்ளிகளுக்குக் குறைவாகப் பெற்ற மாணவர்களுக்கு பங்குபற்றியமைக்கான சான்றிதழ்கள் வழங்கப்படும்.



No comments: