மானிப்பாய் இந்துக் கல்லூரி, இந்து மகளிர் கல்லூரியின் இராப்போசன விருந்து 30.09.2018

.


மானிப்பாய் இந்துக் கல்லூரி, இந்து மகளிர் கல்லூரியின் இராப்போசன விருந்து சென்ற ஞாயிற்றுக்கிழமை 30.09.2018 அன்று இடம்பெற்றது . மானிப்பாய் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்கள் மாணவிகள் அபிமானிகள்  என அரங்கம் நிறைந்து காணப்பட்டது .  தமிழ் வாழ்த்து கல்லூரி கீதம் மங்கள விளக்கேற்றல் தலைவர் உரை என பண்பாட்டு விடயங்களைத் தொடர்ந்து . குயின்ஸ்லாந்தில் இருந்து வருகை தந்திருந்த பஞ்ச இந்திர வில்லிசைக் குழுவினர் வில்லுப் பாட்டு நிகழ்வை நடாத்தினார்கள். 

தொடர்ந்து நடந்த பாடல் நிகழ்வுகள் சுருக்கமாகவும் இனிமையாகவும் இருந்தது. குறிப்பாக நீலக் குயிலாக வந்த இளம் பாடகி எல்லோர் மனதையும் வென்றுவிட்டார் .  வழமை போல ராஜஜோகன் நன்றாகப் பாடி சபையினரை உற்சாகமாக வைத்திருந்தார்.


தொடர்ந்து வந்த டைட்டஸ் பிரின்ஸ் குழுவினரின் கூத்தின் ஒரு பகுதி மிக நன்றாக இருந்தது.  குரல் வளம் பாராட்டுதலுக் குரியது.

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போல் சம்பந்தரின் அன்பான உணவு பரிமாறல்  மிக அருமை . சுவையுடன் கலந்த இரவு உணவு .

இனிமையான இரவுப் பொழுதாக குறித்த நேரத்தில் ஆரம்பித்து குறித்த நேரத்தில் நிறைவு செய்த ஒருங்கிணைப்புக் குழுவினருக்கு ஒரு சபாஷ் .

என் எண்ணத்தையும் பகிரலாம் என்பதற்காக இதைக் கூறுகின்றேன் , இரவு உணவு நிகழ்வில் நிகழ்ச்சிகளை குறைத்து வருகை தந்திருந்த நபர்கள் சிநேகிதர்களுடன்  உரையாடவும் , கதைக்கவும்  நேரம் விட்டு விட்டு  நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

No comments: