உலகச் செய்திகள்


புட்டினை வெள்ளை மாளிகைக்கு அழைத்தார் டிரம்ப் 

பாக்கிஸ்தானில் கிறிஸ்தவர்கள் நால்வர் சுட்டுக்கொலை
புட்டினை வெள்ளை மாளிகைக்கு அழைத்தார் டிரம்ப் 

03/04/2018 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை பேச்சுவார்த்தைக்காக வெள்ளை மாளிகைக்கு அழைத்துள்ளார் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் புட்டின் வெற்றிபெற்றதை தொடர்ந்து அவரை வாழ்த்துவதற்காக தொலைபேசியில் உரையாடியவேளையிலேயே டிரம்ப் இந்த அழைப்பை விடுத்தார் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான உச்சிமாநாட்டிற்காகவே டிரம்ப் இந்த அழைப்பை விடுத்துள்ளார் என தெரிவித்துள்ள ரஷ்யா எனினும் பின்னர் உருவான நெருக்கடிகளால் இந்த விடயத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
இரு ஜனாதிபதிகளும் தொலைபேசியில் உரையாடிய வேளை வொஷிங்டனில் உச்சிமாநாடொன்றை நடத்த தீர்மானித்தனர் என வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை வெள்ளை மாளிகையின் பேச்சாளர் புட்டினிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதை உறுதிசெய்யாத அதேவேளை இரு ஜனாதிபதிகளும் எங்கு சந்திக்கலாம் என்பது  குறித்து ஆராய்ந்ததாக தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 
பாக்கிஸ்தானில் கிறிஸ்தவர்கள் நால்வர் சுட்டுக்கொலை

03/04/2018 பாக்கிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில்  ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு கிறிஸ்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
பாக்கிஸ்தானில் சிறுபான்மை மதத்தவர்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ரிக்சோவில் பயணம் செய்துகொண்டிருந்த குடும்பத்தினர் மீது மோட்டார்சைக்கிளில் வந்தவர்கள்  துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர் என பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த பெண்மணியொருவர் மவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது தந்தை உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இது திட்டமிடப்பட்ட தாக்குதலாக சந்தேகிப்பதாகவும்  இதுவொரு பயங்கரவாத தாக்குதல்  எனவும் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
பெருமளவு கிறிஸ்தவர்கள் வாழும் பகுதியொன்றில் உள்ள தங்கள் உறவினர்களை பார்ப்பதற்காக சென்றவர்கள் மீதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி No comments: