உலகச் செய்திகள்


தாய்வானில் ரயில் விபத்து:  22 பேர் பலி

ஈரான் மீதான பொருளாதார தடை - ட்ரம்ப் அறிவிப்பு

2022 இல் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் பாகிஸ்தான்

பெண்களை கோயிலுக்குள் அனுமதிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்த 1,407 பேர் கைதுதாய்வானில் ரயில் விபத்து:  22 பேர் பலி

21/10/2018 தாய்வான் நாட்டின் இலான் பகுதியில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்ததுடன் 170 க்கும் அதிகமானோர் படுயாமடைந்துள்ளதாக அந் நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.
தாய்வானின் தைபெய் நகரிலிருந்து டைட்டுங் நகரை நோக்கி பயணித்த எக்ஸ்பிரஸ் ரயிலே இன்று மாலை சுமார் 5 மணியளவில் க்சின்மா ரயில் நிலையத்தின் அருகேயுள்ள டுங்ஷான் பகுதியை நெருங்கியபோது தண்டவாளத்திலிருந்து விலகி தரம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த ரயிலின் முன்பகுதியில் இருந்த 8 பெட்டிகள் முற்றிலுமாக சரிந்து விழுந்த நிலையில், பின்னால் இருந்த 5 பெட்டிகள் எதிர்திசையை நோக்கி கிடந்தது.
360- க்கும் அதிகமான பயணிகளை ஏற்றி வந்த அந்த ரயில் விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்ததுடன் 170 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி ஈரான் மீதான பொருளாதார தடை - ட்ரம்ப் அறிவிப்பு

27/10/2018 ஈரான் மீதான சகல பொருளாதார தடைகளும் அடுத்த மாதம் 5ஆம் திகதி முதல் தீவிரமாக அமுலுக்கு வந்து விடும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். 
அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனியுடன் ஈரான் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை 2015ஆம் ஆண்டு ஏற்படுத்தியது. ஆனால் அந்த ஒப்பந்தத்தை ஈரான் மீறிவிட்டதாக கூறி அமெரிக்கா சில மாதங்களுக்கு முன் அதிலிருந்து விலகியது.
 அத்துடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானபோது, விலக்கி கொள்ளப்பட்ட பொருளாதார தடைகள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்.
 மேலும், ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா உள்ளிட்ட எல்லா நாடுகளும் குறைத்துக்கொண்டு, நிறுத்தி விட வேண்டும், அப்படி செய்யாவிட்டால் அந்த நாடுகளும் பொருளாதார தடைகளை சந்திக்க வேண்டியது வரும் எனவும் அவர் எச்சரித்தார்.
இந்த நிலையில் வொஷிங்டன் வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் ட்ரம்ப் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “அணு ஆயுத ஒப்பந்தத்தை தொடர்ந்து, விலக்கிக்கொள்ளப்பட்ட ஈரான் மீதான எல்லா பொருளாதார தடைகளும் மீண்டும் அடுத்த மாதம் 5 ஆம் திகதி முதல் தீவிரமாக அமுலுக்கு வந்து விடும்” என அறிவித்தார்.
உலகின் முன்னணி பயங்கரவாத நாடு, உலகிலேயே மிக அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துகிற ஆயுதங்களை தயாரிக்க விட மாட்டோம் எனவும் ட்ரம்ப் உறுதிபட தெரிவித்தார்.  நன்றி வீரகேசரி 


2022 இல் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் பாகிஸ்தான்

எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் முதன் முறையாக விண்வெளிக்கு மனிதனை அனுப்பவுள்ளதாக பாகிஸ்தானிய தகவல்துறை அமைச்சர் பவாத் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான விண்வெளித் திட்டம் தொடர்பான அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன்போதே சீனாவுடனான மேற்படி கூட்டு திட்டத்திற்கு இம்ரான் கான் ஒப்புதல் அளித்திருந்தார்.
இந்த திட்டம் தொடர்பாக பாகிஸ்தானின் சுபார்கோ என்று அழைக்கப்படும் விண்வெளி ஆய்வு மையமும், சீன கம்பெனியும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 

பெண்களை கோயிலுக்குள் அனுமதிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்த 1,407 பேர் கைது
26/10/2018 சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பதை எதிர்த்து கேரளா முழுவதும் போரட்டம் நடத்திய 1,407 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சென்று சாமி தரிசனம் மேற்கொள்ள கடந்த மாதம் 28 ஆம் திகதி இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
ஆனால் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டதிலிருந்து எதிர்ப்புத் தெரிவித்து கேரளாவில் நாள்தோறும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் என்பன நடந்து வருகின்றன. 
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, மாதாந்த பூஜைக்காக கடந்த வாரம் திறக்கப்பட்டது. ஆனால் பெண்களை அனுதிக்க ரேள அரசு தீவிரம் காட்டி போதுமான பொலிஸ் பாதுகாப்பை உறுதி செய்திருந்தாலும் போராட்டக் காரர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்காமல் தொடர்ந்தும் போராட்டம் நடத்தினர்.
அவர்களின் கடும் எதிர்ப்பால், 10 க்கும் மேற்பட்ட பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந் நிலையில் இப் போராட்டம் வன்முறையாக மாறியமையில் பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்ட எதிராக 440 வழக்குகளை பதிவு செய்திருந்ததுடன் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி, வன்முறையில் ஈடுபட்ட 1,407 பேர் கடந்த 2 நாட்களில் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் சந்தேகத்திற்குரிய 200 க்கும் மேற்பட்டோரின் புகைப்படங்களை மாநிலம் முழுவதும் அனுப்பப்பட்டு தேடுதல் நடததப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.  நன்றி வீரகேசரி 

No comments: