ஞானசார தேரருக்கு நீதிமன்றம் விடுத்துள்ள அதிரடி உத்தரவு
இலங்கையில் கடற்படையின் பல இரகசிய முகாம்கள்- முக்கிய அதிகாரிகளிற்கு தொடர்பு -திருகோணமலை இரகசிய முகாமிற்கு கோத்தாபய பல தடவை சென்றார்- சர்வதேச அமைப்பு அதிர்ச்சி அறிக்கை
இலங்கை நீதித்துறையின் மாபெரும் தோல்வி குறித்து யஸ்மின் சூக்கா கவலை
எனது தந்தையை 2009 மே 17 ம் திகதியே இறுதியாக பார்த்தேன்- பிரிட்டனின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் தமிழ் சிறுமி உருக்க உரை- வீடியோ இணைப்பு
முல்லைத்தீவு சுதந்திரபுரத்தில் மனித எச்சங்கள் மீட்கும் நடவடிக்கை முன்னெடுப்பு
ஞானசார தேரருக்கு நீதிமன்றம் விடுத்துள்ள அதிரடி உத்தரவு
21/10/2019 முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்ட குற்றத்தில் பொதுபலசேனா பெளத்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட நால்வருக்கு மீண்டும் மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

போதுபல சேனா பெளத்த அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கும் முள்ளைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர்க்கு எதிராகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஶ்ரீஸ்கந்தராசா தாக்கல் செய்திருந்த நீதிமன்ற அவமதிப்பு மனு இவ்வாறு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதியரசர்கள் யசந்த கோதாகொட மற்றும் அர்ஷுண ஒபயசேகர முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இனத்போது எதிராளிகளுக்கு அறிவித்தல் அனுப்பும்படி கட்டளை இடப்பட்டது. மனுவுக்கு ஆதரவாக ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன், சட்டத்தரணி கேசவன் சயந்தனோடு ஆஜராகி வாதாடினார். இதை ஏற்றுக் கொண்ட நீதியரசர்கள் நவம்பர் 8 ஆம் திகதி எதிராளிகளை நீதிமன்றில் பிரசன்னமாயிருக்குமாறு கட்டளையிட்டனர் நன்றி வீரகேசரி
இலங்கையில் கடற்படையின் பல இரகசிய முகாம்கள்- முக்கிய அதிகாரிகளிற்கு தொடர்பு -திருகோணமலை இரகசிய முகாமிற்கு கோத்தாபய பல தடவை சென்றார்- சர்வதேச அமைப்பு அதிர்ச்சி அறிக்கை
24/10/2019 இலங்கை கடற்படையினரின் பல இரகசிய முகாம்களில் 2008 முதல் 2014 வரை இடம்பெற்ற சித்திரவதைகளில் முக்கிய அதிகாரிகளிற்கு தொடர்புள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு இதன் காரணமாக உலக நாடுகள் இலங்கை கடற்படையுடனான உறவுகளை மறுபரிசீலனை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தனது புதிய அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
2009 இல் யுத்தம் முடிவடைந்த பின்னரும் கடற்படையினர் தமது சித்திரவதைகளை நிறுத்தவில்லை என தெரிவித்துள்ள சர்வதேச அமைப்பு பல முகாம்களில் சித்திரவதைகள் இடம்பெற்றதாக குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் நீதித்துறையின் மிகப்பெரிய வெற்றிக்கதையாக 11 பேர் கடத்தப்பட்ட விவகாரம் அமைந்திருக்கவேண்டும் என தெரிவித்துள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா ஆனால் இது தோல்வியின் அடையாளமாக மாறிவிட்டது என குறிப்;பிட்டுள்ளார்.
கடற்படையின் புலனாய்வு பிரிவை சேர்ந்த அதிகாரிகளையும் திருகோணமலை முகாமிற்கு பொறுப்பான அதிகாரிகளையும் இன்னமும் விசாரணை செய்யவில்லை,குற்றவாளிகள் பாதுகாக்க படுகின்றனர் அவர்களிற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளுத பாதிக்கப்பட்டவர்களில் உயிருடன் உள்ளவர்கள் இன்னமும் விசாhரணை செய்யபடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடற்படையின் தளபதியாகயிருந்தவர் கடற்படையின் புலனாய்வு பிரிவிற்குள் விசேட பிரிவொன்றை உருவாக்கியது கடற்படையின் சிரேஸ்ட அதிகாரிகளிற்கு தெரிந்திருக்கவேண்டும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த விசேட பிரிவை சேர்ந்தவர்கள் நாட்டின் மிகவும் பாதுகாப்பான கடற்படை தளத்தில் நிலத்தடி இரகசிய சித்திரவதை கூடத்தை இயக்கினார்கள் இங்கு பெருமளவு சிறைக்கைதிகள் பல வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்,இந்த சித்திரவதை கூடத்திலிருந்து எவரையும் வெளியே கொண்டுவரமுடியாது என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் காரணமாக இரகசிய சித்திரவதை கூடங்களில் பலரை கடற்படையின் தலைமைக்கு தெரியாமல் வைத்திருக்க முடியாதுஎனவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் குறிப்பிட்டுள்ளது.
நாங்கள் உரையாடிய கடற்படை அதிகாரிகள் அந்த முகாம்களில் என்ன நடக்கின்றது என்பதை தாங்கள் கண்டும்காணாமல் இருக்கவேண்டும் என்பது தங்களிற்கு தெரிந்திருந்தது என தெரிவித்தனர் என ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
கடற்படையின் முழு கட்டளைப்பீடமும் இதில் தொடர்புபட்டிருந்தது என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கை கடற்படை காவல்துறையினரின் விசாரணைகளிற்கு ஒத்துழைப்பு வழங்கும் வரை, குற்றவாளிகளிற்கு பதவி உயர்வு வழங்கும்வரை இலங்கை கடற்படை மீது தடைகளை விதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் சர்வதேச சமூகம் இனிமேலும் இலங்கை கடற்படையின் இந்த குற்றங்களை புறக்கணிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

திருகோணாமலை கடற்படை முகாமில் 11 பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறித்து விசாரணைகளை மேற்கொண்ட நிசாந்த சில்வா 11 இளைஞர்கள் கடத்தப்பட்டமை குறித்து கடற்படையின் உயர் அதிகாரிகளிற்கு தெரிந்திருந்தது என குறிப்பிட்டிருந்தார் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது
கன்சைட்டில் சித்திரவதைகளும் காணாமல்போகச்செய்யப்படுதலும் இடம்பெறுவதாக கடற்படையின் உயர் மட்ட அதிகாரிகளிற்கு தெரிந்திருந்தது.
கன் சைட் முகாமிற்கு பொறுப்பாகயிருந்த ஆர்எஸ்பி ரணசிங்க அவ்வேளை பாதுகாப்பு செயலாளராக காணப்பட்ட கோத்தாபய ராஜபக்சவுடன் நேரடியாக தொடர்புகொள்ள கூடியவராக காணப்பட்டார் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது
கோத்தாபய ராஜபக்ச அந்த முகாமிற்கு பல தடவை விஜயம் மேற்கொண்டார்.இதுதவிர இலங்கை கடற்படையின் கிழக்கு கட்டளை தளபதி எஸ்எம்பி வீரசேகர பிரதி சிசிர ஜெயக்கொடி ஆகியோர் தடை செய்யப்பட்ட பகுதிக்கு செல்லக்கூடியவர்களாகயிருந்தனர் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது
.

ஆகக்குறைந்தது மூன்று கடற்படை சாட்சிகளாவது கடத்தல் நடவடிக்கை குறித்து அப்போதைய கடற்படை தளபதி வசந்த கராணகொடவிற்கு முழுமையாக தெரிந்திருந்தது என சிஐடியினரிடம் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னாள் கடற்படை தளபதி டிரவைஸ் சின்னையா 2017 இல் சிஐடியினருக்கு வாக்குமூலங்களை அளித்த வேளை திருகோணமலை கடற்படை தளத்தில் அமைந்துள்ள கடற்படை கல்லூரிக்கு தான் தலைமை தாங்கியவேளை கன் சைட்டில் ஆட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என கரனாகொடவிற்கு தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கரனாகொட தன்னை இந்த விடயத்தில் தலையிடுவதை தவிர்க்குமறு நேரடியா தடையை விதித்தார் அதேபோல் கன்சைட் பகுதியிலிருந்து வெளியே செல்லும் அந்த பகுதிக்கு உள்ளே செல்லும் வாகனங்களை சோதனையிடுவதை தவிர்க்குமாறு உத்தரவிட்டார்
தனது படையினர் மீதான இந்த குற்றச்சாட்டுகள் குறித்து 2009 மே10 திகதியளவில் தனக்கு தெரிந்திருந்தது என கரனாகொட சிஐடியினரிடம் தெரிவித்துள்ளார்.
ஐடிஜேபியின் சொந்த விசாரணையுடன் ஒத்துப்போகும் உத்தியோகபூர்வ விசாரணைகள் ஏனைய அதிகாரிகளிற்கும் இந்த இரகசிய முகாம்கள் குறித்து தெரிந்திருந்தது என்பதை உறுதி செய்துள்ளன.
திருகோணமலையில் பிரசன்னமாகியிருந்ததன் காரணமாகவும் கடற்படையில் அதிகாரிகளாக பணியாற்றியதால் இந்த விசேட பிரிவின் குற்றங்கள் குறித்து ஏனையவர்களிற்கும் தெரிந்திருக்கவேண்டும்.
கன் சைட்டில் கடற்படையின் புலனாய்வு பிரிவினரின் நடவடிக்கைகள் குறித்து தங்கள் தலைமைக்கு தெரியப்படுத்திய கடற்படை அதிகாரிகள் அச்சுறுத்தப்பட்டனர் அல்லது பதவிகள் பறிக்கப்பட்டனர்.
அதேவேளை இந்த முகாமை இயக்கியவர்களும் அதற்கு ஆதரவு வழங்கியவர்களும் பதவி உயர்வு பெற்றனர்.
திருகோணமலை கடற்படை தளத்திலிருந்து செயற்பட்ட கடற்படையின் விசேட பிரிவினருக்கு விசேட சலுகை வழங்கப்பட்டது அவர்களது வாகனங்கள் குறித்த விபரங்கள் பதியப்படாமலேயே அவர்கள் தங்கள் வாகனங்களை முகாமிற்குள் கொண்டு செல்லக்கூடியதாகயிருந்தது எனவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது நன்றி வீரகேசரி
இலங்கை நீதித்துறையின் மாபெரும் தோல்வி குறித்து யஸ்மின் சூக்கா கவலை
23/10/2019 ஆரம்பத்தில் திருகோணமலை 11 பேர் கடத்தல் விவகாரம் குறித்த வழக்கு விசாரணைகள் இலங்கை நீதித்துறையின் மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்பட்டது. ஆனால் தற்போது அதுவே தோல்வியின் அடையாளமா மாறியுள்ளதாக சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

திருகோணமலைக் கடற்படைத்தளத்தில் 11 பேர் காணாமற்போன விவகாரம் தொடர்பில் இலங்கைக்குள் கடந்த 10 வருடகாலமாக மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணைகளிலிருந்து பெறப்பட்ட ஆவணங்களை, அங்கிருந்து தப்பியவர்கள் மற்றும் கடற்படைத்தள சாட்சியாளர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களுடன் ஒப்பீடு செய்யும் அறிக்கையொன்று 'முற்றாகப் பாராமுகம் காட்டும் இலங்கைக் கடற்படை' என்ற பெயரில் அறிக்கையொன்று சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டத்தினால் இன்று வெளியிடப்பட்டது.
இவ்வழக்கு விசாரணையில் இடம்பெற்றிருக்கும் பாரதூரமான தவறுகள், பொருந்தாத தன்மை, அரசியல் தலையீடுகள் போன்றவை அந்த அறிக்கையின் ஊடாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
2009 ஆம் ஆண்டு போர் முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட பின்னரும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் செயற்பாடுகள் நிறுத்தப்படவில்லை என்பதுடன், இத்தகைய சித்திரவதைகள் தனியொரு கடற்படைத்தளத்தில் மாத்திரம் இடம்பெறவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
எனது தந்தையை 2009 மே 17 ம் திகதியே இறுதியாக பார்த்தேன்- பிரிட்டனின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் தமிழ் சிறுமி உருக்க உரை- வீடியோ இணைப்பு
25/10/2019
2009 மே 14 ம் திகதியே எனது தந்தைய நான் இறுதியாக பார்த்தேன் என முள்ளிவாய்க்காலில் உயிர் தப்பிய 14 வயது சிறுமி கலையரசி கனகலிங்கம் பிரிட்டனின் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வில் தெரிவித்துள்ளார்.
தமிழர் இனப்படுகொலை குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு பிரிட்டனின் பொதுச்சபைக்கு ஆற்றிய உரையில் கலையரசி கனகலிங்கம் இதனை தெரிவித்துள்ளார்.
தனது தந்தையை இறுதியாக பார்த்தது குறித்து உரையாற்றியுள்ள அவர் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர் என்பதை அங்கீகரிப்பது ஏன் அவசியமான விடயம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனது பெயர் கலையரசி கனகலிங்கம்,எனக்கு 14 வயது 2009 இல் நடந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்ட வாழ்க்கை குறித்து நான் இங்கு உரையாற்ற வந்திருக்கின்றேன் என அவர் தனது உரையை ஆரம்பித்துள்ளார்.
2009 ம் ஆண்டே எனது வாழ்;க்கையில் மிகவும் வேதனையான வருடம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2009 மே 17 ம் திகதி நான் எனது தந்தையை இறுதியாக பார்த்தேன்,எனது தந்தையை விட்டு பிரிந்த அந்த நிமிடம் இன்னமும் எனக்கு வேதனையை ஏற்படுத்துகின்றது,நான் எனக்கு அச்சமாகஉள்ளது வாருங்கள் என எனது தந்தையை அழைத்தேன்,ஆனால் அவர் என்னை விட்டு போகவேண்டியிருந்தது என கலையரசி கனகலிங்கம் குறிப்பிட்டுள்ளார்,

அந்த இறுதி தருணங்களை என்னால் எப்படி தெரிவிக்க முடியும்? ஏனைய பல சிறுவர்களும் தங்கள் தந்தைகளிற்காக அழுதுகொண்டிருந்ததை நான் பார்த்தேன் நான் எனது தந்தையின் கழுத்தை இறுக்கி அணைத்தபடி அழுதேன் அவர் எனக்கு முத்தமிட்டுவிட்டு கண்ணால் எதனையோ சொல்லமுயன்றவராக விலகிச்சென்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் தற்போது லண்டனில் வாழும்அதேவேளை எனது தாய்; -தந்தை உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்ற துயரத்துடன் வாழ்கின்றார்,ஒவ்வொரு நாளும் நாங்கள் எங்கள் துயரத்தை மறைத்துவிட்டு நாங்கள் அவருடைய வருகைக்காக முகத்தில் சிரிப்பை ஏற்படுத்தியபடி காத்திருக்கின்றோம் எனவும் அந்த தமிழ் சிறுமி தெரிவித்துள்ளார்.
எனது இருண்ட நாட்களின் போது எனது தந்தை இங்கிருந்து எனது வாழ்க்கைக்கு வழிகாட்டினால் அது எவ்வளவு சிறப்பாகயிருக்கும் என நான் நினைப்பதுண்டு.
எனது தந்தையை பார்ப்பதற்கு சில நாட்களிற்கு முன்னர் எனது உறவினர்களுடன் நான் பதுங்குழிக்குள் இருந்தேன்,அவ்வேளை எனக்கு தெரிந்த சிறுவன் ஒருவன் சைக்கிள் ஒடுவதை பார்த்தேன் நான் அவனை கூப்பிட எண்ணினேன்,ஆனால் அதற்கு முதல் படையினரின் எறிகணை எங்களிற்கு அருகில் விழுந்து வெடித்தது, அந்த சிறுவன் தூக்கியெறிப்பட்டான் என கலையரசி கனகலிங்கம் தெரிவித்துள்ளார்.
விமானக்குண்டுவீச்சினால் எனது இரு உறவினர்கள் கொல்லப்பட்டனர்,என்னால் அதனை மறக்க முடியாது,குண்டு பதுங்குழியின் மேல் விழுந்தது எனது உறவினர்கள் அதற்குள் சிக்குண்டனர் என கலையரசி கனகலிங்கம் தெரிவித்துள்ளார்.
இன்றும் நான் அந்த நினைவுகளுடன் வாழ்கின்றேன்,எனது தந்தைக்கு என்ன நடந்தது என்ற கேள்வியுடன் நான் ஒவ்வொருநாளும் போராடுகின்றேன்,தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர் என்பதை அங்கீகரிப்பது எனது வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டுவராது ஆனால் எனது தந்தைக்கும் காணாமல்போன ஏனையவர்களிற்கும் என்ன நடந்தது என்பதை அறிவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் என கலையரசி கனகலிங்கம் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
முல்லைத்தீவு சுதந்திரபுரத்தில் மனித எச்சங்கள் மீட்கும் நடவடிக்கை முன்னெடுப்பு
25/10/2019 முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட சுதந்திரபுரம் கிராம பகுதியில் மனித எலும்பு எச்சங்கள் கடந்த 20 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டிருந்தன.

இந்த நிலையில் இந்த மனித எச்சங்களை முல்லைத்தீவு நீதிமன்றின் அனுமதியுடன் நீதவான் முன்னிலையில் மீட்க்கும் நடவடிக்கைகள் இன்று (25)முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சுதந்திரபுரம் கிராம பகுதியில் தனியார் ஒருவரின் காணியில் ஒருபகுதியில் மண்எடுத்து மறுபகுதியில் கொட்டியபோது மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கடந்த (20.10.19) அன்று அடையாயம் காணப்பட்டிருந்தன.
இந்த நிலையில் குறித்த பகுதிக்கு கடந்த சில நாட்களாக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
மனித எச்சங்களை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார், சட்டமருத்துவ அதிகாரி றெகான்கேரத்,சட்ட வைத்திய நிபுணர் இளங்கோவன், காணாமல் போனோர் அலுவலக ஆணையாளர்கள் மிராட்றஹீம், க.வேந்தன்,பிரதீபா புண்ணியமூர்த்தி மற்றும் தடயவியல் பொலீசார் முன்னிலையில் மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
முதல் கட்டமாக மேல் வெளிப்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் மேலும் குறித்த பகுதியில் அகழ்வு பணிகளை முன்னெடுப்பது குறித்து நீதிமன்றின் கட்டளையின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக சட்ட வைத்திய நிபுணர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment