இந்திய அரசாங்கத்தை நாஜிகளுடன் ஒப்பிட்டார் இம்ரான்கான்
ஆர்ப்பாட்டத்தால் இரத்தான ஹொங்கொங் விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை
மறைந்த சுஷ்மா சுவராஜுக்கு ஆயிரம் தீபங்கள் ஏற்றி பூட்டான் மன்னர் அஞ்சலி
ஹொங்கொங் ஆர்ப்பாட்டங்கள்- படையினரை நகர்த்துகின்றது சீனா- டிரம்ப்
அமெரிக்கா வளைகுடா பிராந்தியத்தை தீப்பற்றி எரிவதற்குத் தயாராகவுள்ள தீப்பெட்டியாக மாற்றுகிறது ஈரானிய வெளிநாட்டு அமைச்சர் குற்றச்சாட்டு
பறவைகள் மோதியதால் விமானம் அவசரமாக தரையிறக்கம் - 226 பயணிகளை காப்பாற்றிய விமானி
இந்திய அரசாங்கத்தை நாஜிகளுடன் ஒப்பிட்டார் இம்ரான்கான்
12/08/2019 இந்திய அரசாங்கத்தை ஜேர்மனியின் நாஜிகளுடன் ஒப்பிட்டுள்ள பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காஸ்மீர் குறித்து உலகநாடுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அது ஹிட்லரை திருப்திப்படுத்துவது போல ஆகிவிடும் என தெரிவித்துள்ளார்.
இம்ரான் கான் தனது டுவிட்டர் செய்தியில் இதனை தெரிவித்துள்ளார்.
காஸ்மீரின் இனப்பரம்பலை இனச்சுத்திரிகரிப்பு மூலம் மாற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ள இம்ரான்கான் ஹிட்லர் விடயத்தில் வேடிக்கை பார்த்ததை போல உலகநாடுகள் இந்த விடயத்திலும் வேடிக்கை பார்க்குமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்து மேலாதிக்கவாத கொள்கை நாஜிகளின் மேலாதிக்கவாத கொள்கை போல ஒருபோதும் முடிவுறாது என தெரிவித்துள்ள அவர் இது இறுதியில் இந்தியாவில் முஸ்லீம்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாகுவதற்கு வழிவகுத்து பாக்கிஸ்தானிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப் புகை மற்றும் தண்ணீர்ப் பிரயோகம் என்பனவற்றை மேற்கொண்டனர். தொடர்ந்து 10ஆவது வாரமாக இடம்பெற்ற மேற்படி அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பங்கேற்றிருந்தனர்.
நேற்று முன்தினம் மாலை அமைதியான முறையில் விக்டோரியா பூங்காவிலிருந்து ஆரம்பமான எதிர்ப்பு ஊர்வலம் பொலிஸாரால் விதிக்கப்பட்டுள்ள தடையொன்றை அலட்சியம் செய்து பிரதான வீதியொன்றுக்கு நகர்ந்தபோதே வன்முறை ஆர்ப்பாட்டமாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது.
விமான நிலையத்தை தொடர்ந்து மூடுவதற்கான சரியான காரணங்கள் இல்லாததால், "இன்று முதல் ஹொங்கொங் சர்வதேச விமான நிலையத்தின் இயக்கங்களில் பாதிப்புகள் ஏற்படலாம் என்பதை கருத்தில் கொண்டு விமானங்களின் கால அட்டவணை மாற்றப்பட்டுள்ளது " என்று ஹொங்கொங் சர்வதேச விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலின் அறிவிப்பில் தெரிவித்துள்ளது. நன்றி வீரகேசரி
மறைந்த சுஷ்மா சுவராஜுக்கு ஆயிரம் தீபங்கள் ஏற்றி பூட்டான் மன்னர் அஞ்சலி
13/08/2019 இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மறைவையொட்டி பூட்டான் மன்னர் ஆயிரம் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களுள் ஒருவர் சுஷ்மா சுவராஜ். இவர் ஹரியான மாநிலத்தில் 1953ஆம் ஆண்டு பிறந்தார்.
7 முறை மக்களவை முதல்வராக செயல் பட்டுள்ள சுஷ்மா சுவராஜ், டெல்லி மாநில முதல்வராகவும் இருந்துள்ளார்.
2014 முதல் 2019 வரையிலான பா.ஜ.க ஆட்சியின் போது வெளியுறவுத்துறை அமைச்சராக சிறப்பாக செயல்பட்டு நாட்டு மக்களின் மத்தியில் நன்மதிப்பை பெற்றார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பிறகு இரண்டாவது பெண் வெளியுறவுத்துறை அமைச்சர் என்ற பெருமையை பெற்ற சுஷ்மா பல நாட்டினரின் மரியாதையையும் மதிப்பையும் அவர் பெற்றுள்ளார். மாரடைப்பு காரணமாக சுஷ்மா சுவராஜ் மரணம் அடைந்ததால் பல நாட்டினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அண்டை நாடான பூட்டான் நாட்டில் அவர் மறைவு கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. டெல்லியில் நடந்த சுஷ்மா சுவராஜின் இறுதிச் சடங்கில் பூட்டன் பிரதமர் டிஷெரிங் தோபா கலந்துக் கொண்டார். அத்துடன் பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியெல் வாங்க்சக் தனது இரங்கல் செய்தியை சுஷ்மா ஸ்வராஜின் குடும்பத்துக்கு அளித்துள்ளார்.

மறைந்த சுஷ்மா சுவராஜ் நினைவையொட்டி பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியெல் வாங்க்சக் விசேஷ பூஜைகள் நடத்தி உள்ளார். அத்துடன் ஆயிரம் நெய் விளக்கு ஏற்றி மன்னர் பிரார்த்தனை செய்துள்ளார். நாடெங்கும் அவருக்காகச் சிறப்பு பூஜைகள் நடந்துள்ளன. நன்றி வீரகேசரி
ஹொங்கொங் ஆர்ப்பாட்டங்கள்- படையினரை நகர்த்துகின்றது சீனா- டிரம்ப்
14/08/2019 ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்து பதற்றநிலை அதிகரித்து வருகின்ற நிலையில் சீனா தனது எல்லையை நோக்கி படையினரை நகர்த்தி வருகின்றது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஹொங்கொங் உடனான எல்லையை நோக்கி சீனா தனது படையினரை நகர்த்துகின்றது என எமது புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அனைவரும் அமைதியாகவும் பாதுகாப்பாகவுமிருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

சீனா தனது எல்லையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் உடனடியாக நடவடிக்கையில் ஈடுபடுத்தக்கூடிய விதத்தில் படையினரை நிறுத்தியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்து வரும் நிலையிலேயே டிரம்ப் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை முன்னதாக செய்தியாளர்களிடம் கருத்துதெரிவித்துள்ள டிரம்ப் ஹொங்கொங் நிலவரம் சுதந்திரத்திற்கு வழிவகுக்கும் என எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளதுடன் எவரும் கொல்லப்படவோ காயமடையவோ மாட்டார்கள் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நன்றி வீரகேசரி
அமெரிக்கா வளைகுடா பிராந்தியத்தை தீப்பற்றி எரிவதற்குத் தயாராகவுள்ள தீப்பெட்டியாக மாற்றுகிறது ஈரானிய வெளிநாட்டு அமைச்சர் குற்றச்சாட்டு
14/08/2019 அமெரிக்காவானது வளைகுடா பிராந்தியத்தை தீப்பற்றி எரிவதற்குத் தயாரான தீப்பெட்டியாக மாற்றி வருவதாக ஈரானிய வெளிநாட்டு அமைச்சர் ஜாவத் ஸரீப் நேற்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமெரிக்கா ஈரானுடன் செய்து கொண்ட அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து தனது நாட்டை வாபஸ் பெற்று ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிகளை முடக்கும் வகையிலான தடைகளை மீள விதித்ததையடுத்து இரு தரப்பு நாடுகளுக்கும் ஏற்பட்ட முறுகல் நிலையால் ஹொர்மஸ் நீரிணை மூலமாக வளைகுடா பிராந்தியத்தினூடாக மேற்கொள்ளப்படும் எண்ணெய்க் கப்பல்களின் போக்குவரத்து பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.
கடந்த மே, ஜூன் மாதங்களில் 6 எண்ணெய் தாங்கி கப்பல்கள் வெடிவைப்புகளால் சேதமடைந்தமை மற்றும் கடந்த ஜூலை மாதம் பிரித்தானிய கொடி பறக்கவிடப்பட்ட எண்ணெய் தாங்கி கப்பலொன்றை ஈரான் கைப்பற்றி தடுத்து வைத்தமை என்பனவற்றையடுத்து அமெரிக்கா வளைகுடா பிராந்தியத்தில் பாதுகாப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுத்திருந்தது. அந்தப் பிராந்தியத்தில் பயணிக்கும் வர்த்தகக் கப்பல்களைப் பாதுகாக்கும் இலக்கில் முன்னெடுக்கப்பட்ட அந்த நடவடிக்கையில் பிரித்தானியாவும் இணைந்து கொண்டுள்ளது.
இந்நிலையில் கட்டாரை அடிப்படையாகக் கொண்ட அல் ஜஸீரா ஊடகத்துக்கு ஜாவத் ஸரீப் நேற்று முன்தினம் திங்கட்கிழமை அளித்த விசேட பேட்டியில், அந்த நீரிணை குறுகியது. வெளி நாட்டுக் கப்பல்கள் அங்கு தமது பிரசன்னத்தை அதிகரித்துள்ள நிலையில் அது பாதுகாப்புக் குறைந்ததாக மாறியுள்ளது" என்று தெரிவித்தார்.
அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் அந்தப் பிராந்தியத்தில் தமது ஆயுதங்களை நிரப்புவதால் அது தீப்பற்றி எரியத் தயாரான தீப்பெட்டியாக மாறியுள்ளதாக அவர் கூறினார்.
கட்டாரின் டோஹா நகருக்கு விஜயம் செய்துள்ள ஸரீப் கட்டார் ஆட்சியாளர் தமிம் பின் ஹமாத் அல் தானியுடன் நேற்று முன்தினம் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.
மத்தியகிழக்குப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் மிகப் பெரிய இராணுவத் தளங்களைக் கொண்ட நாடாகவுள்ள கட்டார், அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமிடையில் மோதல்கள் கிளர்ந்தெழுவதற்கான சூழ்நிலை ஏற்படுவதைத் தடுக்க முயற்சித்து வருகிறது.
அதேசமயம் ஈரானுடனும் அமெரிக்காவுடனும் நல்லுறவைப் பேணி வரும் ஈராக் மேற்குலக நாடுகளில் படையினர் நிலைநிறுத்தப்படுவது அந்தப் பிராந்தியத்தில் பதற்ற நிலையை அதிகரித்து வருவதாக கடந்த திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.
"மேற்குலகப் படையினரின் பிரசன்னம் பதற்ற நிலையை அதிகரிப்பதாகவுள்ளது. பேச்சுவார்த்தைகளினூடாக பதற்ற நிலையை தணிவிப்பதை ஈராக் நாடுகிறது" என ஈராக்கிய வெளிநாட்டு அமைச்சர் மொஹமட் அல் ஹக்கீம் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
பறவைகள் மோதியதால் விமானம் அவசரமாக தரையிறக்கம் - 226 பயணிகளை காப்பாற்றிய விமானி
16/08/2019 பறவைகள் மோதியதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது இதில் பயணித்த 226 பேர் காப்பாற்றப்பட்டதாக சர்வதேச ஊடங்கள் தவலை வெளியிட்டுள்ளது.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் என்ஜீன்கள் பழுதானதால் சாமர்த்தியமாக அருகில் உள்ள காட்டில் தரையிறக்கி 226 உயிர்களை காப்பாற்றியுள்ளார் விமானி.
சோளக்காட்டில் தரையிறங்கிய விமானம் ரஷ்யாவின் மொஸ்கோவில் உள்ள ஜுகோஸ்கி விமான நிலையத்திலிருந்து கிரிமியாவில் உள்ள சிம்பெரோபோலுக்கு யூரல் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான ஏர்பஸ் ‘ஏ321’ விமானம் 226 பயணிகள் மற்றும் ஏழு ஊழியர்களுடன் புறப்பட்டது.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவை ஒன்று விமானம் மீது பயங்கரமாக மோதியது. இதனால் இரண்டு என்ஜீன்களும் சேதமடைந்துள்ளது.
சோளக்காட்டில் தரையிறங்கிய விமானம் உடனடியாக விமான ஊழியர்கள் விமானத்தை தரையிறக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதனால் எதையும் பற்றி யோசிக்காமல் விமானி மக்காச்சோளம் காட்டில் அவசரமாக தரையிறக்கினார்.

இதன் போது, 9 குழந்தைகள் உட்பட 23 பேர் காயம் அடைந்தனர், குறித்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. விமானியின் துணிச்சலான முடிவால் 226 பயணிகள் உயிர்தப்பியதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment