இலங்கை செய்திகள்


யாழ். மாநகர மேயரானார் ஆனோல்ட்

இலங்கை இராணுவத்தில் யாழ். இளைஞர், யுவதிகள்

8,325 பேர் ஆறாம் திகதி பதவியேற்பு

வவுனியாவில் இராணுவத்தினரின் நல்லிணக்க பொங்கல்!!!

வர்த்தகர் படு கொலை வழக்கில் வாஸ் குனவர்தனவுக்கு 5 வருட கடூழிய சிறை!!!

யாழ். மாநகர மேயரானார் ஆனோல்ட்


14/02/2018 யாழ்ப்பாணம் மாநகரசபை மேயராக  இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், யாழ். மாநகர சபையின் பிரதி மேயராக ஈசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று முற்பகல் 11 மணியளவில் மார்ட்டீன் வீ தியில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தி ல் நடைபெற்ற தமிழ்தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்கிடையிலான சந்திப்பின்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  நன்றி வீரகேசரி 


இலங்கை இராணுவத்தில் யாழ். இளைஞர், யுவதிகள்


18/02/2018 யாழ். குடாநாட்டைச் சேர்ந்த வேலையற்ற இளைஞர், யுவதியர் ஐம்பது பேர் இலங்கை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்நிகழ்வு கடந்த பதினைந்தாம் திகதி யாழ். இராணுவ தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்த ஐம்பது பேரில். முன்னாள் போராளிகளும் அடங்குவர்.
சேர்த்துக்கொள்ளப்பட்ட ஐம்பது பேரும் இராணுவப் பணி அல்லாத பணிகளில் ஈடுபடுத்தப்படுவர் எனத் தெரியவருகிறது.
இந்த ஐம்பது பேருக்கும் மாதமொன்றுக்கு தலா நாற்பதாயிரம் ரூபா சம்பளத்துடன், உணவு, போக்குவரத்து, தங்குமிட, மருத்துவ வசதிகளும் செய்து தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், மருத்துவ வசதிகள் மேற்படி இளைஞர், யுவதிகளின் குடும்பத்தினருக்கும் வழங்கப்படவுள்ளது.
இவை தவிர, இராணுவத்தினருக்கு வழங்கப்படும் ஓய்வூதியமும் இவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இவர்கள், பலாலியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு இலட்சம் தென்னை மரங்களை வளர்க்கும் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
எவ்வாறெனினும் இலங்கை இராணுவத்தில் முன்னாள் போராளிகள் உட்பட தமிழ் இளைஞர், யுவதிகள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதன் மூலம் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் மேம்படுத்த முடியும் என நம்பப்படுகிறது.  நன்றி வீரகேசரி 
8,325 பேர் ஆறாம் திகதி பதவியேற்பு

14/02/2018 நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தெரிவாகியுள்ள 8,325 உறுப்பினர்களும் தத்தமது பதவிகளை எதிர்வரும் ஆறாம் திகதி (மார்ச் 6) பொறுப்பேற்கவுள்ளனர்.
இவர்களது பதவியேற்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கான உத்தரவு நாளை அரச அச்சகக் கூட்டுத் தாபனத்திடம் கையளிக்கப்படும் எனத் தெரியவருகிறது.
இதேவேளை, ஒவ்வொரு கட்சியில் இருந்தும் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டுள்ள பெண் உறுப்பினர்கள் உட்பட அனைத்து அங்கத்தினர்களினது எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழு கையளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தெரிவுசெய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்களை ஒவ்வொரு கட்சியினதும் பொதுச் செயலாளர்களிடம் கோரப்பட்டுள்ளன.
அவை கிடைக்கப்பெற்றதும் குறித்த பதவிகளுக்கான பெயர்களுடனான வர்த்தமானி பிரசுரத்துக்கான ஒழுங்குகளை தேர்தல் ஆணைக்குழு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 

வவுனியாவில் இராணுவத்தினரின் நல்லிணக்க பொங்கல்!!!

13/02/2018 இந்துக்களின் விசேட தினமான சிவராத்திரியை முன்னிட்டு வன்னி படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இராணுவத்தினரால் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் இன்று காலை விசேட பொங்கல் இடம்பெற்று பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.
இப் பூஜை வழிப்பாட்டின் போது வன்னிப் படைத் தலைமையகத்தைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகள், இராணுவத்தினர் எனப் பலரும் சீருடையுடன் கலந்து கொண்டு நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.    நன்றி வீரகேசரி 
வர்த்தகர் படு கொலை வழக்கில் வாஸ் குனவர்தனவுக்கு 5 வருட கடூழிய சிறை!!!

12/03/2018 வர்த்தகர் மொஹம்மட் ஷியாம் படு கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குனவர்தனவுக்கு நேற்று கொழும்பு மேல் நீதிமன்றம் 5 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஷியாம் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியான அப்போதைய உதவி பொலிஸ் அத்தியட்சரும் தற்போதைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருமான ஷானி அபேசேகரவை அசுறுத்தியமை தொடர்பில்  குற்றவாளியாக கண்ட நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி 5 வருட கடூழிய சிறைக்கு மேலதிகமாக 25000 ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.  நன்றி வீரகேசரி 


No comments: