வாஸின் மரண தண்டனைக்கு எதிரான மேன்முறையீடு விசாரணை திகதி அறிவிப்பு.!
இனி அமெரிக்க விசாவுக்கு இது கட்டாயமாம்.!
வாஸின் மரண தண்டனைக்கு எதிரான மேன்முறையீடு விசாரணை திகதி அறிவிப்பு.!
03/04/2018 வர்த்தகர் மொஹமட் சியாம் படு கொலை விவகாரத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளி ட்ட குற்றவாளிகளின் மேன்முறையீடுகளை எதிர்வரும் செப்டெம்பர் 25 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
தனக்கு எதிராக ட்ரயல் அட்பார் நீதிமன்றம் ஊடாக வழங்கப்பட்ட மரண தண்டனையை நீக்குமாறு கோரி வாஸ், அவரது மகன் ரவிந்து வாஸ் உள்ளிட்ட ஐந்து குற்றவாளிகளும் தாக்கல் செய்த மேன்முறையீடு நேற்று விசாரணைக்கு வந்த போதே உயர் நீதிமன்றம் இந்த திகதி குறிப்பிட்டது.
அதன்படி செப்டெம்பர் 25 ஆம் திகதி முதல் இவ்வழக்கு தொடர்ச்சியாக விசா ரணை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி.
இனி அமெரிக்க விசாவுக்கு இது கட்டாயமாம்.!
02/04/2018 அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க விசா பெறுவதற்கு விண்ணப்பிப்பவர்களில் பெரும்பாலானவர்களது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் உள்ளடங்கலான சமூக வலைத்தள தகவல்களை பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டை ஆரம்பிக்க விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அரசாங்கம் தெரிவிக்கிறது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தால் முன்வைக்கப்பட்டுள்ள இந்தப் பிரேரணை யின் பிரகாரம் பெரும்பாலான விசா விண்ணப்பதாரிகளிடம் தமது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் இணையத்தள பக்கங்கள் தொடர்பான விபரங்களை வழங்கக் கோரப்படும்.
இதன் கீழ் விண்ணப்பதாரிகள் கடந்த 5 வருட காலத்திலான அனைத்து சமூக ஊடகங்கள் தொடர்பான தமது ஆளடையாளப்படுத்தல்களை வெளிப்படுத்த வேண்டியிருக்கும்.
மேற்படி பிரேரணைகளால் வருடமொன்றுக்கு சுமார் 14.7 மில்லியன் பேர் பாதிப்பை எதிர்கொள்ளவுள்ளனர்.
இந்த சமூக வலைத்தளங்கள் பற்றிய தகவல்கள் குடியேற்றவாசிகள் மற்றும் குடியேற்றவாசிகள் அல்லாதோர் ஆகிய இரு தரப்பினர் தொடர்பிலும் ஆளடையாளம் காணவும் பரிசீலனையை மேற்கொள்ளவும் பயன்படுத்தப்படவுள்ளன.
இதன்போது விண்ணப்பதாரிகளிடம் அவர்களால் ஐந்து வருட காலப் பகுதியில் பயன்படுத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசி இலக்கங்கள், இலத்திரனியல் அஞ்சல்கள் மற்றும் பயண வரலாறு என்பனவற்றை வெளிப்படுத்தக் கோரப்படும்.
அத்துடன் அவர்கள் எந்தவொரு நாட்டிலுமிருந்து வெளியேற்றப்பட்டார்களா அல்லது அவர்களின் உறவினர்கள் எவராவது தீவிரவாத செயற்பாட்டுடன் தொடர்புபட்டுள்ளார்களா என்பன குறித்தும் வினவப்படும்.
அதேசமயம் விசாவின்றி அமெரிக்காவுக்கு பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள பிரித்தானியா, கனடா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் புதிய பிரேரணையால் பாதிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க விசாவைப் பெறுவது தொடர் பில் மேற்படி விதிவிலக்கைப் பெறாத நாடுகளான இந்தியா, சீனா மற்றும் மெக்ஸிக்கோ ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு பணியாற்றவோ அன்றி விடுமுறையைக் கழிக்கவோ விசா பெற முயற்சிக்கையில் புதிய பிரேரணையால் குழப்ப நிலை ஏற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் புதிய பிரேரணை தீவிரவாதிகளை அடையாளம் காண பெரிதும் உதவும் என அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
2015 ஆம் ஆண்டு அமெரிக்க கலிபோர்னிய மாநிலத்திலுள்ள சான்பிரான்சிஸ்கோவில் இடம்பெற்ற 14 பேரைப் பலி கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது தாக் குதல்தாரிகளுக்கிடையே சமூகவலைத் தளங் களினூடாக அடிப்படைவாத செய்திகள் பரிமாறிக் கொள்ளப்பட்டிருந்தன.
அந்த செய்திகளை உரிய நேரத்தில் கண் டறிந்திருந்தால் அந்தத் தாக்குதலை தவிர்த் திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment