நான் ரசித்த மானி இன்னிசை மாலை2019 - செ .பாஸ்கரன்

.மானிப்பாய் மகளிர் மற்றும் மானிப்பாய் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்க சிட்னி கிளையினரின் வருடாந்த நிகழ்வான மானி இன்னிசை மாலை 2019  சனிக்கிழமை 26.10.2019 இரவு Bowman மண்டபத்தில் சரியான நேரத்திற்கு ஆரம்பமானது. நிகழ்ச்சியை   இளம் அறிவிப்பாளர் சிவாஞ்சலி ரட்ணசீலன் மிக அழகாக ஆரம்பித்துவைத்தார் .

இந்து கிறிஸ்துவ மத பாடல்களும் தேசிய கீதம் கல்லூரிக் கீதங்கள் பாடப்பட்டு மங்கல  விளக்கேற்றப்  பட்டது. தொடர்ந்து திரு  கிருஸ்னானந்தன் தலைமை உரையை சுருக்கமாகவும் அழகாகவும் ஆற்றினார். சிறப்புரையை பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த Janaki    perairavar  அழகாக தமிழிலும் ஆங்கிலத்திலும் கொடுத்தார்.

அதனைத்தொடர்ந்து Dr. ராஜலிங்கம் ராஜயோகன் நெறிப்படுத்திய பாடல் போட்டி நிகழ்வு மிககவும் நேர்த்தியாக இடம் பெற்றது. நான்கு பிரிவுகளாக இந்தப் பாடல் போட்டிகள் இடம்பெற்றது. அத்தனை போட்டியாளர்களும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் பாடி சபையினரின் பாராட்டுதல்களை பெற்றுக்கொண்டார்கள். இந்த பாடல் போட்டி  நிகழ்வுகளை சிட்னியின் சிறந்த அறிவிப்பாளரும் அவுஸ்திரேலிய தமிழ் ஒபரப்புக் கூட்டுத் தாபனத்தின் ஒலிபரப்பாளருமான திரு A J ஜெயச்சந்திரா மிகவும் அழகாகவும் சுருக்கமாகவும் தொகுத்து வழங்கியது சபையினரை கவர்ந்திருந்தது.
நிகழ்வில் பல போட்டியாளர்கள் மிகவும் சிறப்பாக பாடியிருந்தாலும் மக்களின் வாக்களிப்பில் ஒரு அணியில் இருந்து ஒருவர் மாத்திரம் பரிசுக்காக தேர்தெடுக்கப்பட்டு. வெற்றியாளர்களாக அறிவிக்கப் படடார்கள். வாக்குகள் என்னும் பணியினை கலாநிதி அம்பிகைபாகன் தலைமையில் ஒரு அணியினர் செய்து வெற்றியாளர்களின் பெயர் பட்டியல் அறிவிப்பாளரிடம் கொடுத்து அறிவிக்கப் பட்டது.

பதின்நான்கு வயதிற்கு உட்படட போட்டியாளர்களில் செல்வி நித்யா நிமலனும் , 15 வயதில் இருந்து 29 வயது வரையான போட்டியாளர்களில் டினேஷ் மோகன்ராஜாவும் , 30 வயதிற்கு மேற்படட போட்டியாளர்களில்
ரஸ்மி வித்யானந்தனும் , இருவர் பாடல் போட்டியில் ரஸ்மி வித்யானந்தனும் அவரது கணவர் நாதன் ராஜ் அவர்களும் வெற்றியாளர்காளாக அறிவிக்கப் பட்டு பரிசு வழங்கப் பட்டது.


போட்டியாளர்களை  விட ராஜலிங்கம் ராஜயோகன், கலாநிதி அம்பிகைபாகன், காவியா, ஒரு குட்டி பாடகி என விசேட
 பாடகர்களாக வந்துசிலர்  பாடினார்கள் இவர்களின்  பாடல்கள்  மிகவும் அருமையாக இருந்தது. கண்ணான கண்ணே கண்ணான கண்ணே கண்மூடி தூ ங்கம்மாஎன்று காவியா பாடிய பாடல் இப்போதும் காதில் ஒழித்துக் கொண்டிருக்கிறது.

இறுதியில் உபதலைவர் திருமதி சுலோஜனா அவர்கள் இந்த நிகழ்வு சிறக்க உழைத்த அனைவருக்கும் நன்றி கூறினார். அருமையான உணவுவகைகள் அருமையான இசைநிகழ்வு குறிப்பிடட நேரத்திற்கு தொடங்கி குறித்த நேரத்திற்கு நிறைவு செய்தவை போன்றவற்றால் நேற்றைய நிகழ்வு என்னை மிகவும் கவர்ந்திருந்தது. உண்மையிலேயே எந்தக்குறையும் சொல்ல முடியாத வகையில் நிகழ்வை நிறைவுசெய்த பாடசாலைகளின் பழைய மாணவ மாணவிகள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்ததே சாட்சியாகும் .

உள்ளூர் கலைஞர்களை வைத்து ஒரு இனிமையான நிகழ்வைத் தந்த இவர்களுக்கு  பாராட்டுக்கள் குறிப்பாக பாடல் போட்டியை ஒருங்கிணைத்த
Dr. ராஜலிங்கம் ராஜயோகன் அவர்களைப் பாராட்டுவது பொருத்தமே.


No comments: