சிட்னியில் பனைமரக்காடு - முழுநீளத் திரைப்படம் 14/10/2018

ஈழத்து திரைப்படங்களில் ஒன்றான பனைமரக்காடு என்ற திரைப்படத்தின் முதலாவது காட்சி மெல்பேர்ணில்  ஒக்ரோபர் 6 ஆம் திகதி மாலை 3 மணிக்கும், சிட்னியில் ஒக்ரோபர் மாதம் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணிக்கும், பின்னர் மாலை 5 மணிக்கும் என இரண்டு காட்சிகளாகவும் திரையிடப்படவுள்ளது.


அதேவேளை ஒக்ரோபர் மாதம் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தின் ராஜா திரையரங்கில் சிறப்பு விருந்தினர்களுக்கான மூன்று காட்சிகள் காண்பிக்கப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து ஈழத்தின் அனைத்து பகுதிகளிலும் தமிழர் புலம்பெயர் தேசங்களிலும் திரையிடுவதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மெல்பேர்ண் காட்சி விபரம்
காலம்: ஒக்ரோபர் 6 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு
இடம்: Menzies Building E365, Monash University, Wellington Road, Clayton Victoria
அன்பளிப்பு: $10 வெள்ளிகள்
தாயகத்திலிருந்து புதிய வெளியீடாக கேசவராஜனின் இயக்கத்தில் வெளிவரும், பனைமரக்காடு என்ற முழுநீள திரைப்படமானது போரிற்கு பின்னரான காலத்தில், தமிழ்மக்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடிகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
ஈழத்து படைப்புக்களமானது உரியவகையில் ஆதரவு வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்படாது போனால், எமது தாயகத்தின் உயிர்ப்பான வரலாறுகள் மறைக்கப்பட்டுவிடும்


இருக்கின்ற இடைவெளியில் எமது மக்களின் உணர்வுகள் சிலவற்றை சொல்லலாம், சிலவற்றை சொல்லாமல் சொல்லலாம் எனச்சொல்லும் இயக்குநர், 1986 இல் “தாயகமே தாகம்” என்ற திரைப்படத்துடன் அறிமுகமாகி, தமிழீழ திரைப்படத்துறையின் ஊடாக பிரபலமான “பிஞ்சுமனம்”, “திசைகள் வெளிக்கும்”, கடற்புலிகளின் “கடலோரக்காற்று”, “அம்மா நலமா” என்ற திரைப்படங்களையும் பல குறும்படங்களையும் இயக்கியவர்.
இருநூறுக்கும் மேற்பட்டவர்களின் உழைப்பில் உருவாகி வெளியாகும் பனைமரக்காடு என்ற திரைப்பட உருவாக்கத்தின் போது, தாயகத்தில் பல்வேறு அரசியல், பாதுகாப்பு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தே இத்திரைப்படம் முழுமையாக்கப்பட்டிருக்கிறது.
இத்திரைப்படத்தின் வெளியிடலில் கிடைக்கப்பெறும் நிதியை, முழுமையாகவே ஈழத்து படைப்புத்துறையை வளர்க்கும் நோக்குடன் இயக்குநரிடமே நேரடியாக வழங்கப்படவுள்ளது.
-->
அனைவரும் முழுமையான ஆதரவை வழங்கி ஒத்துழைக்குமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.











No comments: