கவிஞர் திரு.வித்யாசாகருக்கு தமிழ்த்தென்றல் விருது!!


லங்கை திருநாட்டின் தலைநகரான கொழும்புவில் 08.08.2018 சனி கிழமையன்று "தடாகம் கலை இலக்கிய வட்டம்" எனும் அரசு பதிவுகொண்ட இலக்கியப் பேரமைப்பு ஒன்று தனது நூறாவது கவிதைப் போட்டியின் விழாவையும்சிறந்த படைப்பாளிகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விழாவையும்தனது முப்பத்தைந்து வருட வெற்றி விழாவையும் சேர்த்து "பன்னாட்டு படைவிழா - 18" எனும் தலைப்பில் கொண்டாடி மகிழ்ந்தது.
அம்மன்றத்தின் தலைமை நிர்வாகியும் அமைப்பாளருமான கவிஞர் திருமதி ஹிதாயா றிஸ்வி அவர்கள் முன்னின்று நடத்ததமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் திரு. வித்யாசாகர் அவ்விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு அனைவருக்கும் அனைவருக்கும் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
ஆஸ்திரேலியாஜெர்மன்லண்டன்நியூசிலாந்துமலேசியாகத்தார்சவுதி அரேபியாஅமீரகம் மற்றும் தாய் தமிழகமென பலரும் பங்குகொண்டு பெருமைச் சேர்த்த அப்பெருமை மிகு விழாவில் தட்டுங்கள் திறக்கட்டும் தீப்பொறி பறக்கட்டும் எனும் தலைப்பில் சிறப்புக் கவியரங்கம் ஒன்றும் கவிஞர் திரு.வித்யாசாகர் தலைமையில் நடந்தேறியது.

விழாவின் தலைமை விருந்தினராக அரும்பெரும் கவிஞர் திரு. ஜெயராம் சர்மா ஆஸ்திரேலியாகொழும்பு தமிழ்மக்களின் பெருமையைக் கொண்டாடி மகிழும் புரவலர் திரு ஹாசிம் உமர் ப்மரோர் கலந்துகொள்ளஉடன் உயர்திரு. கலைச்செல்வன் மற்றும் கலைவாணரின் புகழ்பரப்பி வரும் அருமைக் கலைஞர் சோழ. நாகராஜன் போன்றோர் முன்னிலை வகிக்கஅறுபதுக்கும் மேற்பட்ட உலகளாவிய பல படைப்பாளிகளுக்கு கவிச்சுடர்மிழ்ச்சுடர்கதைச்சுடர் மற்றும் கவி ஆழி போன்ற பல விருதுகளும்சிறந்த படைப்புக்களுக்கு முத்துமீரான் விருதும்எண்ணற்றப் பலருக்கு  நற்சான்றிதழ்களும் அளிக்கப்பட்டு பலரின்  இலக்கியப்பணிக்கு பெருமைச் சேர்க்கப் பட்டது.
கவிஞர் திரு. முனு சிவசங்கரன்கவிஞர் திரு. பட்டுக்கோட்டை சத்தியன்கவிஞர் திரு. விட்டுக்கட்டி மஸ்தான்கவிஞர் திரு. விருதை பாரிகவிஞர் திரு. சாதிக் பாட்சாதம்பி எழுத்தாளர் திரு கொல்லால் எச். ஜோஸ்கவிஞர் திரு. கார்த்திக் திலகன் எழுத்தாளர் திரு. ஜோதி ஜி என தமிழகத்தைச் சேர்ந்த பல படைப்பாளிகள் அவ்விழாவில் விருது பெற்று சிறப்புற்றனர்.
அவர்களோடு சேர்நது கவிஞர் திரு. வித்யாசாகரின் "ஓட்டைக் குடிசை” எனும் சிறுகதைத்தொகுதிக்கு "முத்துமீரான் விருதும்",  அவருடைய இருபதாண்டுகால எழுத்துப் பணியைப் போற்றும் விதமாய் பல ஆன்றோர் சான்றோர் முன்னிலையில் தமிழ்த்தென்றல்” எனும் உயரிய விருதையும் வழங்கி அம்மாமன்றம் சிறப்பித்தது.
அதுகுறித்து இலங்கையில் இருந்து தமிழகத்தை நோக்கிப் புறப்பட்ட கவிஞர் திரு. வித்யாசாகரை விமான நிலையத்தில் சந்தித்துப் பேசுகையில் "என் ஆதி நிலம் விட்டுப் பயணக்கிறேன்  என்றும்தாயகம் நோக்கிச் செல்கிறேன்மீண்டும் என் தாத்தன் கடல் தாண்டி உங்களையெல்லாம் காண வருவேன் என்றும் சொல்லி மகிழ்ந்தார். மேலும் அந்நிகழ்ச்சி குறித்து அவர் பகிர்ந்துக்கொண்டது:
"வாழ்வின் முந்தைய தவம் எனது ஈழத்து மண்ணை தரிசிக்க வேண்டும் என்பது. இந்த ஆனந்த நிலத்தில் பாதம் பட்டதே பெருமையெனில்ஒரு கவியரங்கையே தடாகத்தின் துணைக்கொண்டு நிகழ்த்தமுடிந்தது எத்தகைய பெருமைக்குரியது எண்ணிப்பாருங்கள். எட்டு கவிஞர்கள் பங்குபெற்ற சிறப்புக் கவியரங்கிற்கு தலைமை வகித்ததில் பெரும்பேறு பெற்றேன். ஒவ்வொரு கவிஞரின் உச்சரிப்பும் வரிகளும் என்னை மெய்சிலிர்க்க வைத்தது.
அரங்கத்தின் மௌனத்தில் அதிர்ந்தச் சொற்களாய் உலகின் சமத்துவத்திற்கான விதைகளாய்மனிதம் பாராட்டுவதற்கென நீண்ட பல கவிஞர்களின் ஆதரவுக் கரங்களாய்ஒரு உச்சபட்ச நன்னடத்தையின் வேர்களை இம்மண்ணில் எக்காலத்திற்குமாய் ஊன்றிவிடும் பெருஞ்சொற்களாய் ஒவ்வொருஒரின் கவிதையும் எனது தலைமையில் அரங்கேறியதில் பெருமையாக இருந்தது.
அதிலும்சகோதரர்கள் சபா மௌலவிரிம்சன்அகமட் மற்றும் திரு. ரிஸ்வி போன்றோரின் உதவியோடு தாறுசஃபா தொலைக்காட்சியில் வாசகர்களோடு கலந்துரையாடும் நேர்காணலிலும் கலந்துக்கொண்டேன். நேரலையாக ஒண்ணேமுக்கால் மணிநேரத்திற்கு ஒளிபரப்பினர். உலகங்கெங்கிலுமிருந்து வாசகர்கள் பலர் அழைத்து வாழ்த்து கூறியும் பல கேள்விகளை முன்வைத்தும் தொலைபேசியின் வழியே பங்கேற்றனர். எல்லாம்நன்மை வேண்டி கண்ணியத்தின் பாதையில் மட்டுமே வாழ்வைக் கடந்ததன் பெரும்பேறு என்றே கருதுகிறேன்.
கேரள மக்களின்நம் இணையற்ற சகோதர சகோதரிகளின் மழைவெள்ளத்தினால் உற்றிருக்கும் கண்ணீருக்கு முன்னால்நம் சந்தோசத்தைப் பெரியதாய் நாம் கொண்டாடிக் கொள்வதற்கில்லை என்பதால் அத்தனை மகிழ்வின் தருணங்களையும் இவ்விடமே விட்டுவிட்டு எனக்கு உறவுகளாக கிடைத்த பல தமிழர்களின் பேரன்பின் பிரிவினை மிகக் கனமாகச் சுமந்தவனாய் இம்மண் விட்டுப் புறப்படுகிறேன்.
எனது உலகமக்களின்பேரன்புத் தமிழர்களின்ஈழத்து வாஞ்சையான நேசக்கரங்களின் எல்லையற்றதொரு பாசத்தின் பேரண்டமொன்றில் திளைத்தவனாய்பெருமகிழ்வோடு எனது பயணத்தை இவ்வுலகின் கடைசி தமிழனை நோக்கி செல்லும்வரை பயணப்பட்டே இருப்பேன். இங்கே உங்களுக்கான நன்றியெனும் சொல் மிகச் சிறிது" என்று தெரிவித்தார்.
நன்றி: செல்வி. றிஸ்காதடாகம் கலை இலக்கிய வட்டம். இலங்கை.


































































































No comments: