உலகச் செய்திகள்


பாகிஸ்தானில் விமான விபத்து ; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

அனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்

இஸ்ரேல் மீது ஹமாஸ் தொடர் ரொக்கட் தாக்குதல்

ட்ரம்ப் மீது சி.என்.என். வழக்குப் பதிவு

காசா எல்லையில் 70 இடங்களில் ரொக்கெட்  குண்டுவீச்சு

ட்ரம்ப் மீது சி.என்.என். வழக்குப் பதிவு

ட்ரம்ப் தலைமையில் தீபாவளி பண்டிகை

கருணாநிதி மறைந்து 100ஆவது நாள் 

காட்டுத்தீயில் சிக்கி 50 பேர் பலி - அமெரிக்காவில் சம்பவம் 

பிரெக்சிட் உடன்படிக்கையை வெளியிட்டது ஐரோப்பிய யூனியன்

பத்திரிகையாளரை கொலை செய்யுமாறு சவுதி இளவரசர் உத்தரவிட்டார்- சிஐஏ

கஜா புயலுக்கு 800 ஏக்கர் வாழை, கரும்பு பாதிப்பு

மாலைதீவின் புதிய ஜனாதிபதியானார் இப்ராகிம் மொகமது சாலிக்


பாகிஸ்தானில் விமான விபத்து ; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

12/11/2018 பாகிஸ்தானில் விமானமொன்று தரையிறங்கும்போது அதன் இரு சக்கரங்களிலும் எதிர்பாராத விதமாக காற்று வெளியேறியமையினால் ஓடு பாதையை கடந்து சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து பஞ்ச்குர் நகருக்கு பயணித்த பாகிஸ்தானிய சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான  விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
எனினும் இந்த விபத்தின் போது விமானத்தில் பயணித்த 48 பயணிகள் உட்பட அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
விமானம் தரையிறங்கும்போது ஓடு பாதையின் தரைப்பரப்பு மிக மோசமான நிலையில் இருந்தமையின் காரணத்தினால்தான் விமானத்தின் சக்கரங்களில் இருந்து காற்றி வெளியேறியது என தகவல்கள் கூறுகின்றன.
விபத்து பற்றி தகவல் அறிந்ததும் மீட்பு பணியாளர்களும், தீயணைப்பு படை வீரர்களும் விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு பயணிகளை விமானத்திலிருந்து வெளியேற்றினர்.  நன்றி வீரகேசரி 

அனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்

12/11/2018 உரிய அனுமதி இல்லாமல் அமெரிக்காவிற்குள்  நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்ற பின்னர் அங்கு வெளிநாட்டினருக்கு குடியுரிமை அளிக்கும் விவகாரத்தில் மிகுந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். 
அண்டை நாடான மெக்சிகோ நாட்டு எல்லை வழியாக அமெரிக்காவில் அடைக்கலம் தேடி செல்லும் மக்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில், உரிய அனுமதி இல்லாமல் அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக  2382 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு அந்நாட்டில் உள்ள 86 சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடஅமெரிக்காவில் வாழும் பஞ்சாபிகள் சங்கம் மூலம் பெறப்பட்ட இந்த தகவலின் அடிப்படையில் இவர்களில் பெரும்பாலானவர்கள் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். சொந்த நாட்டில் வன்முறை மற்றும் அடக்குமுறைக்கு பயந்து இவர்கள் அனைவரும் அமெரிக்காவில் தஞ்சம் அடைய சென்றவர்கள்  எனவும் தெரியவந்துள்ளது.
30 முதல் 35 இலட்சம் ரூபாய் கொடுத்தால் அமெரிக்க குடியுரிமை பெற்று தருவதாக போலி வாக்குறுதி அளிக்கும் சில தரகர்களின் மாயவலையில் விழும் இந்தியர்கள் அங்கு அடைக்கலம் தேடிசென்று குடியுரிமைத்துறை அதிகாரிகளிடம் பிடிபட்டு, சிறையில் அடைபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 


இஸ்ரேல் மீது ஹமாஸ் தொடர் ரொக்கட் தாக்குதல்

13/11/2018 இஸ்ரேல் மீது பாலஸ்தீன போராளிகள் 300ற்கும் மேற்பட்ட ரொக்கட் தாக்குதல்களை மேற்கொண்டுள்ள அதேவேளை இஸ்ரேலிய விமானங்கள் காஸா பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் தொடர் விமானதாக்குதல்களை மேற்கொண்டுள்ளன.
காஸா பள்ளத்தாக்கில் இஸ்ரேலின் விசேட படைப்பிரிவை சேர்ந்தவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதை தொடர்ந்தே மீண்டும் வன்முறை மூண்டுள்ளது.
70ற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளி;ன் இலக்குகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பின் அல்அக்சா தொலைக்காட்சியின் அலுவலகத்தின் மீது தாக்குதல் இடம்பெற்றதாகவும் எனினும் பணியாளர்கள் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டதால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை இது பயங்கரவாத இலக்கு என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் இரு போராளிகள் உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளனர் என பாலஸ்தீனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை காஸாவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட டாங்கி எதிர்ப்பு பீரங்கி தாக்குலில் இஸ்ரேலில் பேருந்தொன்று சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் மீது மேற்கொள்ளப்பட்ட ரொக்கட் தாக்குதலிற்கு ஹமாஸ் அமைப்பும் இஸ்லாமிய ஜிகாத் அமைப்பும் உரிமை கோரியுள்ளன.
ஆக்கிரமிப்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் எங்கள் புதல்வர்களின் உயிர்களிற்காக விலை செலுத்தவேண்டியிருக்கும் என்பதை அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக தாக்குதல்களை தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
காஸா பள்ளத்தாக்கில் இஸ்ரேல் மேற்கொண்ட நடவடிக்கையில் ஹமாஸ் அமைப்பின் உள்ளுர் தளபதியொருவர் உட்பட எட்டு  பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதை தொடர்ந்தே வன்முறைகள் தீவிரமடைந்துள்ளன.
இஸ்ரேல் இதனை உறுதி செய்துள்ளதுடன் தனது விசேட படைப்பிரிவொன்று இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் இதன் போது தனது படைவீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளது.
கான் யூனிஸ் என்ற பகுதியில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
ஹமாஸ் அமைப்பு இந்த தாக்குதலை கோழைத்தனமானது என வர்ணித்துள்ளது.
காஸா பள்ளத்தாக்கிற்குள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரிற்குள்ளிலிருந்து  இஸ்ரேலிய விசேட படைப்பிரிவினர் தாக்குதலை மேற்கொண்டனர் என ஹமாஸ் தெரிவித்துள்ளது
இதன் பின்னர் இஸ்ரேல் விமானதாக்குதல்களையும் டாங்கிகளையும் பயன்படுத்தியுள்ளது.
ஹமாஸ் உறுப்பினரை கடத்தும் நோக்கத்துடனேயே இந்த தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன
கொல்லப்பட்டுள்ள ஹமாஸ் தளபதி நூர்டின் முகமட் சல்மா பராகே ஹமாஸின் சுரங்கப்பாதைகள் திட்டத்தில் முக்கிய பங்களிப்பு செய்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன   நன்றி வீரகேசரி 
ட்ரம்ப் மீது சி.என்.என். வழக்குப் பதிவு

14/11/2018 அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனமான சி.என்.என், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளது.
அத்துடன் சி.என்.என். தொலைக்காட்சியின் நிருபர்  ஜிம் அகோஸ்டாவுக்கு மீண்டும் வெள்ளை மாளிகை நிருபர் அனுமதி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
வெள்ளை மாளி­கையில் கடந்த புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போது ஊட­க­வி­ய­லா­ள­ரான  ஜிம் அகொஸ்டா  கேள்­வி­யொன்றைக் ட்ரம்பிடம் வினவியபோது, வெள்ளை மாளிகை   பெண் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் அவ­ரி­ட­மி­ருந்த  ஒலி­வாங்கி உப­க­ர­ணத்தை பறிக்க முயற்­சித்­துள்ளார்.
இந்­நி­லையில் அது தொடர்பில் வெள்ளை மாளிகை  ஊடக செய­லாளர் சாரா ஹக்­கர்பீ சான்டர்ஸ் தெரி­விக்­கையில்,   
ஜிம்  தனது கரத்தை இளம் பெண்­ணொ­ரு­வரின்   (குறிப்­பிட்ட வெள்ளை மாளிகை உத்­தி­யோ­கத்தர்)  மீது வைத்­த­தா­லேயே  அவ­ரது ஊடக அனு­மதி அட்டை இரத்துச் செய்­யப்­பட்­டுள்­ள­தாக கூறினார். எனினும் மேற்­படி குற்­றச்­சாட்­டுக்கு ஜிம் மறுப்புத் தெரி­வித்­துள்ளார்.
அமெ­ரிக்க இடைத் தேர்­தலில்  குடி­ய­ரசுக் கட்சி  பாரா­ளு­மன்ற பிர­தி­நி­திகள் சபையின் கட்­டுப்­பாட்டை இழந்த அதே­ச­மயம் பாரா­ளு­மன்ற செனட் ச­பையில் தன்னைப் பலப்­ப­டுத்திக் கொண்­டுள்­ளமை குறித்து அமெ­ரிக்க ஜனா­தி­பதி  ஊட­க­வி­ய­லா­ளர்­களின்  கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளித்துக் கொண்­டி­ருந்த வேளையி­லேயே இந்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.
இதன்­போது  மத்­திய அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து  அமெ­ரிக்­காவை நோக்கி வரும் குடி­யேற்­ற­வா­சி­களை  அமெ­ரிக்கா மீதான உலக ஆக்­கி­ர­மிப்பு நட­வ­டிக்­கை­யாக டொனால்ட் ட்ரம்ப் குறிப்­பிட்­ட­மைக்கு  சவால் விடுக்கும் கேள்­விக்­க­ணை­களை  ஜிம் தொடுத்­தி­ருந்தார்.
அத்­துடன் இன­வாதம் மிக்­க­தாக நோக்­கப்­படும்  குடி­யேற்­ற­வா­தத்­திற்கு எதி­ரான  டொனால்ட் ட்­ரம்பின் பிர­சா­ர­மொன்று குறித்தும் அவர் இதன்­போது கேள்வி எழுப்­பினார்.
மேலும் 2016  ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் ரஷ்­யாவின் தலை­யீடு குறித்து ஜிம் கேள்­வியை  கேட்க முயன்ற போது டொனால்ட் ட்ரம்ப்   ஒலி­வாங்­கியை  அகற்­று­மாறு பல தட­வைகள் அவ­ருக்கு உத்­த­ர­விட்டார்.  இதனையடுத்து வெள்ளை மாளிகை பெண்  உத்­தி­யோ­கத்தர் ஒருவர்  அவ­ரது கரத்திலிருந்த ஒலிவாங்கியைப் பறிக்க முயற்சித்த போது  ஜிம் அவருடன் போராடுகையில் அவரது கரம் அந்த உத்தியோகத்தர் மீது தொடுகையுற்றுள்ளது.
அச்சமயத்தில் ஜிம், 'மன்னியுங்கள் அம்மா " என அவரிடம்   மன்னிப்புக் கோரியிருந்தார்.
இந் நிலையிலேயே அகோஸ்டாவின் ஊடக அனு­மதி அட்டை இரத்துச் செய்யப்பட்டதை காரணமாக கூறி அமெரிக்க மாகாண நீதிமன்றத்தில் சி.என்.என். தொலைக்கட்சி வழக்குப் பதிவு செய்துள்ளது.
மேலும் ஜனாதிபதி ட்ரம்ப், அதிகாரிகள் ஜான் கெல்லி, சரா சாண்டர்ஸ் உள்ளிட்ட்ட 6 பேர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எனவே விரைவில் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கொள்ளப்படும் எனவும் அதன் பின்னர் அகோஸ்டா வெற்றிகரமாக வெள்ளை மாளிகை அனுமதியை பெறுவார் என்று சி.என்.என். தெரிவித்துள்ளது.   நன்றி வீரகேசரி 


காசா எல்லையில் 70 இடங்களில் ரொக்கெட்  குண்டுவீச்சு

14/11/2018 இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே பல வருடங்களாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் பாலஸ்தீனத்தின் காஸா எல்லையில் 70 இடங்களில் இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
பாலஸ்தீனத்தின் காஸா எல்லையிலிருந்து இஸ்ரேல் மீது நேற்று 300 ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டன. அதில் பல ரொக்கெட் குண்டுகள் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்தன. ஒரு ஏவுகணை ராணுவ வீரர்கள் சென்ற பஸ் மீது விழுந்து வெடித்தது.
அதில் பலர் காயமடைந்தனர். குடியிருப்பு பகுதியில் நடந்த ரொக்கெட் தாக்குதலில் 19 வயது வாலிபர் படுகாயம் அடைந்தார்.
இத்தாக்குதலை ‘ஹமாஸ்’ தீவிரவாதிகள் நடத்தியது தெரிய வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காஸா மீது சரமாரியாக குண்டுவீசி தாக்கியது. விண்ணில் பறந்து சென்ற இஸ்ரேல் போர் விமானங்கள் காஸா மீது பறந்து 70 நிலைகள் மீது குண்டு வீசியது.
இந்த தாக்குதலில் 3 பேர் பலியாகிதோடு. 2 பேர் காயம் அடைந்துள்ளனர் என பாலஸ்தீனத்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்த 2  தீவிரவாதிகள் பலியானதாக மேலும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தாக்குதல் காரணமாக காஸா மற்றும் தென் இஸ்ரேல் பகுதியில் கரும் புகை எழுந்த வண்ணம் உள்ளது. இஸ்ரேல் பகுதியில் வாழும் மக்கள் வெடிகுண்டு பாதுகாப்பு மையங்களில் இருந்து வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட ரொக்கெட் வீச்சில் இஸ்ரேலில் 12 பேர் காயம் அடைந்துள்ளனர். அதே போன்று பாலஸ்தீனத்தின் காஸாவிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வீடுகள் மற்றும் கட்டிடங்களில் தங்கியிருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.   நன்றி வீரகேசரி 


ட்ரம்ப் மீது சி.என்.என். வழக்குப் பதிவு

14/11/2018 அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனமான சி.என்.என், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளது.
அத்துடன் சி.என்.என். தொலைக்காட்சியின் நிருபர்  ஜிம் அகோஸ்டாவுக்கு மீண்டும் வெள்ளை மாளிகை நிருபர் அனுமதி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
வெள்ளை மாளி­கையில் கடந்த புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போது ஊட­க­வி­ய­லா­ள­ரான  ஜிம் அகொஸ்டா  கேள்­வி­யொன்றைக் ட்ரம்பிடம் வினவியபோது, வெள்ளை மாளிகை   பெண் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் அவ­ரி­ட­மி­ருந்த  ஒலி­வாங்கி உப­க­ர­ணத்தை பறிக்க முயற்­சித்­துள்ளார்.
இந்­நி­லையில் அது தொடர்பில் வெள்ளை மாளிகை  ஊடக செய­லாளர் சாரா ஹக்­கர்பீ சான்டர்ஸ் தெரி­விக்­கையில்,   
ஜிம்  தனது கரத்தை இளம் பெண்­ணொ­ரு­வரின்   (குறிப்­பிட்ட வெள்ளை மாளிகை உத்­தி­யோ­கத்தர்)  மீது வைத்­த­தா­லேயே  அவ­ரது ஊடக அனு­மதி அட்டை இரத்துச் செய்­யப்­பட்­டுள்­ள­தாக கூறினார். எனினும் மேற்­படி குற்­றச்­சாட்­டுக்கு ஜிம் மறுப்புத் தெரி­வித்­துள்ளார்.
அமெ­ரிக்க இடைத் தேர்­தலில்  குடி­ய­ரசுக் கட்சி  பாரா­ளு­மன்ற பிர­தி­நி­திகள் சபையின் கட்­டுப்­பாட்டை இழந்த அதே­ச­மயம் பாரா­ளு­மன்ற செனட் ச­பையில் தன்னைப் பலப்­ப­டுத்திக் கொண்­டுள்­ளமை குறித்து அமெ­ரிக்க ஜனா­தி­பதி  ஊட­க­வி­ய­லா­ளர்­களின்  கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளித்துக் கொண்­டி­ருந்த வேளையி­லேயே இந்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.
இதன்­போது  மத்­திய அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து  அமெ­ரிக்­காவை நோக்கி வரும் குடி­யேற்­ற­வா­சி­களை  அமெ­ரிக்கா மீதான உலக ஆக்­கி­ர­மிப்பு நட­வ­டிக்­கை­யாக டொனால்ட் ட்ரம்ப் குறிப்­பிட்­ட­மைக்கு  சவால் விடுக்கும் கேள்­விக்­க­ணை­களை  ஜிம் தொடுத்­தி­ருந்தார்.
அத்­துடன் இன­வாதம் மிக்­க­தாக நோக்­கப்­படும்  குடி­யேற்­ற­வா­தத்­திற்கு எதி­ரான  டொனால்ட் ட்­ரம்பின் பிர­சா­ர­மொன்று குறித்தும் அவர் இதன்­போது கேள்வி எழுப்­பினார்.
மேலும் 2016  ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் ரஷ்­யாவின் தலை­யீடு குறித்து ஜிம் கேள்­வியை  கேட்க முயன்ற போது டொனால்ட் ட்ரம்ப்   ஒலி­வாங்­கியை  அகற்­று­மாறு பல தட­வைகள் அவ­ருக்கு உத்­த­ர­விட்டார்.  இதனையடுத்து வெள்ளை மாளிகை பெண்  உத்­தி­யோ­கத்தர் ஒருவர்  அவ­ரது கரத்திலிருந்த ஒலிவாங்கியைப் பறிக்க முயற்சித்த போது  ஜிம் அவருடன் போராடுகையில் அவரது கரம் அந்த உத்தியோகத்தர் மீது தொடுகையுற்றுள்ளது.
அச்சமயத்தில் ஜிம், 'மன்னியுங்கள் அம்மா " என அவரிடம்   மன்னிப்புக் கோரியிருந்தார்.
இந் நிலையிலேயே அகோஸ்டாவின் ஊடக அனு­மதி அட்டை இரத்துச் செய்யப்பட்டதை காரணமாக கூறி அமெரிக்க மாகாண நீதிமன்றத்தில் சி.என்.என். தொலைக்கட்சி வழக்குப் பதிவு செய்துள்ளது.
மேலும் ஜனாதிபதி ட்ரம்ப், அதிகாரிகள் ஜான் கெல்லி, சரா சாண்டர்ஸ் உள்ளிட்ட்ட 6 பேர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எனவே விரைவில் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கொள்ளப்படும் எனவும் அதன் பின்னர் அகோஸ்டா வெற்றிகரமாக வெள்ளை மாளிகை அனுமதியை பெறுவார் என்று சி.என்.என். தெரிவித்துள்ளது.  நன்றி வீரகேசரி 

ட்ரம்ப் தலைமையில் தீபாவளி பண்டிகை

15/11/2018 அமெரிக்காவில் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் பண்டிகை கடந்த 13 ஆம் திகதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. 
இவ் விழாவில்  அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவிக்கையில்,
“இந்தியர்கள் கடினமான உழைப்பாளிகள், இந்தியாவை சேர்ந்த பல இலட்சம் கடின உழைப்பாளிகளுக்கு தாயகம் அமெரிக்கா” என புகழாரம் சூட்டினார்.
மேலும், “பிரதமர் நரேந்திர மோடி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன், அவரிடம் விரைவில் பேசுவேன்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த கொண்டாட்டத்தையொட்டி அவர் தனது  சமூக வளைத்தளமான டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார்.
குறித்த பதிவில் அவர், “இன்று (நேற்று முன்தினம்) நாம் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக இங்கே கூடி உள்ளோம். 
தீபாவளி பண்டிகை அமெரிக்காவிலும், உலககெங்கும் உள்ள புத்த மதத்தினர், சீக்கிய மதத்தினர், சமண மதத்தினர் ஆகியோருக்கு விடுமுறை கொண்டாட்டமாக அமைந்துள்ளது. 
தீபாவளி ஒளியேற்றுவதற்கு கோடானுகோடி மக்கள் குடும்பங்களாக, நண்பர்களாக கூடி உள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இந்தப் பதிவில் அவர் இந்துக்களை குறிப்பிட்டு வாழ்த்த மறந்து விட்டார். 
இதனால் கடும் விமர்சனங்களுக்கு ஆளானார். சி.என்.என். டெலிவிஷனின் பாராளுமன்ற செய்தியாளர் மனு ராஜூ இதை குறிப்பிட்டு பதிவிட்டார். உடனே 2 ஆவது முறையாக ட்ரம்ப் டுவிட்டர் பதிவிட்டார். 
ஆனால் அதிலும் இந்துக்களை அவர் மறந்து விட்டு விட்டார்.மீண்டும் அந்த செய்தியாளர் ட்ரம்பின் தவறை சுட்டிக்காட்டினார்.
அதைத் தொடர்ந்து 3 ஆவது முறையாக ட்ரம்ப் தனது டுவிட்டரில் இந்துக்களையும் சேர்த்து பதிவிட்டார். 
அதில் அவர், “இந்து மக்களின் தீபங்களின் விழாவான தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. (தீபாவளி கொண்டாட) வெள்ளை மாளிகையின் ரூஸ்வெல்ட் அறை மிக மிக சிறப்பான (இந்து) மக்களை கொண்டுள்ளது” என குறிப்பிட்டடு பதிவிட்டுள்ளார்.  நன்றி வீரகேசரி 

கருணாநிதி மறைந்து 100ஆவது நாள் 

15/11/2018 கருணாநிதி மறைந்து 100ஆவது நாளையொட்டி அவருடைய சமாதியில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். 
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைந்து நேற்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்தது. இதையொட்டி கருணாநிதியின் சமாதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர்கள்  டி.ஆர்.பாலு, ஆ.ராசா, முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி உட்பட தி.மு.க. நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினார்கள்.
 முன்னதாக கருணாநிதி மறைந்து 100ஆவது நாளையொட்டி அவரது சமாதி பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சமாதியின் மீது தனது தாயார் அஞ்சுகம் அம்மையாருடன் கருணாநிதி இருப்பது போன்ற ஓவியம் பூக்களால் உருவாக்கப்பட்டிருந்தது.
சமாதியில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படம் அலங்கார வளைவு போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. முரசொலி நாளிதழ் ‘லேமினேசன்’ செய்யப்பட்டு சமாதியில் வைக்கப்பட்டிருந்தது.
கருணாநிதி சமாதிக்கு நேற்று அஞ்சலி செலுத்த வந்த பொதுமக்களுக்கு, மு.க.ஸ்டாலினின் சொந்த செலவில் அன்னதானம் வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு உணவு பொதிகள் மற்றும் குடிநீர் போத்தல்கள் வழங்கப்பட்டன. 
இதற்கிடையில், கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்திய படத்தை மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில் “நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் தமிழினத்தின் பேராசான் தலைவர் கருணாநிதி நிரந்தர ஓய்வெடுத்து இன்றோடு 100 நாட்கள்! 80 ஆண்டுகளுக்கு மேலான பொதுவாழ்வில் தோல்வி ஏற்படினும் துவண்டு போகாமல், வீண்பழி சுமத்திய வீணர்களை ஜனநாயக அறவழியில் விரட்டிய அதே வழியில் நாமும் பயணிக்க உறுதியேற்போம்” என தெரிவித்தார்.   நன்றி வீரகேசரி 


காட்டுத்தீயில் சிக்கி 50 பேர் பலி - அமெரிக்காவில் சம்பவம் 

15/11/2018 அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பரவிவரும் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. 
அமெரிக்காவில் 3 இடங்களில் பரவி வருகிற காட்டுத்தீயின் போக்கு தீவிரமாக உள்ளது. தீயைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தெற்கு மற்றும் வடக்கு முனைகளில் இருந்து ஆயிரக்கணக்கான தீயணைப்பு படை வீரர்கள் போராடி வருகிறார்கள். 
ஒரு லட்சத்து 25 ஏக்கர் நிலப்பரப்பில் பரவி உள்ள காட்டுத்தீயில் 30 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 
 அமெரிக்க காட்டுத்தீ வரலாற்றில் மிக ஆபத்தான காட்டுத்தீ இதுதான் என்றும் கூறப்படுகிறது. தீயணைப்பு பணியில் முழு மூச்சுடன் போராடி வருகிற வீரர்களுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மாகாணம் முழுவதும் இந்த காட்டுத்தீக்கு பலியானவர்கள் எண்ணிக்கை  50 ஆக உயர்ந்துள்ளது. பல நூறு பேர் காணாமல் போய் விட்டனர்.
கேம்ப் தீ என்று சொல்லப்படுகிற பாரடைஸ் நகர பகுதி காட்டுத்தீதான் மிக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி பிரெக்சிட் உடன்படிக்கையை வெளியிட்டது ஐரோப்பிய யூனியன்

15/11/2018 ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்றபொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர்.

இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக அந்நாட்டின் பிரதமர்  தெரசா மே சமர்ப்பித்த வரவு தொடர்பாக 585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கையை அமைச்சரவையில் ஒப்புதல் அளித்துள்ளது. 
வெளியேற்றத்துக்கு பின்னர் ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளுக்கும் பிரிட்டனுக்கும் இடையினான எதிர்கால நிதி பரிமாற்றம், பாதுகாப்பு, விசா மற்றும் குடியேற்றக் கொள்கை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. 
மேலும், இனி செயல்பாட்டுக்கு வரும் பிரிட்டன் அரசின் கொள்கை முடிவுகள் தொடர்பாகவும் தனியாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கையை  ஐரோப்பிய யூனியனும் பிரிட்டன் அரசும்  இன்று கூட்டாக வெளியிட்டுள்ளன.
லண்டன் பாராளுமன்றமும் ஐரோப்பிய யூனியன் நாடுகளை சேர்ந்த தலைவர்களும் ஒப்புதல் அளித்த பின்னர் இந்த உடன்படிக்கையில் உள்ள அம்சங்கள் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி பத்திரிகையாளரை கொலை செய்யுமாறு சவுதி இளவரசர் உத்தரவிட்டார்- சிஐஏ

17/11/2018 பத்திரிகையாளர் ஜமால்கசோஜியை படுகொலை செய்யுமாறு சவுதிஅரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமட் பில் சல்மானே உத்தரவிட்டார் என்ற முடிவிற்கு அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சிஐஏ வந்துள்ளதாக வோசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
இளவரசரின் சகோதரர்  காலிட் பின் சல்மான்,அமெரிக்காவிற்கான சவுதி அரேபிய தூதுவர் உட்பட பலர் கொல்லப்பட்ட பத்திரிகையாளருடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல்கள் உட்பட பல புலனாய்வு தகவல்களை அடிப்படையாகவைத்தே சிஐஏ இந்த முடிவிற்கு வந்துள்ளது.
முகமட் பின் சல்மானின் சகோதாரர் காலிட் பின் சல்மான் துருக்கியிலுள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்கு சென்று குறிப்பிட்ட ஆவணங்களை பெறுமாறு தொலைபேசியில் தெரிவித்தார் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வழங்கினார் எனவும் வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
கசோஜி கொல்லப்படுவாரா என்பது காலிட்டிற்கு தெரிந்திருந்ததா என்பது தெரியாது ஆனால்  தனது சகோதரரின் உத்தரவின் பேரில் அவர்  பத்திரிகையாளருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டார் என வோசிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.
சிஐஏயின் மதிப்பீடுகளை அமெரிக்க அதிகாரிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.   நன்றி வீரகேசரி கஜா புயலுக்கு 800 ஏக்கர் வாழை, கரும்பு பாதிப்பு

17/11/2018 இந்தியா தேவதானப்பட்டி பகுதியில் கஜா புயலுக்கு 800 ஏக்கர் வாழை,  கரும்பு பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
நாகை அருகே மையம் கொண்ட கஜா புயல் தேனி மாவட்டத்தையும் விட்டு வைக்கவில்லை. சூறாவளியால் விளை நிலங்கள் சேதமடைந்துள்ளது. 
கஜா புயலால் வராக நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக ஜெயமங்கலம், குள்ளப்புரம், மேல்மங்கலம், வடுகபட்டி ஆகிய  கரையோர பகுதியிலிஇருந்து விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து நெற்பயிர்கள் சேதமாகியுள்ளது. 
மஞ்சளாறு அணை அருகே சட்டமாவு, காமாட்சி அம்மன் கோவில் மற்றும் பாசன பகுதியில் 800 ஏக்கரில் வாழை- செங்கரும்பு பயிரிடப்பட்டு இருந்தது. இதில் கரும்பு பொங்கல் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது.
இந்நிலையில் கொடைக்கானல் மலை பகுதியில் ஒரே நாளில் பெய்த மழையால் மஞ்சளாறு அணை நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டமையால் மஞ்சளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த தண்ணீர் கரும்பு, வாழை தோட்டங்களுக்குள் புகுந்து 800 ஏக்கர் சேதமடைந்துள்ளது.  நன்றி வீரகேசரி 

மாலைதீவின் புதிய ஜனாதிபதியானார் இப்ராகிம் மொகமது சாலிக்

17/11/2018 மாலைதீவில் அன்மையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேரிதலில். எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட இப்ராகிம் முகமது சாலிக் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியாக இன்று அவர் பதவியேற்றார்.
குறித்த பதவியேற்பு நிகழ்வு மாலைதீவு தலைநகர் மாலேவில் நடைபெற்றது.
இந்நிலையில் மாலைதீவின் புதிய ஜனாதிபதிக்கு பல நாட்டு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் இந்திய பிரதமர் மோடி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற இப்ராகிம் மொகமது சாலிக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து மோடிதனது டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக இன்று பதவி ஏற்கும் சாலிக்குக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். 
மாலைதீவின் கட்டுமானம், சுகாதார மேம்பாடு, மற்றும் மனித வள மேம்பாட்டு வளர்ச்சியில் இந்தியாவும் இணைந்து பணியாற்ற விரும்புகிறது. தங்களது பணியை திறம்பட ஆற்றும்படி வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 


No comments: