உலகச் செய்திகள்


பொருளாதார ரீதியான வர்த்தக போரை தொடங்கியது அமெரிக்கா

தான்சானியாவில் படகு விபத்து பலியானோர் எண்ணிக்கை 207 ஆக உயர்வு

மாலைதீவு ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சியின் இப்ராகிம் முகமது வெற்றிபெற்றதாக அறிவிப்பு

பாலியல் தொல்லை கொடுத்த பிரபல நகைச்சுவை நடிகருக்கு 10 ஆண்டுகள் சிறை

இந்தோனேசியா சுனாமி : உயிரிழந்தோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

தென் பசுபிக் கடற் பிராந்தியத்தில் விமானம் வீழ்ந்து விபத்து!!!

இனி அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் ; இந்திய உயர் நீதிமன்றம் தீர்ப்பு

 “மீண்டும் சந்திப்போம்! அந்த நாள் வெகு தொலைவில் இல்லை”பொருளாதார ரீதியான வர்த்தக போரை தொடங்கியது அமெரிக்கா

25/09/2018 அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பால்  சீனா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்யப்படும் பொருட்கள் மீது விதிக்­கப்­பட்ட  புதிய சுற்று சுங்க வரி விதிப்­புகள் நேற்று திங்­கட்­கி­ழமை முதல் அமு­லுக்கு வந்­துள்­ளன.
சீனா­வுக்கும் அமெ­ரிக்­கா­வுக்­கு­மி­டை­யி­லான வர்த்­தகப் போர் ஆரம்­ப­மா­னது முதற்­கொண்டு விதிக்­கப்­பட்ட அதி கூடிய சுங்க வரி விதிப்­பாக இது உள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.
இதன்­பி­ர­காரம் 200  பில்­லியன் அமெ­ரிக்க  டொலர் பெறு­ம­தி­யான சீன உற்­பத்­திகள் மீது  புதிய சுங்­க­வ­ரிகள் விதிக்­கப்­பட்­டுள்­ளன.
சீனாவால் நீதி­யற்ற முறையில் வர்த்­தக  செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக குற்­றஞ்­சாட்­டியே  அமெ­ரிக்கா மேற்­படி சுங்க வரி­களை விதித்­துள்­ளது. இந்­நி­லையில் சீனா பதி­லடி நட­வ­டிக்­கை­யாக 60 பில்­லியன் டொலர் பெறு­ம­தி­யான அமெ­ரிக்கப் பொருட்கள் மீது சுங்க வரிகளை விதித்­துள்­ளது.
பொரு­ளா­தார வர­லாற்­றி­லேயே மிகப் பெரிய  வர்த்­தகப் போரை அமெ­ரிக்கா முன்­னெ­டுத்­துள்­ள­தாக  சீனா குற்­றஞ்­சாட்­டு­கி­றது. 
இந்­நி­லையில் சீனா­வா­னது அமெரிக்காவுடன் மேற்கொண்டு வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதை இரத்துச்செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நன்றி வீரகேசரி 
தான்சானியாவில் படகு விபத்து பலியானோர் எண்ணிக்கை 207 ஆக உயர்வு

23/09/2018 தான்சானியா நாட்டில் விக்டோரியா ஏரியில் பயணித்த படகு நீரில் மூழ்கி  விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 207 ஆக உயர்ந்துள்ளது. 
ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் விக்டோரியா ஏரியில் சென்ற சொகுசு படகு ஒன்று உகாரா தீவு அருகே நீரில் மூழ்கியது இந்நிலையில் தகவல் அறிந்தது மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர்.
அதற்குள் படகு முழுவதும் நீரில் மூழ்கியது. இந்த விபத்தில் பலர் பலியாகினர். தற்போது பலி எண்ணிக்கை 207 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே உயிருடன் இருப்பவர்களை மீட்கும் பணியில் 4 நீச்சல் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
அவர்களில் இரவரை மட்டும் உயிருடன் மீட்டுள்ளனர். படகில் 200 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். ஆனால் 300-க்கும் மேற்பட்டோர் ஏற்றப்பட்டனர். இதனால் எடை அதிகரித்து பாரம் தாங்காமல் படகு ஏரியில் மூழ்கியதாக உயிருடன் மீட்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
படகு மூழ்கி விபத்துக்கு காரணமாணவர்களை கைது செய்ய தான்சானியா நாட்டின் ஜனாதிபதி ஜான் மகுபுலி உத்தரவிட்டுள்ளார். இன்னும் பலர் மீட்கப்படாமல் உள்ளதால். அவர்களை மீட்கும் பணி இடம்பெருகிறது.  நன்றி வீரகேசரி 


மாலைதீவு ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சியின் இப்ராகிம் முகமது வெற்றிபெற்றதாக அறிவிப்பு

24/09/2018 மாலைதீவில் நேற்று இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் 58.3 சதவிகித வாக்குகளைப் பெற்று எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை காலை 8 மணிக்கு மாலைதீவு ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆரம்பமாகியது. இந்நிலையில் மாலை வாக்குப்பதிவு முடிந்த பின்னர் 92 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. அதில், 58.3 சதவிகித வாக்குகள் பெற்று எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், மாலைதீவு ஜனநாயகக் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக வீதிகளில் மாலைதீவின் தேசிய கொடியை அசைத்து ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி மகிழ்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 
எனினும், தேர்தல் முடிவு குறித்த உத்தியோகபூர்வமான அறிவிப்பு ஒரு வார காலத்திற்கு பிறகு தான் அறிவிக்கப்படும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
தேர்தல் முடிவுகளை எதிர்க்கும் கட்சிகள் இந்த ஒரு வார காலத்திற்குள் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யமுடியுமெனவும் அந்நாட்டு தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
ஆனால், தேர்தல் ஆணையத்தின் இந்த கால அவகாசம் முறைகேடுகளுக்கு வழி வகுக்கும் என வெற்றி பெற்ற எதிர்கட்சி அச்சம் தெரிவித்துள்ளது.
ஆயிரத்து 192 குட்டித்தீவுகளை கொண்ட மாலைதீவில் சமீப காலமாக அரசியல் ஸ்திரமற்ற சூழல் உள்ளது. அங்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் உள்ளிட்ட 9 அரசியல் தலைவர்களை விடுதலை செய்ய அந்த நாட்டின் உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டது.  
ஆனால் இந்த தீர்ப்பை தற்போதைய ஜனாதிபதி யாமீன் அப்துல் கயூம் ஏற்கவில்லை. இது அங்கு அரசியல் குழப்பங்களுக்கு காரணமாக அமைந்தது. ஜனாதிபதியின் நிலைப்பாட்டுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் கைது செய்யப்பட்டனர். அவசரகால நிலை அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தின் ஏனைய நீதிபதிகள் முந்தைய தீர்ப்பை திரும்பப்பெற்றனர்.
இந்த நிலையில் அங்கு நேற்றைய தினம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டது.  இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி அப்துல் கயூம், மாலைதீவு முன்னேற்ற கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட்டார். 
அவரை எதிர்த்து இலங்கையில் வசித்து வரும் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத், மாலைதீவு ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட விரும்பினார். ஆனால் பின்னர் அவர் போட்டியில் இருந்து விலகியதையடுத்து அவரது கட்சி சார்பில் இப்ராகிம் முகமது போடியிட்ட நிலையில் தற்போது வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 

பாலியல் தொல்லை கொடுத்த பிரபல நகைச்சுவை நடிகருக்கு 10 ஆண்டுகள் சிறை

26/09/2018 பெண்ணிடம் தகாத முறையில் நடந்த குற்றச்சாட்டின் பேரில் 81 வயதான அமெரிக்காவின் பிரபல நகைச்சுவை நடிகருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பென்சில் வேனியாவை சேர்ந்த நகைச்சுவை நடிகர் பில்கோஸ்பை மது போதையில் கடந்த 2004ஆம் ஆண்டு தனது குடியிருப்பு பகுதியில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் என முறைப்பாடு செய்யப்பட்டு அவருக்கெதிராக வழக்கு தொடரப்பட்டது.
குறித்த வழக்கில் பில்கோஸ்பை குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து 3 தொடக்கம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நன்றி வீரகேசரி இந்தோனேசியா சுனாமி : உயிரிழந்தோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

29/09/2018 இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கியதில் பலி எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியாவில் 7.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி தாக்கியது. இந்தோனேசியாவின் பலு உள்ளிட்ட பகுதிகள் சுனாமி தாக்குதலுக்கு உள்ளாகின. இந்த சுனாமியால் இதுவரை 400 பேர் பலியாகியுள்ளனர்.
இவ் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்த நிலையிலும் பலர் மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  நன்றி  வீரகேசரி 


தென் பசுபிக் கடற் பிராந்தியத்தில் விமானம் வீழ்ந்து விபத்து!!!

28/09/2018 தென் பசுபிக் கடற்பிராந்தியத்தில் அமைந்துள்ள மைக்ரோனேஷியாவில் எயார் நியுகினி விமானம் இன்று அதிகாலை தனது ஓடு பாதையை விட்டு விலகி கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
எயார் நியுகினி நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 என்ற விமானமே இவ்வாறு ஓடு பாதையை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
கடலில் வீழ்ந்த விமானத்திலிருந்த பயணிகள் மற்றும் விமானிகள் மற்றும் ஊழியர்கள் என அணைவரும் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்டவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதிலும் யாருக்கும் எது வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என்று அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவ இடத்திற்கு பப்புவா நியுகினியா விபத்து விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி 


இனி அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் ; இந்திய உயர் நீதிமன்றம் தீர்ப்பு

28/09/2018 இந்தியாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உயர் நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. 
கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் நுழைய தடை உள்ளது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பல வழக்குகள் ஒன்றாக்கப்பட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எப் நாரிமன், கன்வில்கர், சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய குழு விசாரித்து வந்தது.
கேரள மாநில அரசு, தேவஸ்தான குழு, மத்திய அரசு, மத அமைப்புகள் இந்த வழக்கில் தனித்தனியாக பிரமானப்பத்திரங்கள் தாக்கல் செய்துள்ளன. ஒரு மாநிலத்தின் பாரம்பரியம், மதரீதியான நம்பிக்கைகள் போன்றவற்றோடு அரசமைப்பு சட்டப்படி ஒரு பெண்ணின் உரிமையை தீர்மானிக்கும் இந்த வழக்கு மிகவும் சவாலானதாக கருதப்பட்டது.
இந்நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது, தலைமை நீதிபதி உள்ளிட்ட 4 நீதிபதிகள் ஒத்த கருத்தையும், நீதிபதி இந்து மல்கோத்ரா மட்டும் மாற்று கருத்தை கொண்டிருந்தார். 
தலைமை நீதிபதி தனது தீர்ப்பில், “நீண்டகாலமாக பெண்கள் மீது பாகுபாடு காட்டப்படுகிறது. பக்தி என்பது பாலின பாகுபாட்டுக்கு அப்பாற்பட்டது. பெண்கள் என்பவர் ஆண்களுக்கு சமமானவர்களே. பெண்களை தெய்வமாக வணங்கும் நாட்டில் பெண்கள் பலவீனமானர்கள் அல்ல” என குறிப்பிட்டார்.
இதனை அடுத்து, அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லலாம் என 4 நீதிபதிகளும் ஒரே தீர்ப்பாக வழங்கினர்.  நன்றி வீரகேசரி 


 “மீண்டும் சந்திப்போம்! அந்த நாள் வெகு தொலைவில் இல்லை”

26/09/2018 வட கொரிய அதிபர் கிம் ஜோங் - உன்னை இரண்டாவது முறையாகவும் சந்திக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
73ஆவது ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா வந்திருந்த தென் கொரிய அதிபர் மூன் - ஜே இன்னுடன் பேச்சுவார்த்தை நடாத்தியதன் பின்னரே ட்ரம்ப் இவ்வறிவிப்பை வெளியிட்டார்.
சந்திப்பு தொடர்பில் ட்ரம்ப்
“எங்களது இரண்டாவது சந்திப்பிற்கான இடம் நேரம் ஆகியவை குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம்.
இது தொடர்பான தகவல் விரைவில் அறிவிக்கப்படும்.
அணு ஆயுதங்களை கைவிடும் நடவடிக்கைகளில் மெத்தனம் காட்டினாலும் குறித்த விடயம் தொடர்பான விவாதங்களுக்கு மிக அருமையான மனிதராக கிம் - ஜோங் உன் தயாராகவுள்ளார். இவ் விடயம் பாராட்டத்தக்கது.” என்றார  நன்றி வீரகேசரி 


No comments: