நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மனின் வருடாந்த திருவிழா 14 06 2018

.

வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மனின்  வருடாந்த பெருந்திருவிழா  14.06.2018  வியாழன்  அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
 நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மனின் கொடியேற்றத்தினை கண்டு மகிழ ஆயிரக்கணக்கான பக்தர்கள்- இலங்கையின் பல பாகங்களிலிருந்தும்-புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்தும்  ஆலையத்திற்கு வந்திருந்ததாக தெரிய வருகின்றது. 
பக்தர்களின் நலன்கருதி-  யாழ்.பஸ் நிலையத்தில் இருந்து நயினாதீவுக்கு விசேட போக்குவரத்துச் சேவையும் தனியார்  பஸ் சேவையும் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்ந்து 15 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன.
ஆலய மஹோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும்- 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு சப்பறத் திருவிழாவும், 27 ஆம் திகதி புதன்கிழமை காலை இரதோற்சவமும் மறுதினம் வியாழக்கிழமை காலை தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளன.
No comments: