சீனாவில் 3 மாநிலங்களை இணைக்கும் பிரம்மாண்ட மேம்பாலம்
சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்தார்- டிரம்ப் - கிளின்டனின் நண்பரிற்கு எதிராக குற்றச்சாட்டு
பப்புவா நியுகினியில் கர்ப்பிணிகள் உட்பட 25 பேர் படுகொலை-உடல்கள் துண்டுதுண்டாக சிதைப்பு
சர்ச்சைக்குரிய சட்டமூலத்துக்கு முடிவு - ஹொங்கொங் தலைவர் அறிவிப்பு
ரஷ்யாவையும் சீனாவையும் இணைக்கும் 1,250 மைல் நீள நெடுஞ்சாலை
இந்தியாவுக்கு எதிராக ட்ரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு
பிரிட்டனின் எண்ணெய் கப்பலை கைப்பற்ற முயன்ற ஈரானிய படகுகள்- கடும் எச்சரிக்கை விடுத்த போர்க்கப்பல்
சீனாவில் 3 மாநிலங்களை இணைக்கும் பிரம்மாண்ட மேம்பாலம்
09/07/2019 தென்மேற்கு சீனாவில் 3 மாநிலங்களை இணைக்கும் வகையில் உயரத்தில் பிரம்மாண்ட மேம்பாலம் கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக தயார் நிலையிலுள்ளது என அந்நாட்டு ஊடகம் தகவலை வெளியிட்டுள்ளது.
ஆசியாவிலேயே பரப்பளவில் மிகப்பெரிய நாடான சீனா உலகில் ரஷ்யா, கனடா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாகப் பரப்பளவின்படி மூன்றாவது பெரிய நாடாகும்.

உலகில் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் சீனா முதலிடம் வகிக்கிறது. சீனப் பெருஞ்சுவர் இந்நாட்டின் தொன்மை வாய்ந்தது. சீனாவின் வர்த்தகத் தலைநகராகச் ஷாங்காய் உள்ளது.
சீனாவின் தென்மேற்கு பகுதியில் தற்போது 50 மாடி கட்டட உயரத்தில் பிரம்மாண்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு இந்த மேம்பாலம் கட்டத் தொடங்கப்பட்டது.
இதற்கு 'ஜிமிங்சான்ஷெங்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் கிட்டதட்ட தயாராகி விட்டது. பணியில் ஈடுபட்டபோது சுண்ணாம்புக் கற்கள் மற்றும் கரடு முரடான நிலப்பகுதிகளால் அதிகம் பாதிக்கப்பட்டதாகவும், 3 வருட உழைப்பு வீணாகாமல் சரியான முறையில் செயல்பட்டு இதர பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மேம்பாலம் தென்மேற்கு சீனாவின் யுனான், குய்சோ, சிச்சுவான் ஆகிய 3 மாநிலங்களை இணைக்கின்றன. இந்த ஆண்டின் இறுதிக்குள் மேம்பாலம் மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலம் மக்களின் பயன்பாட்டிற்கு வந்தபின்னர் சீனாவின் பொருளாதாரம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நன்றி வீரகேசரி
சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்தார்- டிரம்ப் - கிளின்டனின் நண்பரிற்கு எதிராக குற்றச்சாட்டு
09/07/2019 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் ஆகியோரின் நெருங்கிய நண்பரான கோடீஸ்வரர் ஜெவ்ரே எப்ஸ்டெய்ன் சிறுமிகளை பாலியல் நோக்கத்திற்காக கடத்தினார் என எப்பிஐ அதிகாரிகள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.
2002 முதல் 2005 வரையான காலப்பகுதியில் புளோரிடா மற்றும் நியுயோர்க்கில் பல சிறுமிகளை எப்ஸ்டெய்ன் துஸ்பிரயோகம் செய்தார் என குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள அதிகாரிகள் இது தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் அதனை தெரிவிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
சிறுமிகளை கடத்தினார் மற்றும் துஸ்பிரயோகம் செய்தார் என்ற இரு குற்றச்சாட்டுகளை எவ்பிஐ அதிகாரிகள் சுமத்தியுள்ளனர்.
எவ்பிஐ அதிகாரிகள் சோதனை நடவடிக்கையின் போது ஜெவ்ரே எப்ஸ்டெய்னின் மாளிகையிலிருந்து சிறுமிகளின் நிர்வாணப்புகைப்படங்களை மீட்டுள்ளனர் எனவும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்
சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பின்னர் தனது தவறை மறைப்பதற்காக பெருமளவு பணத்தை ஜெவ்ரே எப்ஸ்டெய்ன் வழங்கினார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
அவர் தான் பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கியவர்களிற்கு பணம் கொடுத்து புதிதாக சிறுமிகளை அறிமுகப்படுத்தும் படி கேட்டுக்கொண்டார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் அவர் ஒரு வலையமைப்பை உருவாக்கியிருந்தார் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்
செல்வந்தரிடம் பணிபுரிந்தவர்கள் உட்பட அவரிற்கு நெருக்கமான பலர் இந்த துஸ்பிரயோக நடவடிக்கைகளிற்கு உதவியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிலர் ஜெவ்ரே எப்ஸ்டெய்னின் இச்சையை பூர்த்தி செய்வதற்காக சிறுமிகளை நியுயோர்க்கிற்கு அழைத்து வந்தனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நன்றி வீரகேசரி
பப்புவா நியுகினியில் கர்ப்பிணிகள் உட்பட 25 பேர் படுகொலை-உடல்கள் துண்டுதுண்டாக சிதைப்பு
சர்ச்சைக்குரிய சட்டமூலத்துக்கு முடிவு - ஹொங்கொங் தலைவர் அறிவிப்பு
ரஷ்யாவையும் சீனாவையும் இணைக்கும் 1,250 மைல் நீள நெடுஞ்சாலை
இந்தியாவுக்கு எதிராக ட்ரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு
பிரிட்டனின் எண்ணெய் கப்பலை கைப்பற்ற முயன்ற ஈரானிய படகுகள்- கடும் எச்சரிக்கை விடுத்த போர்க்கப்பல்
நன்றி வீரகேசரி
10/07/2019 பப்புவா நியுகினியில் கர்ப்பிணிப்பெண்கள் குழந்தைகள் உட்பட 25 ற்கும் அதிகமானவர்கள் பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
பப்புவா நியுகினியின் ஹெலா மாகாணத்தில் பழங்குடியினத்தவர்களிற்கு இடையில் இடம்பெற்றுவரும் தொடர்மோதல்களின் போதே இந்த படுகொலைகள் இடம்பெற்றுள்ளன
டரிபொரி மாவட்டத்தின் இரு கிராமங்களில் இந்த படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
முனிமா கிராமத்திலும் கரிடா கிராமத்திலும் இந்த படுகொலைகள் இடம்பெற்றுள்ளன படுகொலை செய்யப்பட்டவர்களில் இருசர் கர்ப்பிணிப்பெண்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரிடா கிராமத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களி;ன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன
தடியொன்றுடன் பிணைக்கப்பட்டுள்ள நிலையில் பல உடல்களை அந்த படங்களில் காணமுடிகின்றது.
சிலர் துண்டுதுண்டாக வெட்டப்பட்டுள்ளனர் அவர்களின் உடல்பாகங்களை அடையாளம் காணமுடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
படுகொலைகளில் ஈடுபட்டவர்களை கைதுசெய்வதாக உறுதியளித்துள்ள பப்புவாநியுகினியின் பிரதமர் ஜேம்ஸ் மராப்பே தனது வாழ்க்கையின் மிகவும் துயரமான நாள் இது என குறிப்பிட்டுள்ளார்
நான் காலையில் எழுந்து எனது சமையலறைக்கு சென்றவேளை துப்பாக்கி சத்தங்கள் கேட்டன சில வீடுகள் எரிந்துகொண்டிருந்தன என கரிடா உhப சுகாதார நிலையத்திற்கு பொறுப்பாகவுள்ள பிலிப் பிமுவா என்ற நபர் தெரிவித்துள்ளார்.
நான் எதிரிகள் கிராமத்திற்கு வந்துவிட்டார்கள் என்பதை உணர்ந்து அங்கிருந்து தப்பியோடி மரங்களிற்குள் ஒளிந்திருந்தேன் என மேலும் தெரிவித்துள்ள அவர் நான் திரும்பி வந்து பார்த்தவேளை உடல்கள் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட நிலையில் காணப்பட்டன வீடுகள் எரிக்கப்பட்டிருந்தன எனவும் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்டவர்கள் அனைவரையும் எனக்கு தெரியும் அவர்கள் அனைவரும் எனது மக்கள் ஆனால் அவர்களது உடல்கள் மிக மோசமாக சிதைக்கப்பட்டுள்ளதால் அவர்களது உடல்களை எங்களால் அடையாளம் காணமுடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் துண்டுதுண்டாக வெட்டப்பட்டிருந்தனர் சில உடல்பாகங்களை அடையாளம் காணமுடியவில்லை எது கை எது கால் என்பது தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் உடல்களை நுளம்புவலையில் சுற்றி எடுத்தபடி அந்த கிராமத்திலிருந்து தப்பியோடி வந்துவிட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நன்றி வீரகேசரி
சர்ச்சைக்குரிய சட்டமூலத்துக்கு முடிவு - ஹொங்கொங் தலைவர் அறிவிப்பு
10/07/2019 ஹொங்கொங் தலைவர் காரிலாம் அந்தப் பிராந்தியத்தில் கைதுசெய்யப்பட்டவர்களை விசாரணைக்காக சீன பிரதான நிலப் முடிவுக்கு பகுதிக்கு அனுப்பும் சர்ச்சைக்குரிய சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளதாக நேற்று செவ்வாய்க்கிழமை அறிவிப்புச் செய்துள்ளார்.

ஊடகவியலாளர் மாநாடொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த அறிவிப்பைச் செய்தார். அந்த சட்டமூலம் தொடர்பான அரசாங்கத்தின் பணி முற்றுமுழுதாக ஒரு தோல்வியாகவிருந்ததாக அவர் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைக்கு அமைய அந்த சட்டமூலம் முழுமையாக வாபஸ் பெற்றுக்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.
அந்த சட்டமூலத்திற்கு எதிராக ஹொங் கொங்கில் இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டங்களையடுத்து அந்த சட்டமூலத்தின் அமுலாக்கம் ஏற்கனவே காலவரையறையின்றி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் அரசாங்கத்தின் நேர்மை தொடர்பான சந்தேகங் கள் மற்றும் அரசாங்கம் சட்ட சபையினூடாக அந்த சட்டமூல த்தை மீண்டும் முன்னெடுக்கலாம் என்ற கவலைகள் தற்போதும் நீடித்துள்ளதாக குறிப்பிட்ட காரி லாம், ''அதனால் அத்தகைய திட்டம் எதுவும் இங்கு இல்லை என்பதையும் அந்த சட்டமூலம் மரணித்து விட்டது என்பதையும் நான் இங்கு வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்தார்.
அந்த சட்டமூலம் 2020 ஆம் ஆண்டு தற்போதைய சட்டமன்ற தவணை முடிவு றும் போது முடிவுக்கு கொண்டுவரப்படும் என அவர் இதற்கு முன் கருத்து வெளியி டுகையில் தெரிவித்திருந்தமை குறிப்பி டத்தக்கது. நன்றி வீரகேசரி
ரஷ்யாவையும் சீனாவையும் இணைக்கும் 1,250 மைல் நீள நெடுஞ்சாலை
11/07/2019 ரஷ்யாவானது ஐரோப்பாவையும் சீனாவையும் இணைக்கும் வகையில் தனது பிராந்தியத்தினூடாக சீனாவுக்கு 1,250 மைல் நீளமான நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதற்கு அங்கீகாரமளித்துள்ளது.
தனிப்பட்ட ரீதியில் நிதிவசதியளிக்கப்பட்ட இந்த மெரிடியன் நெடுஞ்சாலை பெலாரஸுடனான ரஷ்ய எல்லையிலிருந்து கஸகஸ்தான் வரை சென்று ஹம்பேர்க் பிராந்தியத்திலிருந்து சீனாவின் ஷங்காய் நகர் வரை விரிவுபடும் நெடுஞ்சாலை வலைப்பின்னலின் அங்கமாக அமையவுள்ளது.

சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின் பட்டையொன்று பாதையொன்று திட்டத்தின் அங்கமான இந்த நெடுஞ்சாலையை ஸ்தாபிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாதை ஸ்தாபிக்கப்பட்டதும் அது ஐரோப்பாவுக்கும் சீனாவுக்குமிடையில் பொருட்களை கொண்டு செல்வதற்கான குறுகிய பாதையாக அமையும். நன்றி வீரகேசரி
இந்தியாவுக்கு எதிராக ட்ரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு
10/07/2019 அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் நாடாக இந்தியா நீண்ட காலமாக உள்ளது. இதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இந்தியா மீது மீண்டும் குற்றச்சாட்டியுள்ளார்.
இது குறித்து ட்ரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது,
அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா கூடுதலான வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகின்ற நிலையில், முன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை அவர் அண்மையில் நீக்கினார்.
இந்நிலையில், கடந்த 28 ஆம் திகதி ஜப்பானின் ஒசாகா நகரில் இடம்பெற்ற ஜி-20 உச்சி மாநாட்டின்போது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும், இந்தியப் பிரதமர் மோடியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில்,வர்த்தக பிரச்சினைகள் குறித்து இருதரப்பு வர்த்தக அமைச்சர்கள் சந்தித்து பேசுவது என முடிவானது.இந் நிலையிலேயே ட்ரம்ப் இவ்வாறான குற்றச்சாட்டை இந்தியா மீது சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
பிரிட்டனின் எண்ணெய் கப்பலை கைப்பற்ற முயன்ற ஈரானிய படகுகள்- கடும் எச்சரிக்கை விடுத்த போர்க்கப்பல்
11/07/2019 பராசீக வளைகுடாவில் பயணித்துக்கொண்டிருந்த பிரிட்டனின் எண்ணெய்க்கப்பலை ஈரான் கைப்பற்ற முயற்சி செய்ததாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையணியின் படகுகள் பிரிட்டனின் எண்ணெய் கப்பலை இடைமறித்து கைப்பற்ற முயன்றன என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனின் ஹெரிட்டேஜ் என்ற எண்ணெய்கப்பல் பாரசீக வளைகுடாவிலிருந்து ஹார்முஸ் ஜலசந்திக்கு செல்ல முயன்றவேளை ஈரானிய படகுகள் அந்த கப்பலை நோக்கி சென்றதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
படகிலிருந்தவர்கள் பிரிட்டனின் எண்ணெய் கப்பலை பாதை மாறி பயணிக்குமாறும் ஈரானின் கடல்பகுதிக்கு செல்லுமாறும் உத்தரவிட்டனர் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவ்வேளை அந்த பகுதியின் மேலாக பயணித்துக்கொண்டிருந்த அமெரிக்க விமானமொன்று அதனை படம் பிடித்துள்ளது.
இதேவேளை ஈரானின் எண்ணெய் கப்பலிற்கு பாதுகாப்பாக சென்று கொண்டிருந்த பிரிட்டனின் கடற்படை கப்பலான எச்எம்எஸ் மொன்டிரோஸ் ஈரானிய படகுகள் மீது தனது துப்பாக்கி திருப்பி கடும் எச்சரிக்கை விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை மூன்று ஈரானிய படகுகள் சர்வதேச சட்டத்திற்கு முரணாக பிரிட்டனின் எண்ணெய் கப்பலை கைப்பற்ற முயன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது என பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து பிரிட்டனின் போர்க்கப்பல் ஈரானிய படகுகளிற்கும் பிரிட்டனின் எண்ணெய்கப்பல்களிற்கும் இடையில் நுழைந்து ஈரானிய படகுகளிற்கு கடும் எச்சரிக்கையை விடுத்ததாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.
நாங்கள் இந்த சம்பவத்தினால் ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம் அந்த பகுதியில் பதட்டத்தை குறைக்குமாறு ஈரானை கேட்டுக்கொள்கி;ன்றோம் என பிரிட்டன் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment