இலங்கை மாணவர் கல்வி நிதியம் 30 ஆண்டுகள் நிறைவு 2018 - 2020 பரிபாலனசபை தெரிவு


இலங்கையில் நீடித்த போர் அநர்த்தங்களினால் பெற்றவர்களையும் குடும்பத்தின் மூல உழைப்பாளியையும் இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு  கடந்த 1988 ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியாவிலிருந்து உதவி வரும் தன்னார்வ தொண்டுநிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் முப்பது ஆண்டு நிறைவு நிகழ்வும்  30 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டமும் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை மெல்பனில் நடைபெற்றது.

நிதியத்தின் தலைவர் திரு. விமல் அரவிந்தனின் தலைமையில் மெல்பனில்,  வேர்மண் தெற்கு சமூக மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தின் தொடக்கத்தில்  போர் அநர்த்தங்களினாலும் இயற்கையின் சீற்றத்தினலும் மடிந்த இன்னுயிர்களின் ஆத்மசாந்திக்காக மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
கடந்த ஆண்டு  நடைபெற்ற  பொதுக்கூட்ட குறிப்புகளை திருமதி வித்தியா ஶ்ரீஸ்கந்தராஜா சமர்ப்பித்தார். அதனையடுத்து நிதியத்தின் தலைவர் திரு. விமல் அரவிந்தன், கடந்த ஓராண்டு காலத்தில் நிதியம் இலங்கை மாணவர்கள் தொடர்பாக மேற்கொண்ட ஆக்கபூர்வமான பணிகளை வருடாந்த ஆண்டறிக்கையின் ஊடாக காணொளிக்காட்சியின் மூலம் விளக்கினார்.
அதனையடுத்து 2017 - 2018 ஆண்டறிக்கையும் வரவு - செலவு நிதியறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. நிதியத்தின் உறுப்பினர்களின் கருத்துப்பகிர்வையடுத்து 2018 - 2020 ஆம் ஆண்டுகளின் காலப்பகுதிக்கான  பரிபாலன சபை தெரிவுசெய்யப்பட்டது.
நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தின் தொடர்பாளர்: திரு. த. துரைசிங்கம். கன்பரா மாநிலத்தின் தொடர்பாளர் மருத்துவகலாநிதி ரவீந்திரராஜா. தலைவர்: திரு. லெ.முருகபூபதி. துணைத்தலைவர்கள்: திரு. நடனகுமார், திரு. என்.  தயாளகுமாரன், செயலாளர்: செல்வி திவானா கிருஷ்ணமூர்த்தி, துணைச்செயலாளர்: திருமதி சாந்தி ரவீந்திரன், நிதிச்செயலாளர்: திருமதி வித்தியா ஶ்ரீஸ்கந்தராஜா.
துணை நிதிச்செயலாளர்: திரு. விமல். அரவிந்தன்.
பரிபாலன சபை உறுப்பினர்கள்:
மருத்துவகலாநிதி ( திருமதி ) மதிவதனி சந்திரானந்த், திருவாளர்கள் இராஜரட்ணம் சிவநாதன், ரவி. ரவீந்திரன், அ. சதானந்தவேல், கலாநிதி ஶ்ரீ கௌரிசங்கர். செல்வி மதுபாஷினி பாலசண்முகன்.
கணக்காய்வாளர்: திரு. ஏ. வி. முருகையா.
-->







No comments: