பெரிய பட்ஜெட் படங்களுக்கு நடுவில் சில சிறு பட்ஜெட் படங்கள் களத்தில் இறங்கத்தான் செய்கின்றன. அதிலும் நல்ல கதையுள்ள படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து விடுவது நிச்சயம். அந்த வகையில் ராஜா ரங்குஸ்கி என பெயர் தாங்கி வந்துள்ள படம் ராஜா போல நின்று விளையாடுமா என பார்க்கலாம்.
கதைக்களம்
ஊரில் போலிஸ் இளைஞனாக கதையின் ஹீரோ சிரிஷ். இவருக்கு பெரிதாக குடும்ப பின்னணியெல்லாம் இல்லை. வழக்கம் போல தன் காவல் ரோந்து பணிகளை செய்து வருகிறார். அவருக்கு நண்பனாக சக போலிஸ் தோழன் கல்லூரி வினோத் மட்டுமே.
இடையில் ஹீரோயின் சாந்தினியை சந்திக்கிறார். காதல் வயப்படுகிறார். எழுத்துதுறையில் ஆர்வலராக இருக்கும் இவருக்கென ஒரு தனி பாலிசி. ஒரு நாள் அவர் குடியிருப்பில் பெண் ஒருவர் கொல்லப்படுகிறார். ரோந்து பணிக்காக சென்ற ஹீரோ இதை கண்டு அதிர்ச்சியாகிறார்.
தொடர்ந்து அடுத்தடுத்த கொலைகள். சம்மந்தமில்லாமல் இவர் இக்குற்ற வழக்கில் சிக்க, நடப்பது என்ன? பின்னணியில் இருப்பது யார்? என புரியாத புதிராக நகர்வது தான் ராஜா ரங்குஸ்கி.
படத்தை பற்றிய அலசல்
ஹீரோ சிரிஷ் மெட்ரோ படத்தை தொடர்ந்து 2 வது படமாக இந்த ஆக்ஷன் கதையை தேர்ந்தெடுத்திருக்கிறார். கதையில் இவர் தான் ராஜா. ஒரு சாதாரண போலிஸ் காவலர். காதல் ஒரு பக்கம். பழி மறுபக்கம் என அமைதியற்று அலைகிறார். பொருத்தமான கதையை தான் அவர் தேர்வு செய்திருக்கிறார். அவர் முன்பு நேர்காணல்களில் சொன்னது போல இப்படம் பலருக்கும் பிடிக்கும்.
ஹீரோயின் சாந்தினி பல படங்களில் நடித்த அனுபவத்தை காட்டியுள்ளார். ரங்குஸ்கியாக அவர் கேரக்டரில் இருந்தாலும் ஹீரோவுக்கு நிகரான இடம் இங்கே அவருக்கு என சொல்லலாம். கிட்டத்தட்ட ஒரு ஹீரோயினை மையப்படுத்திய கதை போல என்றால் மிகையல்ல.
இயக்குனர் தரணி தரண் ஜாக்சன் துரை படத்தை கொடுத்து மற்ற படங்களுக்கு மத்தியில் இடம் பிடித்தது போல இப்படத்திலும் அவர் பிடித்து வைத்திருக்கிறார். முதல் பாதி சற்று மெதுவாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதியில் நம் கவனத்தை அதிகப்படுத்தியுள்ளார்.
கல்லூரி வினோத் இப்படத்தில் ஒரு சப்போட்டிங் ரோல் என்றாலும் சில இடங்கள் அடிக்கும் காமெடிகள் படம் பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் புத்துணர்வு கொடுக்கிறார். வாழ்த்துக்கள்.
சுற்றி வளைக்காமல் நேரடியாக விசயத்திற்குள் வரும்படியான காட்சி நகர்வுகளை பார்க்கும் போது பல படங்களை பார்த்து பழகியவர்களுக்கு கொஞ்சம் Uneasy போல தான். ஆனாலும் சம்திங் மிஸ்ஸிங் என சொல்லவைக்கும். அதனால் ஒளிப்பதிவாளருக்கும் இதில் பங்குண்டு.
இசைக்கு யுவன். நாம் சொல்லவா வேண்டும். இந்த படத்திற்கு அவர் பெரிதளவில் சம்பளம் வாங்கவில்லை என்றாலும் தனக்காக இடத்தை ரசிகர்கள் மத்தியில் பிடித்து வைத்துள்ளதோடு, அவர்களின் எதிர்பார்ப்பை இங்கேயும் நிறைவேற்றியுள்ளார். சிம்பு இப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.
இதுமட்டுமல்ல. படத்தில் நாம் எதிர்பாராத விசயங்களும் உண்டு. அதை நாங்கள் இங்கே சொல்லப்போவதில்லை.
கிளாப்ஸ்
படத்தில் கதை நகர்வு சலிப்படையாமல் நம்மை இழுத்து செல்வது தான்.
இயல்பான காமெடிகள் காமெடி நடிகர்கள் இல்லை என்ற குறையை மூடிவிட்டது.
யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை கதைக்கு பக்க பலம்.
எதிர்பாராத கிளைமாக்ஸ் Interesting Segment.
பல்ப்ஸ்
ஹீரோ இன்னும் கொஞ்சம் எக்ஸ்பிரஷன்களை கூட்டியிருக்கலாம்.
பாடல்கள் மனதில் இடம் பெறுவது கொஞ்சம் கேள்வியாக தான் இருக்கிறது.
மொத்தத்தில் ராஜா ரங்குஸ்கி ஒரு புதிரான விளையாட்டு. தியேட்டரில் பாருங்கள் மக்களே...
No comments:
Post a Comment