பொன் விழா ஆண்டில் இந்தப்படங்கள் (1969 – 2019) பகுதி 3 – ச. சுந்தரதாஸ்

கன்னிப்பெண்
எம்.ஜி.ஆர் நாடக மன்ற நிர்வாகியாகவும் பின்னர் எம்.ஜி.ஆரின் தாயார் சத்யாவின் பெயரில் தனது பட நிறுவனத்தை தொடங்கி எம் ஜி ஆரின் நடிப்பில் தெய்வததாய் நான் ஆணையிட்டால், காவல்காரன், கண்ணன் என் காதலன் ஆகிய படங்களைத் தயாரித்தவர்.

1969ம் ஆண்டு வீரப்பனுக்கு எம்.ஜி.ஆரின் கால்ஷீட்
கிட்டவில்லை. எனவே சத்யா பிக்சர்ஸ் என்ற புதிய பட நிறுவனத்தை ஆரம்பித்து தயாரித்தப் படம் தான் கன்னிப் பெண்.

பிரபல இளம் நடிகராக திரையில் தோன்றிக் கொண்டிருந்த மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்தான் பட்திற்கு ஹீரோ! இவருடன் வாணிஸ்ரீ லட்சுமி, வெண்ணிற ஆடை நிர்மலா மனோகர் வி.கே.ராமசாமி சிவகுமார் சோ தேங்காள் சீனிவாசன் செந்தாமரை என்று பல நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள்.

தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என்று புகழப்பட்ட ஜெய்சங்கர் சண்டைக் காட்சிகளை கொண்ட படங்களில் மட்டும் நடிப்பதில் கவனம் செலுத்தவில்லை. அத்துடன் கதையம்சம் கொண்ட சமூகக் கதைகளையும் தெரிவு செய்து நடித்துவந்நதார். இதன் காரணமாகவே அவரால் ஏராளமான படங்களில் கதாநாயகனாக நடிக்க முடிந்தது. இந்த அடிப்படையில்தான் சமூகப் படமாக கன்னிப் பெண் உருவானது.
வளரும் இளம் நடிகராக திரையுலகில் வலம் வந்து கொண்டிருந்த சிவகுமாருக்கு இந்தப் படத்தில் நல்ல வேடம் வழங்கப்பட்டிருந்தது. அவருக்கு ஜோடி வெண்ணிற ஆடை நிர்மலா, லட்சுமி வாணிஸ்ரீ நிர்மலா என்று மூன்று நாயகிகள் ஒருங்கே இணைந்து நடித்த படமாக இந்தப்படம் தயாரானது.  

தனது அடுத்தப் படமாக எம்.ஜி.ஆரின் நடிப்பில் ரிக்ஷாக்காரன் படத்தை கலரில் தயாரிக் வீரப்பன் திட்டமிட்டிருந்தார். ஆனால் எம்.ஜி.ஆர் தனது சொந்தப்படமான அடிமைப் பெண்ணில் தீவிரமாக இருந்ததால் கன்னிப்பெண் உருவானாள்.


படத்தின் ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர் தோன்றி வீரப்பனுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக காட்டியிருந்தார்கள்.

ஜெய்சங்கரின் முறைப் பெண் லட்சுமி. இவர்கள் காதலிக்கிறார்கள். ஆனால் ஜெய் போலிஸில் சேரவே லட்சுமியின் தந்தை அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருமணத்திற்கு தடை போடுகிறார். இதற்கிடையில் ஜெய் சூழ்நிலை காரணமாக வாணிஸ்ரீpயை மணக்கிறார். ஜெய்யின் தங்கை நிர்மலா அப்பாவியான சிவகுமாரை காதலித்து கரம் பற்றுகிறார். சிவகுமாரே வில்லன்களின் கைப்பிடியில்! இவ்வாறு படத்தின கதை நகருகிறது. வீரப்பன் எழுதிய கதைக்ககு ஆர் கே சண்முகம் வசனம் எழுதியிருந்தார்
எம்.ஜி.ஆரின் ஆரம்ப கால பட இயக்குனரான ஏ. காசிலிங்கம் படத்தை டைரக்ட் செய்திருந்தார்.

படத்தில் மிகவும் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது அதன் பாடல்கள்தான். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் அனைத்துப் பாடல்களும் இனிமையாக அமைந்தன.

டி.எம்.எஸ். ஈஸ்வரி பாடும் ஒளி பிறந்த போது மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா பாடல் மிகப் பிரபலமடைந்தது. இப் பாடலின் ஆரம்ப இசையை இலங்கை வானொலி தனது பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சியின் அரும்ப இசையாக பயன்படுத்திக் கொண்டது. 

அதே போல் எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் ஆரம்ப கால பாட்டான பௌர்ணமி நிலவில் பனிவிழும் இரவில் பாடல் ஜானகியின் குரலுடன் இணைந்து இனிமையாக ஒலித்தது. படத்தில் சிவகுமாரும் நிர்மலாவும் இப் பாடலுக்கு நடித்திருந்தார்கள்.

இதைத் தவிர இறைவன் எனக்கொரு உலகத்தைப் படைத்து அடி ஏன்டி அசட்டு பெண்ணே, உன் அத்தைக்கு ஒத்தக் கண்ணு இந்தப் பக்கம்தான் பாடல்களும் கேட்கும்படியாக அமைந்தன. விறுவிறுப்பான காட்சிகளுடன் உருவான கன்னிப் பெண் ரசிகர்களை கவரத் தவறவில்லை.

கண்ணே பாப்பா
பெற்றோரை பிரந்த குழந்தை லட்சுமிக்கு லாட்டரி சீட்டில் இலட்ச ரூபாய் பரிசு கிடைக்கிறது. அதை அபகரிக்க பலர் முயற்சி செய்கிறார்கள். லட்சுமியை அவர்களிடம் காப்பாற்ற அவளின் தாய் ஒரு புறம் போராடுகிறாள். தந்தையோ லட்சுமி தன் மகள் என்று தெரியாமல் வில்லன்களுடன் சேர்ந்து சூழ்ச்சி செய்கிறான். இதுதான் கண்ணே பாப்பா படம்.

குழந்தை லட்சுமியாக பேபிராணி நடித்தார். அவரின் தாயாக கே.ஆர்.விஜயாவும், தந்தையாக முத்துராமனும் நடித்தார்கள். இவர்களுடன் கண் தெரியாத பிச்சைக்காரராக சந்திரபாபு நடித்திருந்தார். நம்பியாருக்கு இதில் நல்லவன் வேடம் போலிஸ் அதிகாரியாக வருகிறார். இவர்களைத் தவிர அனேகமாக நடித்த எல்லாருமே கௌரவ நடிகர்கள்தான். விஜயகுமாரி மனோரமா கே.கண்ணன் என்று பலர் இதில் வருகிறார்கள். பிரபல கதாசிரியரான பாலமுருகன் படத்திற்கு கதை வசனம் எழுதியிருந்தார். பி. மாதவன் படத்தை இயக்கினார்.

கண்ணே பாப்பா என் கணிமுத்து பாப்பா, தென்றலில் ஆடை பின்ன பாடல்கள் இதில் இடம் பெற்றன. இதைத் தவிர கிறிஸ்துமஸ் பாடலாக சத்தியம் முத்திரை கட்டளை இட்டது என்ற பாடலும் இடம் பெற்று பிரபலமடைந்தது. குறைந்த செலவில் தயாராகி வெற்றி கண்ட படம் கண்ணே பாப்பா.



No comments: