'கிம் மிகவும் திறமையானவர்': ட்ரம்ப் புகழாரம்
எரிமலை வெடிப்பில் தன் குடும்பத்தைச் சேர்ந்த 50 பேரை இழந்த பெண்
முன்னாள் ஜனாதிபதிக்கு 19 மாத விளக்கமறியல்
ஜோர்ஜியா நாட்டின் பிரதமர் பதவி விலகினார்
வட கொரியா மீதான தடைகள் தொடரும்: அமெரிக்கா
'கிம் மிகவும் திறமையானவர்': ட்ரம்ப் புகழாரம்
13/06/2018 வட கொரிய தலைவர் கிம் யொங் – உன் மிகவும் திறமையான ஒருவர் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரின் செந்தோஸா தீவில் வட கொரியத் தலைவருடன் உடன்படிக்கை ஆவணமொன்றில் கைச்சாத்திட்டதையடுத்து கருத்து வெளியிடுகையிலேயே ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
"அவர் உண்மையிலேயே மிகவும் திறமையானவர். 26 வயதில் அவர் ஏற்றுக் கொண்டதையொத்த நிலைமையை (வட கொரியாவின் தலைவர் பதவி நிலையை) ஏற்றுக் கொண்டு இவ்வாறு மிகவும் கடுமையாக செயற்படுத்துவது வேறு எவருக்கும் சாத்தியமில்லை" எனத் தெரிவித்தார்.
மேலும், எனினும் அவர் இனிமையானவர் என நான் கூறமாட்டேன் என்று நகைச்சுவையாகவும் குறிப்பிட்டார். நன்றி வீரகேசரி
எரிமலை வெடிப்பில் தன் குடும்பத்தைச் சேர்ந்த 50 பேரை இழந்த பெண்
13/06/2018 குவாட்டமாலாவின் ப்யூகோ எரிமலை கடந்த வாரம் வெடித்துச் சிதறியதில் பெண் ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்த 50 பேர் காணாமல் போயுள்ளனர்.
குவாட்டமாலாவில் உள்ள ப்யூகோ எரிமலை கடந்த வாரம் வெடித்ததில். 110 பேர் உயிரிழந்ததோடு. 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
இந்நிலையில் எரிமலை சாம்பலில் சிக்கி யூஃபிமியா கார்சியா என்பவரின் உறவினர்கள் 50 பேர் காணாமல் போயுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
50 வயதான கார்சியாவுடன் 9 பேர் பிறந்துள்ளனர். மூன்று தலைமுறை கண்ட கார்சியாவின் 75 வயது தாயும் மற்றும் பேரப்பிள்ளைகள் என 50 பேரை காணவில்லை என கார்சியா கவலையுடன் கூறுகியுள்ளார்..
நன்றி வீரகேசரி
முன்னாள் ஜனாதிபதிக்கு 19 மாத விளக்கமறியல்
14/06/2018 விசாரணையின் பொழுது குறித்த விசாரணை அதிகாரிகளிடம் தனது கையடக்க தொலைபேசியை கையளிக்க மறுத்த குற்றதிற்காக மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி மம்மூன் அப்துல் கயூமுக்கு 19 மாத சிறை தண்டனை விதித்து மாலைத்தீவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது
மாலைத்தீவு நாட்டு முன்னாள் ஜனாதிபதி மம்மூன் அப்துல் கயூம். 1978-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை சர்வாதிகார ஆட்சி நடத்தியவர்
அவருடைய சகோதரரும், தற்போதைய ஜனதிபதியான யாமீன் அப்துல் கயூமின் ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக, கடந்த பெப்ரவரி மாதம் கயூம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், விசாரணை அதிகாரிகளிடம் தனது கையடக்க தொலைபேசியை கையளிக்க மறுத்த குற்றத்துக்காக மம்மூன் அப்துல் கயூமுக்கு 19 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவருடன் கைது செய்யப்பட்ட தலைமை நீதிபதி அப்துல்லா சயீதுக்கும் அதே குற்றத்துக்காக 19 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.. நன்றி வீரகேசரி
ஜோர்ஜியா நாட்டின் பிரதமர் பதவி விலகினார்
14/06/2018 ஜோர்ஜியா நாட்டின் பிரதமர் ஜோர்ஜி க்விரிகாஷ்விலி தான் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அரசாங்கத்துக்கு எதிராக அந்த நாட்டின் தலைநகரில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அவர் தனது பதவி விலகளை அறிவித்துள்ளார்.
அந் நாட்டில் இரு இளைஞர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொல்லப்பட்டதையடுத்து, அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஆரம்பித்துள்ளன. இந்த சம்பவத்துக்கு அரசாங்கம் பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கூறி வந்த நிலையில் நேற்று புதன்கிழமை அவர் பதவி விலகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நன்றி வீரகேசரி
வட கொரியா மீதான தடைகள் தொடரும்: அமெரிக்கா
14/06/2018 வட கொரியா தன்னிடமுள்ள அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடாமல் அந்நாடு மீதான தடைகள் விலக்கிக் கொள்ளப்படமாட்டாது என அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பே தெரிவித்துள்ளார்.
தென் கொரியாவில் ஊடகவியளாலர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்
அணு திட்டங்களை கைவிட வட கொரியா ஒப்புக் கொண்டுள்ளது கிம் ஜாங்-உன் அணு ஆயுதங்களை கைவிடுவதற்கான அவசரத்தை புரிந்து கொள்வார் என்று நம்புகிரேன். 2020ஆம் ஆண்டிற்குள் வட கொரியா மிக பாரியளவில் ராணுவ நடவடிக்கைகளையும், ஆயுதங்களையும் குறைத்துக் கொள்ளும் என்று அமெரிக்கா நம்புவதாக மைக் தெரிவித்துள்ளார்
கொரிய தீபகற்கத்தை அணு ஆயுதமற்ற பகுதியாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வட கொரியா ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், எப்போது மற்றும் எவ்வாறு அணு ஆயுதங்கள் கைவிடப்படும் என்ற எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை என விமர்சனம் எழுந்துள்ளது.
"அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்குள் அணுஆயுதங்களை கைவிடும் இலக்கை அடைந்து விடலாம்
மேலும், அணு ஆயுத திட்டங்களை தகர்ப்பதை, உறுதிபடுத்த வேண்டிய அவசியத்தை வட கொரியா புரிந்து கொண்டுள்ளது
உறுதிப்படுத்தப்படும் விவகாரங்கள் குறித்து ஆவணங்களில் ஏன் ஏதும் குறிப்பிடப்பவில்லை என்று ஊடகவியளாலர்களின் கேள்விக்கு பதிலளித்த மைக் பாம்பேயோ, அக்கேள்விகள் "அபத்தமாகவும்", "அவமதிக்கும் வகையிலும்" இருப்பதாக கூறினார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment