சிட்னியில் கத்திக்குத்து சம்பவங்களால் பெரும் பதற்றம்


13/08/2019 அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பொதுமக்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் பெண்ணொருவரை நபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பிட்ட நபர் வேறு பலரையும் கத்தியால் குத்தியுள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன.
மற்றொரு பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பாரிய கத்தியுடன் நபர் ஒருவரை கைதுசெய்துள்ள காவல்துறையினர் பாரிய  தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
காயமடைந்த பெண்ணை  அந்த பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குள் வைத்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சந்தேகநபரை கைதுசெய்வதற்காக  பொதுமக்கள் கதிரைகள் உட்பட பல பொருட்களை பயன்படுத்துவதையும் பின்னர் காவல்துறையினர் அந்த நபரை கைதுசெய்வததையும் காண்பித்துள்ளன.
குறிப்பிட்ட பகுதியை தவிர்க்குமாறு காவல்துறையினர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

நான் வைன்யார்ட் பூங்கா பகுதியில் நடமாடிக்கொண்டிருந்த வேளை நீண்ட கத்தியுடன் நபர் ஒடினார் அவரை வேறு சிலர் துரத்திக்கொண்டு செல்வதை பார்த்தேன் என நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவரை துரத்தியவர்களின் கைகளில் தடிகள் பொல்லுகள்காணப்பட்டன என அவர் குறிப்பிட்டுள்ளார்.  நன்றி வீரகேசரி 
குறிப்பிட்ட நபர் பெண்ணொருவரை கத்தியால் குத்திவிட்டு வேறு பலரை கத்தியால் குத்த முயன்றார் பல குற்றங்கள் இடம்பெற்றுள்ளன என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  நன்றி வீரகேசரி 

அவுஸ்திரேலியாவில் கத்திக்குத்தை மேற்கொண்டவர் 'அல்லாஹூ அக்பர்' என சத்தமிட்டார்

13/08/2019 அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கத்திக்குத்தில் ஈடுபட்ட நபர் அல்லாஹூ அக்பர்  என சத்தமிட்டுள்ளார்.
உடலின் பல பாகங்களில் இரத்தத்துடன் காணப்படும் அந்த நபர் அல்லாஹூ அக்பர் என கோசமிடுவதையும் என்னை சுடுங்கள் என ஆவேசமாக கூச்சலிடுவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை இந்த சம்பவம் குறித்து தகவல்வெளியிட்டுள்ள காவல்துறையினர் கிங்ஸ்வீதியில் உள்ள மரயொங்கிலிருந்து தங்களிற்கு 21 வயது பெண்மணியொருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு நபர் ஒருவர் பாரிய கத்தியுடன் காணப்படுகின்றார் என தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளனர்.
அதன் பின்னர் அந்த பகுதியில் பாரிய குழப்பநிலை உருவானது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
அந்த நபர் 41 வயது பெண்மணியை கத்தியால் குத்தியுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட நபர் கத்தியுடன் காணப்பட்ட போதிலும் மூன்று பேர் அந்த நபரை மடக்கி பிடித்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
21 வயது பெண்மணியொருவரின் உடலையும் மீட்டுள்ளோம் இந்த இரு சம்பவங்களிற்கும் தொடர்புள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்ட நபர் மனோநிலை பாதிக்கப்பட்டவர் போல தோன்றுகின்றது என காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 


No comments: