அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர், பெருமதிப்புக்குரிய திரு கந்தையா நீலகண்டன் அவர்கள இறையடி எய்திய செய்தி சற்று முன்னர் அறிந்து பேரதிர்ச்சியும், கவலையும் கொள்கிறேன்.

இந்து மாமன்றம் செய்த பல்வேறு அறப்பணிகளுக்கு அன்னாரின் சிறப்பான வழி நடத்தல் மிக முக்கியமான காரணியாகின்றது. அண்மையில் மன்னாரில் இந்து ஆலயங்களுக்கு எழும் அச்சுறுத்தல்களைத் தக்க் நேரத்தில் கவன ஈர்ப்பாகக் கொண்டு வந்தார்.
அவரின் ஒவ்வொரு சிட்னி விஜயத்திலும் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது எனக்கு. நீண்டதொரு வானொலிப் பேட்டி வழியாக இந்து மாமன்றம் முன்னெடுக்கும் விரிவான பணிகளைச் சொல்லி வியப்பில் ஆழ்த்தியவர்.
ஐயனே உங்கள் இழப்பில் வேதனையுறுகிறேன் 
உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் 
No comments:
Post a Comment